Saturday, April 10, 2010

ஜாய்ஸ் ஆஃப் டாய்ஸ்.

இன்று உற்சாகமான மன நிலையில் கணினிக்கு உயிர் கொடுத்து எழுத உட்கார்கையில் குடி பற்றி வந்த மெயில் ஒன்று என்னை மிரட்டிவிட்டது.அப்புறம் ஆசுவாசித்து மெயில் பக்கம் போகையில் பெங்களூர் ஊஞ்சல் வீட்டு விஜயனின் பின் ஊட்டம் வந்திருந்தது. முதலில் மெயில் பக்கம் போகாமல் பிளாக் பக்கம் போயிருக்கலாம் என்று தோன்றியது.

தினம் எத்தனை புனர்ஜன்மம் எடுக்குமோ இந்த ஜென்மம்.பெங்களூரில் விஜயன் அவர்களை சந்தித்த காலத்தில் சிலபல புத்தகங்கள் குறுந்தகடுகளைப் பெற்றும் உரையாடல் மூலமும் அறிவை விஸ்தரித்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.கடந்து வந்தபின் கழிவிரக்கம் கொள்வது சிந்தனைப் பண்புகளில் ஒன்று. விஜயன், ஸ்ரீதரின் புனர் ஜன்மம் பார்த்துவிட்டு அதன் வசனங்கள் பற்றி பேசலாமே என்கிறார். இனி பழைய படங்களுக்கு தியேட்டர் கிடைக்குமா எனத் தெரியவில்லை. குறுந்தகடு கிடைத்தால் பார்த்துவிட வேண்டியதுதான்.

இன்று உண்மையில் எழுதப்போந்தது... வாழும் வத்தலக்குண்டுக்கு அருகிலுள்ள கோட்டைப்பட்டி காமாட்சி புரத்தில் திருவிழா சென்றது பற்றி.மகளுக்கு பொம்மை வாங்கிக்கொடுக்கும் இன்பத்தை அனுபவித்தேன்.அது எத்தகைய இன்பம் என்பதை பொருளாதாரத்தில் குறைந்த பெற்றோர் அறிவர். ஆனாலும் இன்பத்திலும் குறைச்சல் இல்லைதான். சின்ன வயதில் வாங்காது விட்ட அத்தனை பொம்மைகளும் நினைவுக்கு வந்தன எனக்கு.ஒரு பொம்மையேனும் குழந்தை வயதில் நான் வாங்கியதில்லை.
அப்போதே சுதந்திரமாக என்னை வளரவிட்டுவிட்டார் அப்பா.

இரண்டு பனை உயரத்துக்கு விசிறப்பட்டு அந்த வானத்தில் இருந்து வட்டங்கறங்கி ஒளியுடன் இரவில் இறங்கும் பொருள் இப்போதும் என்னை குழந்தையாக்குகிறது.நாங்கள் அதை வாங்கினோம். குழந்தைகள் உண்மையில் அதை வாங்குவது அதை வானத்தில் பறக்கடிக்கிற விற்பனையாளனின் திறமைக்காகவே அன்றி அந்தப் பொருளுக்காக அல்ல என்பதை அதை வாங்கிய கணத்தில் தெரிந்துகொண்டேன். இரண்டு முறை அதைநான் மகளுக்குக் கற்றுத்தர எத்தனித்ததில் அந்த ஒளி அம்பின் எதோ ஒரு பகுதிபட்டு இடது கையின் பாம்புவிரலின் நகம் பிறைநெளிவில் தசையைத் தொடும் பகுதியில் அடிபட்டு ரத்தம் கசிகிறது. ’சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்’ என்கிற வைரமுத்துவின் மகத்தான இனிய ஆசை மனதில் ஒலிக்கிறது.

தேர்க்கடைவீதி சுற்றி முடிக்கையில் நான் கண்டுபிடித்தது வேறு. கோயிலை நோக்கிச் செல்லும் பாதையில் விரிக்கப்பட்ட கடைகளில் விலைகள் அதிகமாக இருக்கின்றன.

19 comments:

நேசமித்ரன் said...

என்ன மொழி அண்ணே இது .

யப்பே ன்னு இருக்கு வாசிச்சு முடிக்கையில

//நாங்கள் வாங்கினோம்// அந்த வரியில் இடறிக் கிடக்கிறேன்

தகப்பனாயிருத்தல் குழந்தையுமாய் இருந்து.. வரம்தான் அண்ணே ...

ஜெகநாதன் said...

//குழந்தைகள் உண்மையில் அதை வாங்குவது அதை வானத்தில் பறக்கடிக்கிற விற்பனையாளனின் திறமைக்காகவே அன்றி அந்தப் பொருளுக்காக அல்ல//

Perfect..!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

சுப. முத்துக்குமார் said...

//ஒரு பொம்மையேனும் குழந்தை வயதில் நான் வாங்கியதில்லை.
அப்போதே சுதந்திரமாக என்னை வளரவிட்டுவிட்டார் அப்பா.//


மேலோட்டமாகப் பார்க்கும் போது ரொம்ப சாதாரணமாகவும் மறுபடியும் வாசித்துப் பார்க்கும் போது சிந்திக்கவும் வைத்த வரிகள். சூப்பரப்பு.

இளமுருகன் said...

திருவிழாவும் பொம்மையும் பிரிக்க முடியாதவை

இளமுருகன்
நைஜீரியா

கண்ணா.. said...

தமிழ் மண நட்சத்திர வாழ்த்துக்கள்

குலவுசனப்பிரியன் said...

இதுவரை நான் கண்டிராத நடை. வெகு அழகு
//ஒரு பொம்மையேனும் குழந்தை வயதில் நான் வாங்கியதில்லை.
அப்போதே சுதந்திரமாக என்னை வளரவிட்டுவிட்டார் அப்பா.//பள்ளிக்கூடம் போக மிதிவண்டிகூட வாங்கித் தரவில்லை என்று குறைசொல்வது உண்டு - சுதந்திரம்தான்.

//கோயிலை நோக்கிச் செல்லும் பாதையில் விரிக்கப்பட்ட கடைகளில் விலைகள் அதிகமாக இருக்கின்றன.// சன்னிதானத்தை நெருங்க நெருங்க விலை ஏறிக்கொண்டே போகிறது. நல்ல தரிசனம்.

Anonymous said...

தமிழ்மணம் நட்சத்திரம் வாழ்த்துகளையெல்லாம் அனுமதிக்கின்றீர்கள். ஆனால், புதிதாக நட்சத்திரவாரத்திலே பதிவுமட்டும் போடாதிருக்கிருக்கிறீர்களே :(

நர்சிம் said...

அண்ணே.. நட்சத்திர வாழ்த்துகள்.. ஆதிமங்கல விசேஷ பஸ்ஸ ஒரு பதிவா போடுங்க தலைவா..

தமிழ்நதி said...

தமிழ்மணம நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்...

ஷாஜகான் உங்களைப் பற்றி ஒரு ரயில் காமெடி சொல்வாரே... அதை எழுதுங்கள் தயவுசெய்து. அவர் சொல்லிக் கேட்கும் அனுபவத்திற்குக் கொஞ்சம் குறைவாகவே இருக்குமென நினைக்கிறேன். ஆனாலும் எழுதுங்கள். நன்றி.

ஜெகநாதன் said...

//உங்களைப் பற்றி ஒரு ரயில் காமெடி சொல்வாரே//
தமிழ்நதி...
ஜெனரல் கம்பார்ட்மண்டில் ஏறிவிட்டு, ​செயினைப் பிடித்து ரெயிலை நிறுத்துவிட்டு, ஏன் என்று கேட்டதற்கு
"கூட்டம் தாளலே.. இது ஜனநாயகப் படுகொலை" என்று சொல்லிவிட்டு ஸ்டேஷனில் உள்ள ஸ்டேஷனில் சிறைப்பட்டாரே அண்ணன்... அதையா சொல்றீங்க :))

ஜெகநாதன் said...

தமிழ்மண நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்...
எத்தனைப் பேரு கேக்கறாங்க?
வந்து எழுதுங்க..
இல்லீனா உங்க செல்போன் நம்பரை பின்னூட்டமா​போட ​வேண்டியதாயிடும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

தாமோதர் சந்துரு said...

கன்னிவாடி.சீரங்கராயன்.சிவகுமாருக்கு நட்சத்திர வாழ்த்துக்கள். இந்த வாரத்தில்
நிறைய பதிவுகளை எதிர்நோக்கி...
அன்புடன்
சந்துரு

Anonymous said...

நட்சத்திரப்பதிவரென்று பேர் போட்டிருக்கின்றார்கள். நீங்கள் எழுதாவிட்டாலும் கூட்டம் வரலாமென்பதாலே, இந்த மொக்கைஎரிதத்தினைச் சேர்த்திருக்கிறேன். வேண்டாதுவிட்டால், அடுத்தவாரம் வந்து பார்க்கும்போது விலக்கிவிடுங்கள்
------------
உலகத் தமிழ்ச்செம்மொழிமகாநாட்டையும் ஒன்பதாவது தமிழ் இணையமகாநாட்டினையும் புறக்கணிப்போம்
http://tinyurl.com/y853e5r
http://tinyurl.com/y3qreyn
-------------

^ சித் || sid ^ said...

:{

Anonymous said...

"உலகத் தமிழ்ச்செம்மொழிமகாநாட்டையும் ஒன்பதாவது தமிழ் இணையமகாநாட்டினையும் புறக்கணிப்போம்
http://tinyurl.com/y853e5r
http://tinyurl.com/y3qreyn
-------------"

வேசிமகன் பெயரிலிக்கு இதே பிழைப்பாய் போகிறது

மஞ்சூர் ராசா said...

நட்சத்திர வாழ்த்துகள் நண்பரே.

உங்களின் ஆரம்பகால சிறுகதைகளை விகடனில் வாசித்திருக்கிறேன்.

பல பிடித்திருந்தது. விரைவில் சந்திப்போம்.

Anonymous said...

வீடு வாடகைக்காக நெட்டிலும், ரோட்டிலும் சமீபமாய் அலைந்தேன். பல இடங்களில் பிராமின்ஸ் ஒன்லி என்று சொல்கிறார்கள். நெட்டிலும் அதே நிலைதான். இது மற்றவர்களைக் கேவலப்படுத்துவது போல இல்லையா? வேண்டுமானால் வெஜிடேரியன் ஒன்லி என்று போட்டுக் கொள்ளலாமே? அது தவறாகத் தெரிவதில்லை. இதைப் போல் மற்றவர்கள் போட்டால் என்ன ஆகும் என்று இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். பிராமணாள் ஓட்டல்களை தார் வைத்து அழித்த தி.க.வினர்தான் இதற்கும் ஏதாவது பண்ண வேண்டும். வெள்ளையர்கள் ஓட்டல்களில் "கறுப்பர்களும், நாய்களும் உள்ளே வரக் கூடாது" என்று எழுதி வைத்தார்களாம். அதைப் போல இது இருக்கிறது. திருமாவளவன் ஏன் இதைக் கண்டு கொள்ளவில்லை? இது ரொம்ப காலமாக நடக்கிறது. மற்ற எல்லோரும் பிராமினைத் தவிர என்று போட்டுக் கொண்டால் இவர்கள் கதி? சமூகத்தோடு ஏன் ஒத்துப் போக மறுக்கிறார்கள்? இது அவர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போடும் முயற்சி என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த சில காரணங்களால்தான் மீண்டும் ஜெயலலிதா வரவே கூடாது என்று தோன்றுகிறது. வந்தால் இவர்களைக கையில் பிடிக்க முடியாது.