Sunday, May 9, 2010

அம்மம்மா தனயன் என்று நம்பி...

இன்று, ’காகித ஓடம்’ பிளாக் பார்க்கப் போனபோது அன்னையர் தினம் என்கிற செய்தி தெரிந்தது. மாலைக் கருக்கல் வானில் வரும் வரை இந்தத் தகவல் தெரியாத நான் அமராவதி ஆற்றங்கரையில் ஆமையைக் கொன்ற பாவத்திலும் தாமிரபரணிக் கரையில் தவளையைக் கொன்ற பாவத்திலும் போவேனாக.அன்னையர் தினம் மகிழ்ச்சிக்குரிய ஒன்று. வாழ்த்து விரும்புவோர்க்கு என் வாழ்த்துக்கள்.

பெற்ற அன்னையை மகிழ்வித்திருக்கிறேனா... இனியாவது மகிழ்விக்க வித்து ஏதும் வைத்திருக்கின்றேனா என யோசிக்கிறேன். சான்றோன் எனக் கேட்டு மகிழ்வதற்குமுன் வேறு விதமான செய்திகள் அவளைச் சென்றடைந்துவிடுகின்றன. எழுத்து சரியில்லை என நினைக்கிறேன். அல்லது உலகத்தின் தகவல் தொடர்பு அமைப்பை மாற்றவேண்டும் என்பது அவாவாக இருக்கிறது.

அம்மாவைப் பற்றி நினைக்கும்போது எஸ்.எஸ். வாசன் தயாரித்த சிவாஜி நடித்த படம் நினைவுக்கு வருகிறது.(இரும்புக் கோட்டையோ என்னவோ பேர். இரும்பு இதயமாகக் கூட இருக்கலாம், அறிந்தவர் தவறு கூர்க). அதில் சிவாஜி அம்மாவிடம் பேசும் வசனம்.
சிவாஜி: அம்மா கடவுள் கொடுமைக் காரனம்மா...
மம்மி ; ஏப்பா அப்படி சொல்றே?
சிவாஜி: எனக்கு ஒரு நல்ல அம்மாவைக் கொடுத்த கடவுள் உனக்கு ஒரு நல்ல புள்ளயக் கொடுக்காமப் போயிட்டானே....
(வசனம் முடிந்தது)

என்ன செய்றதூஊஊஊஊ?..... சொல்லு எஞ் செல்லம்மா?

7 comments:

padma said...

உங்கள் அம்மா கொடுத்து வைத்தவர் தான் .அதிலென்ன சந்தேகம்?

நேசமித்ரன் said...

சான்றோன் எனக் கேட்கும்போது இன்ன பிற வெல்லாம் உச்சி ஆகாசத்தில் இருந்து உதிரும் சிறகாகும் வாய்ப்பாவது வைத்திருக்கிறீர்கள்

நாங்க எல்லாம் என்ன செய்ய ?

ஜெகநாதன் said...

அன்​னையர் தின வாழ்த்து!

சுப. முத்துக்குமார் said...

நீங்கள் எழுதிய குமார சம்பவத்தில் கூட உங்கள் அம்மா உங்களைச் சான்றோன் எனக் கேட்கவியலாததாக ஞாபகம். அட விடுங்க பாஸ், அம்மாக்கள் நம்ம முன்னாடி தான் நம்மளைத் திட்டுவாங்க, தெருவுக்குள்ள எல்லாம் எங்க சிவா அப்பிடியாக்கும் இப்பிடியாக்கும்-னு சான்றோனுக்கும் மேலாகப் புகழ் மாலை சூட்டிவிட்டிருப்பாங்க, கேட்டுப் பாருங்க அந்த மூணாவது வீட்டு சரசக்காவை.

தமிழ் உதயம் said...

எனக்கு ஒரு நல்ல அம்மாவைக் கொடுத்த கடவுள் உனக்கு ஒரு நல்ல புள்ளயக் கொடுக்காமப் போயிட்டானே....
(வசனம் முடிந்தது)


இது, ஸ்ரீதர் வசனத்துல் வந்த புனர்ஜென்மம்.

க. சீ. சிவக்குமார் said...

thanks தமிழ் உதயம். அதான பாத்தேன். நம்ம வசனத்தை நம்ம ஆளுதான எழுதியிருக்கமுடியும்.கிளர்ச்சியான தேங்க்ஸ் - சிவா

K.B.JANARTHANAN said...

அட, கச்சிதமாய் என்ன ஒரு நல்ல வசனம்! நன்றி! ( 'இரும்புத் திரை' படத்தில் அப்படி வந்த மாதிரி ஞாபகமில்லையேன்னு நினைச்சேன். 'புனர் ஜென்மம்' என்று இப்ப தெரிந்து கொண்டேன். 'உத்தம புத்திரனி'லும் ஸ்ரீதரின் நச் வசனங்கள் இப்பவும் புருவம் உயர்த்த வைக்கும்.) -- கே. பி. ஜனா