Tuesday, November 24, 2009

அப்யந்திரம்

பெங்களூரு வாழியான ஜகநாதனின் ’காலடி’ இணையதளத்தில் சுற்றிக்கொண்டிருந்தபோது சமீபத்தில் மூச்சா போவது(1) பற்றி எழுதியிருந்தார். கொஞ்சம் ஒருபக்க சிறுகதைகளுக்கான முடிப்பு முடிச்சோடு கட்டுரை நிறைவு பெற்றிருந்தது.நல்ல நகைச்சுவையான பதிவு.அவர் எட்டடி பாய்ந்தால் நாம் பதினாறடி பாய்வது என முடிவு செய்து நம்பர் 2 பற்றி எழுதுவது என முடிவுசெய்துவிட்டேன்.மலம் கழிப்பது பற்றியேதான்.ஆயி,இசா,பீ எனப் பலபேர்களால் மலம் அறியப்படுகிறது.

மலம் என்று எழுதுவது பாமரத்தனத்திலிருந்து புரிந்துகொள்ளக்கூடிய சொல் அல்ல.மலம் ,நிர்மலம் என அது சம்ஸ்கிருத ரேஞ்சில் இருக்கிறது, இந்தக் கட்டுரையின் தலைப்பு போல.நான் ஒட்டன் சத்திரத்தில் இருக்கும்போது -பொது மக்கள் மீதான -மருத்துவாய்வு ஒன்றிற்கு நண்பரொருத்தர் கேள்விப்பட்டி ஒன்று தயாரித்திருந்தார்.அதில் நாளில் எத்தனை முறை மலம் கழிப்பீர்கள் என ஒரு கேள்வி. இதை ஒரு நோயாளியிடம் கேட்டபோது ஏழெட்டு தடவை எனப் பதிலளித்தார். என்ன ஆச்சு உங்களுக்கு என அதிர்ச்சி தெரிவித்தபோது,’’நீங்க ஒன்னுக்கடிக்கிறதத்தான கேக்கறீங்க?’’ என்றார்.

பாரதத்தில் வெளியிடப்படும் கருத்தாய்வு முடிவுகள் மீது அன்றைக்கு முச்சூடும் நம்பிக்கை இழந்தேன். எலெக்சன் ரிசல்ட்டுகள் உட்பட.

கழித்தல் வகையைக் குறிப்பிடுவதற்கு ‘வெளியே போதல்,காட்டுக்குப் போதல்,கொல்லைக்குப் போதல்’ என பல இடக்கரடக்கல் உண்டு. அதனதன் இரட்டுற மொழியும் செயல்பாட்டில் அந்தந்த வட்டாரத்தில் அதற்கான நகைச்சுவைகளை அது உற்பத்திசெய்யும். எங்கள் பக்கத்து ஊர்க் கிழவர் ஒருவர் ஆயி போகும்போது காட்டில் ஏதோ தொடைப்பகுதியில் முள் குத்திவிட பாம்புதான் கடித்துவிட்டது என முடிவு செய்து மருத்துவரிடம் ஓடோடிச் சென்று குப்புறப்படுத்து ஆசனப் பகுதியைக் காட்டினார்.

மருத்துவர், ’போய் கால் கழுவிக்கிட்டு வாங்க!’ என மொழிந்தார்.அந்த அய்யன் பாத்ரூம் போய் காலை மட்டும் கழுவிக்கொண்டு வந்து திரும்ப குப்புறப்படுத்து ....யைக் காட்டினார்.மருத்துவர் அவரது மரணத்தையே விரும்பியிருக்கக் கூடும்.(இந்த இடத்தில் அவரது என்றது யாரைக் குறிக்கிறது)அப்புறம் இடக்கரடக்கலை டாக்டர் விட்டுவிட்டு பச்சையாகக் கட்டளையிட்டார்.

பாம்பு கடிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.அந்த இடத்தில் பாம்பு கடித்துச் சாகிறவர்கள் அபூர்வம்.ஏனெனில்...

4 comments:

- யெஸ்.பாலபாரதி said...

வலை உலகிற்கு வந்தமைக்கு வாங்க வாங்க என்று (தாமதமாக) வரவேற்பதில் மகிழ்கிறேன் சிவா..

//பாம்பு கடிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.அந்த இடத்தில் பாம்பு கடித்துச் சாகிறவர்கள் அபூர்வம்.ஏனெனில்... //

:)))))

Karthikeyan G said...

//மருத்துவர், ’போய் கால் கழுவிக்கிட்டு வாங்க!’ என மொழிந்தார்.அந்த அய்யன் பாத்ரூம் போய் காலை மட்டும் கழுவிக்கொண்டு வந்து திரும்ப குப்புறப்படுத்து ....யைக் காட்டினார்.///

:-)))))))))))))

நேசமித்ரன் said...

அண்ணே அருமை அண்ணே

ஒரே சிரிப்பு ஆபிஸ்ல

Nathanjagk said...

இடக்கரடக்கல்தான். ​ஏதோ ஒரு பேரைச் ​சொல்லிவிட்டாவது போய்விட்டு வந்துவிட வேண்டும். அப்புறம் அடக்கர்இடக்காகிவிடுவர்.

ஆதிமங்கலத்து விஷேங்களில் விட்டுப்​போன ஒரு பாம்புக்கடி சம்பவம்.. இது மூங்கிலில் மின்சாரம் எடுத்த விஞ்ஞானத்துக்கு ​கொஞ்சமும் சளைத்ததோ​இளைத்ததோ அல்ல!

உயிர்பயம் எல்லா தளைகளையும் அறுத்தெறிந்து விட்டு மனுஷனைக் குப்புறச்சாயக்கும் என்று புரிகிறது. சுகமாக இருந்துவிட்டு, ஓடைப்பக்கம் ​போய் 'ஓடுகிற தண்ணியில ஒரசிவிட்​டேன் சந்தனத்​தை..' பாடிக்​கொண்​டே சுத்தம் பண்ணிக்கிற ​​ஒரு கொங்கு ஆத்மாவுக்கு இது நெசமாலுமே ​சோதனைதான்!

'சின்ன' மருத்துவர் என்பதால் கழுவிட்டு வாங்க என்று நல்லவிதமாக நடந்துக்​கொண்டிருக்கிறார். பளபள மருத்துவமனைகளாக இருந்திருந்தால்.. அவர்களே கழுவி விட்டு வரிகள் உட்பட என்று பாம்பு நீளத்துக்கு பில் நீட்டியிருப்பார்கள்.

இவ்விடம் அப்படியே இந்தியன் சர்வே முடிவுகள் மேல் உச்சா விட்டுக்​கொள்கிறேன் - விர்ர்ர்ர்ர்ர்-ஸிப்ப்ப்ப்!

அய்யனைக் கடிக்காத பாம்பின் நீளம் தெரியவில்லை.. ஆனா, நீங்க பாய்ந்த தூரம் 16க்கும் அதிகம்தான்!

(முன்பு விண்நாயகன் இதழுக்காக ஒரு சிறுகதை ​ரெடி பண்ணியிருந்தீர்கள்... ​​கம்பம் பக்கம் உள்ள நவீனக் கட்டணக் கழிப்பிடம் - காசு கொடுத்து விட்டு - உள் சென்று பார்த்தால்.. ​பொட்டல் வெளி! - இதுக்கு எதுக்குடா காசு என்று திரும்பக் கேட்டால் - சண்டை..... நினைவிருக்கா?)