எரியும் உருகும்
ஒரு பொருள் எனது
இதயமாக இருக்கலாம்.
சுடரில் வடிவுறும் சலனம்
நின் முகமாகும் ஆதலின்
கற்பூரம் கமழ்கிறது
ஆராதனை முற்றத்தெங்கும்.
பற்றற்றுக் கிடந்தேன்
நேற்றது வரை.
நேற்றுப் போகிற போக்கில்
ஓரக்கண் பார்த்து
ஒரு பூப் பூத்தது.
(நன்றி;ஆனந்த விகடன்)
Monday, November 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
மிகப் பிடித்திருந்தது இந்தக் கவிதை.
ஹாய்!
ஓரக்கண் பார்த்து
ஒரு பூப் பூத்தது.
பூமியில் பூக்கும் ஆயிரமாயிரம் பூக்களில் நம் பூ எது?
அக்கா.. க்கா.. யக்கா... நான் பேசறது கேக்குதா??? அண்ணன் இங்க என்ன பண்ணறாருன்னா...... அலோவ்.. லோவ்... வ்..!
Post a Comment