Wednesday, May 5, 2010

கசடதபற...

www.narsim.in -சதம் கண்ட வலைத் தளத்தில் இன்று பல கட்டுரைகள் படித்து இன்புற்றேன்.
ஒரு கட்டுரையில் கவிஞர் வைரமுத்துவின் கவித்துவங்களைப் பாராட்டிவிட்டு அவருக்கு வாழ்த்த்துக்கள் தெரிவித்திருந்தார்.பெரிய மனது நர்சிம்முக்கு.

நிமிடத்துக்கு இதயம் துடிக்கும் எண்ணிக்கை,திருப்பதி உண்டியலில் விழும் காணிக்கை,தன் தணிக்கை இப்படி அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் வைரமுத்து நர்சிம்முடைய வாழ்க்கையும் கணக்கில் எடுத்துக்கொள்வார் என நம்புகிறேன்.

நான் எழுதும் செய்தி அதன் பின்னூட்டப் பகுதியில் வருவது.’மெல்லினங்கள் பாடுகண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும்’ என்ற ஆண் குரலையடுத்து வருகிற பெண்குரல் ஆண் சொல்லுக்குக் கட்டுப்பட்டு மெல்லினத்திலேயே பாடுவதாக ’கார்க்கி’ பதிந்துள்ளார்.
(இந்த கார்க்கி வைரமுத்துவின் வாரிசு அல்ல என நம்புகிறேன்.)

நல்ல குறும்புக்காரன் இந்த கார்க்கி - என ரமேஷ்வைத்யா சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனாலும் இத்தனை குறும்பை நான் எதிர்பார்க்கவில்லை.ஆண்குரலை அடுத்து...
’கங்கையே இங்கு வந்தது... சந்தமே ... தந்தது.அன்றில்கள் ரண்டு அட்டை போல்’ என பெண் குரல் பாடும் வல்லினம் தமிழில் ஒரு அசாதரணங்களில் ஒன்று.

எவ்வளவு வல்லினம் என்பதை அருமைத் தோழன் நேசமித்ரன் முழுப்பாடலையும் பின்னூட்டமாகப் போட்டு கார்க்கிக்கு மெய்ப்பிப்பார்.

அப்புறம்... என்னிக்கோ வருகிற அல்லது வந்துபோன பிறந்தநாளுக்காக நர்சிம்முக்கு வாழ்த்துக்கள்.கூவாகம் கட்டுரையில் வருகிற ‘ராஜ சுந்தர்ராஜன்’ அவரா இவரு. அல்லது இவரு வேறயா... கண்ணக் கட்டுதே!

6 comments:

நேசமித்ரன் said...

http://madhankarky.blogspot.com/

இது வைரமுத்துவின் புதல்வர் கார்க்கியின் வலைப்பூ

நேசமித்ரன் said...

//நர்சிம்முடைய வாழ்க்கையும் கணக்கில் எடுத்துக்கொள்வார் //

புரியல இந்த வாக்கியம் வாழ்த்தையும்னு இருக்கணுமோ ?

பாட்டு நண்பர்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்

இருந்தாலும் சொல்லிட்டீங்க

சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே
உதடு உருக அமுதம் பருக வருகவே வருகவே
சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே

அன்பு லைலா நீயே எந்தன் ஜீவ சொந்தம்
நீ சிரித்தால் பாலை எங்கும் பூ வசந்தம்
சம்மதம் என்ன சொல்லவா
மெளனமே சொல்லும் அல்லவா
இன்பமாய் என்னை மாற்றவா
உன்னையே வந்து ஊற்றவா
மது போதை வேண்டுமா
இதழ் போதை நல்லது
உன் பேரைச் சொல்கிறேன்
அதில் போதை உள்ளது
வருகவே வருகவே

சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே
உதடு உருக அமுதம் பருக வருகவே வருகவே
சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே

மஞ்சமே தமிழின் மன்றமே புதிய சந்தமே சிந்தினேன்
அன்பனே இளைய கம்பனே கவிதை நண்பனே நம்பினேன்
சொர்ணமே அரச அன்னமே இதழின் யுத்தமே முத்தமே
நெற்றியில் வியர்வை சொட்டுமே கைகள் பற்றுமே ஒற்றுமே
சோழக் குயில் பாடுகையில் சோலைக் குயில் ஓய்வெடுக்கும்
மெல்லினங்கள் பாடு கண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும்
சந்தமே இன்பம் தந்தது கங்கையே இங்கு வந்தது
தென்றலே இன்று நின்றது நன்றுதான் சந்தம் என்றது
கன்றுகள் ரெண்டு இன்று போல் என்றும் வென்று வாழ்கின்றது
வாழ்கவே வாழ்கவே

சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே
உதடு உருக அமுதம் பருக வருகவே வருகவே
சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே

அன்பு ரோமியோ இங்கே ஒரு காவல் இல்லை
தேன் குடித்தால் இங்கே ஒரு கேள்வி இல்லை
காதலின் கல்விச் சாலையில் கண்களே நல்ல தத்துவம்
பூவையின் மேனி அற்புதம் பூக்களால் செய்த புத்தகம்
நம் காதல் பாடவே சுரம் ஏழு போதுமா
நம் நேசம் பேசவே ஒரு பாஷை போதுமா
கவிமழை பொழியுமா?

பழைய கனவு உனக்கு எதற்கு கலையட்டுமே
நமது கதையை உலகம் முழுதும் புகழட்டுமே
கவிதை எழுத இளைய கவிகள்
எழுதவே எழுதவே
பழைய கனவு உனக்கு எதற்கு கலையட்டுமே
நமது கதையை உலகம் முழுதும் புகழட்டுமே

Nathanjagk said...

அன்பு சிவா,
நர்சிம்-இன் பிறந்த நாள்-கவிஞர் வைரமுத்து... பதிவைப் பார்த்தேன்.

நமக்கு வைரமுத்துவை இப்போது பிடிக்காமல் போவதற்கு பொங்கி வளர்ந்த அறிவும் மடை திறந்து பாயும் இலக்கிய பிரவாகமும் காரணமாக இருக்கலாம்.

பால்யம் எப்போதும் தார்ரோட்டில் டயர் உருட்டிவிட்டுக்​கொண்டிருக்கிறது. நாம் வளர்ந்து விட்டாலும், பால்யம் யாரோ ஒரு சிறுவனாக இன்னும் அப்படியே மாறாமல் இருக்கிறது.

வாழ்வின் பருவங்கள் அப்படித்தான். அலங்கியம் தண்ட்ஸ் மாமாதான் மு.​மேத்தா கவிதைகளை முதலில் அறிமுகப்படுத்தியது. அப்போது அதே ​போல கவிதைகள் படைக்க​வேண்டும் என்று முனைப்பு இருவருக்கும் இருந்தது. அது ஒரு பருவம். ஞாபங்களை மீட்டெடுக்கும்​போது ஆசுவாசமாக இருக்கிறது.

உங்களின் ஒரு பழைய காதலை, பழகிய தோழனை, நெருக்கமாயிருந்த மரத்தை, வீட்டு சன்னலுக்கு அப்பாலான தேசத்தை, மழை நனைத்த வீட்டுக்கூரையை, ஒரு பூனையின் தூக்கத்தை, காதலியின் நகங்களை என நம் ஆல்பத்தின் ஏதோவொரு புகைப்படம் ​வைரமுத்துவின் கவிதையால் எடுக்கப்பட்டதாய் இருக்கக்கூடும்.

என் பதின்ம வயதுகளில் வைரமுத்து என்னை எடுத்துக்​கொண்டார். வாங்கிப் படிக்காமல் நம்மிடம் சேரும் கவிதைகள் வரிசையில் வைரமுத்துவிற்கும் இடமுண்டு. அலங்கியம் மாமா அல்லது அரிக்காரன்வலசு பாலா அல்லது அப்பா எடுத்து வரும் நூலக நூல் இப்படி.

பிடித்த ஆளுமைகளை வரைந்து விடும் ​நோய் கொண்டிருந்தேன். கமல், பீட்டில்ஸ், அப்பாசி இண்டியன், இளையராஜா,​வைரமுத்து இப்படி (சமீபமாக வரைந்த ஆளுமையைப் பற்றிச் சொன்னால் நீங்கள் என்னை ​மொத்தக் கூடும்)

(...)

Nathanjagk said...

குமுதத்தில் ஒருமுறை பேராசிரியர் (கவிஞர்) பழமலய்,வைரமுத்து காசுக்காக தன் ஆன்மா​விற்றிவிட்டார் என்று விமர்சித்திருந்தார்.
அதற்கு வைரமுத்துவும் பதில் (கவிதைதான்) கோபமாக எழுதியிருந்தார்.

அப்போது வைரமுத்துவுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.
என்னுடைய டைரியில் பப்ளிஷ்ஷும் பண்ணினேன். அச்சமயங்களில் கல்லூரியில் நண்பர்களிடையே கவிஞன் என்றே அடையாளப்பட்டிருந்தேன். ​வைரமுத்து பாணியில் நான் எழுதும் கவிதைகளுக்கு ஒரு ரசிகக் கூட்டமும் உண்டு. கல்லூரி விடுமுறையில் ஊர் திரும்பிவிட்டாலும், கடிதங்கள் வாயிலாக கவிப்​போக்குவரத்து நடந்த காலக்கட்டம்.

அப்புறம் ஒருகணம் வைரமுத்து ​போரடித்து விட்டார். என் கவிதைகள் ​வைரமுத்து சாயல் ஒட்டிக்​கொண்டதாக அல்லது தாக்கம் நிறைந்ததாக உணர்ந்த சமயம் அது.

வைரமுத்துவையும் தாண்டிச்​சென்றால் நாம்தான் அறிவாளி.. அட்லீஸ்ட் கல்லூரி நண்பர்கள் மத்தியிலாவது வித்யாசப்பட்டுத் திரியலாம் என்ற தன்மதியில் ​வேகவேகமாக வைத்தீஸ்வரன், நா.விச்வநாதன், வ.ஐ.ச. ஜெயபாலன், பாலா, இன்குலாப், இந்திரன், யூமா.வாஸுகி, மனுஷ்யபுத்திரன் போன்றவர்களை வாசிக்க ஆரம்பித்தது.
இருந்தும் வைரமுத்துவின் வரிகள் இப்போது ​கேட்கும்​போதும் / வாசிக்கும்​போதும் நினைவுகளின் சாலையில் டயர் வண்டியை உருட்டிவிடுகிறது.

(...இன்னுமாடா????)

Nathanjagk said...

கோவை ஞானியை ஒருமுறைப் பார்..... ஸாரி, தொட்டிருக்கிறேன் - உங்களுடன் இருந்ததால். ஞானி அப்போது நம்மிடம் பேசியதா அல்லது கனவு இதழில் படித்ததா என்று ​தெரியவில்லை.

ஞானி ​வைரமுத்துவின் விஷயஞானம் பற்றி குறிப்பிட்ட நினைவுண்டு. ஒரு சர்ச்சைக்குள்ளான புத்தகம் பற்றி ஞானி வைரமுத்துவைக் கேட்ட​போது அதற்கு வைரமுத்து ​தெரியாது என்று ​சொன்னாராம். வைரமுத்து ​போன்ற ​தேடலும் உழைப்பும் கொண்ட மனிதர் அந்தப் புத்தகத்தை வாசிக்காமல் இருந்திருக்க முடியாது. வைரமுத்து நழுவுகிறார் என்பது ஞானியின் கருத்து.

இப்படி ஒரு வாசிப்பு - புள்ளிவிபரம், பூகோள அறிவு, வரலாற்றுக் குறிப்புகள் இப்படி இருந்தாலும் - கொண்ட வைரமுத்து எளிதாக தன் ஞானத்தை ​வேறுவகையான படைப்புகள் மூலம் ​மெய்ப்பிப்பது எளிது. அவரால் யாரையும் தாண்டிவிட முடியும் என்பது என் அனுமானம்.

ஆனால், தனக்கென ஒரு வாசகர்க் கூட்டம் இருப்பதால் அதே தரத்தில் ​தொடர்ந்து படைக்க ​வேண்டிய நிலைமையில் இருப்பதாகப் படுகிறது. அதுவே வைரமுத்துவிற்கான அடையாளமும் கூட.

நாம் வளர்ந்துவிட்டாலும் இன்னமும் காமிக்ஸ் புத்தகங்கள் பதிப்பிக்கப்படுகின்றன; நாம் வாங்காவிட்டாலும் அம்புலிமாமா, சிறுவர்மலர்கள் விற்கப்படுகின்றன; நாம் தின்னாவிட்டாலும் மிட்டாய்கள் ஜாடியிடப்படுகின்றன..

வைரமுத்து கவிதைகள் அப்படித்தான்!

Nathanjagk said...

பின்னூட்டத்தை அப்படியே என் பிளாக்குத் தள்ளிட்டுப்​போயி பதிவாக்கியிருக்கேன்.
http://jaganathank.blogspot.com/2010/05/blog-post.html

ஓகே-வாண்ணா?

எப்படியிருந்தாலும் எனக்குப் பின்னூட்டத்துக்குப் பதில்​போடத்​தெரியாதே என்று நீங்கள் முழிப்பது எனக்குக் கேட்கிறது. போச்சாது.. ஒரு இடுகையேப் ​போட்டுருங்க :))