Wednesday, April 7, 2010

விளக்கம்

ஆவீன மழை பொழிய - என்பது சிலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இது பழைய (சினிமாப்பாடல் அல்ல) பாட்டு ஒன்றின் வரி. இடையில் வருகிறதா முதலில் வருகிறதா என்பதை மறந்துவிட்டேன். மழை நாளில் மாடு ஈனுவதற்கு நின்று கொண்டிருக்க உழவன் குடிசை இடிமின்னலால் இடிய வெளியேறி நடக்கும் அவனை பாம்போ தேளோ கடித்துவிட... இப்படிப் பல துயரங்களை சந்த நயத்தில் வெளிப்படுத்தும் பாடல் இது. முழு வடிவம் தெரிந்தவர் பின் ஊட்டப்படுத்துக.இரவு நேர கிரிக்கெட் மேட்ச்சில் விளையாடுவோருக்கு விழுவதுபோல நாலா புறமும் அப்படித் துயர நிழல்கள் - மனித உயரத்தை மீறி. அங்காடித் தெரு படம் பார்த்ததும் கண்கலக்கம் தாளாமல் அந்த வரி நினைவு வந்துவிட்டது.அவ்வளவே...

7 comments:

கதிரவன் said...

ஆ ஈன, மழை பொழிய, இல்லம் வீழ
அகத்தடியாள் மெய் நோக, அடிமை சாக
மா ஈரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
தள்ளவொண்ணா விருந்து வரச், சர்ப்பம் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்டுக்
குருக்கள் வந்து தட்சணை கொடு
என்றாரே!

நன்றி : http://rammalar.wordpress.com/2009/12/11/இதுவும்-கடந்து-போகும்

நேசமித்ரன் said...

"ஆவீன மழை பொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய் நோவ அடிமை சாக
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்ற
தள்ளவொணா விருந்து வர.. சர்ப்பந் தீண்ட
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க
குருக்கள் வந்து தட்சணை கொடு என்றாரே.."

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் தொகுப்பில் மேற்கோள் காட்டியிருக்கும் ”பரிதாபனின்” கதை

selventhiran said...

இளம்பிறை மணிமாறன் ஏரியாவாச்சே இது...!

vinthaimanithan said...

தோழர்... இது விவேக சிந்தாமணியில் உள்ள பாடல்... விவேக சிந்தாமணியில் உள்ள எல்லா பாடல்களுமே இதேபோல எளிதில் மனதில் பதியும்படி, அருமையான கருத்துக்கோர்வையோடு இருக்கும்

Anonymous said...

வீடு வாடகைக்காக நெட்டிலும், ரோட்டிலும் சமீபமாய் அலைந்தேன். பல இடங்களில் பிராமின்ஸ் ஒன்லி என்று சொல்கிறார்கள். நெட்டிலும் அதே நிலைதான். இது மற்றவர்களைக் கேவலப்படுத்துவது போல இல்லையா? வேண்டுமானால் வெஜிடேரியன் ஒன்லி என்று போட்டுக் கொள்ளலாமே? அது தவறாகத் தெரிவதில்லை. இதைப் போல் மற்றவர்கள் போட்டால் என்ன ஆகும் என்று இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். பிராமணாள் ஓட்டல்களை தார் வைத்து அழித்த தி.க.வினர்தான் இதற்கும் ஏதாவது பண்ண வேண்டும். வெள்ளையர்கள் ஓட்டல்களில் "கறுப்பர்களும், நாய்களும் உள்ளே வரக் கூடாது" என்று எழுதி வைத்தார்களாம். அதைப் போல இது இருக்கிறது. திருமாவளவன் ஏன் இதைக் கண்டு கொள்ளவில்லை? இது ரொம்ப காலமாக நடக்கிறது. மற்ற எல்லோரும் பிராமினைத் தவிர என்று போட்டுக் கொண்டால் இவர்கள் கதி? சமூகத்தோடு ஏன் ஒத்துப் போக மறுக்கிறார்கள்? இது அவர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போடும் முயற்சி என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த சில காரணங்களால்தான் மீண்டும் ஜெயலலிதா வரவே கூடாது என்று தோன்றுகிறது. வந்தால் இவர்களைக கையில் பிடிக்க முடியாது.

Unknown said...

பிராமின்ஸ் ஒன்லி என்பது தெரிந்த நண்பருக்கு கித்தவர்கள் வீடுகளில் உள்ள கிறிஸ்தவர்கள் மட்டும் போர்டு மட்டும் என்பது கண்ணில் படவில்லையா? நானும் வாடகைவீட்டுக்காக அலைந்தபோது இதுபோல் அல்லல் பட்டுள்ளேன்.

Anonymous said...

முஸ்லீம்கள் வாழும் தெருவில் அட்லீஸ்ட் மாற்றார் நடமாட முடியுமா?