Sunday, May 30, 2010

வாழும் அருங்கலை.

இன்றைய நாளிதழ் செய்தி ஒன்று அதிர்ச்சியில் ஆழ்த்தியது(சுவாரசியம் அளித்தது என்று எழுதினால் என்னதான் ஆகும். ஆனாலும் உண்மை உங்களுக்குத் தெரியும்தானே) .ஆம்.ஆன்மீக வாதி ரவிசங்கர் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கிறார்.அவரது குரல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் பேசும்போது எனக்கு சச்சின் டெண்டுல்கர் பேசுவது நினைவுக்குவரும். ஒரு மாதிரியான வசீகரத்தன்மை கொண்ட குரல் இருவருக்கும்.

எனக்கு அவரது குரல் பிடிப்பது இருக்கட்டும். எல்லோருக்கும் எல்லோரையும் பிடிக்கவேண்டிய அவசியமில்லை. ஒருவருக்கு ‘போட்டு எறிய வேண்டிய’ அளவு கொலைவெறி போலும். துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.கூட்டத்தில் செருப்பெடுத்து எறிந்தால் சனியன் பிடித்தவன் தலையில் விழும் என்பார்கள். அவ்வண்ணம் குண்டு (அப்பாவி?) பக்தர் ஒருவர் மீது பட்டுவிட்டது. அமைதி காக்குமாறு பக்தர்களைக் கேட்டுக்கொள்கிற ரவிசங்கர் சுட்டவரையும் தன்னிடம் பாடம் கேட்கவருமாறு பேட்டியில் பணித்திருக்கிறார். கிளாசுக்கு துப்பாக்கியுடன் வரலாமா என்பது பற்றி குறிப்புகள் இல்லை.

ரவிசங்கர் துப்பாக்கிச் சூட்டில் தப்பித்தார் என்பது எனக்கு மகிழ்ச்சிச் செய்தி. வேட்டியைப் போர்த்திக்கொண்டு நடமாட நம் தலைமுறையிலும் ஆள் இருக்கிறதே என்கிற எண்ணத்தால் விளைந்த மகிழ்ச்சி. அதைவிடவும் ‘வாழும் கலை’ (தப்பிக்கும் கலை+தாக்குப் பிடிக்கும் கலை= வாழும் கலை) பயிற்சி நடத்த தகுதியானவர் என்பதை அன்னார் நிரூபித்துள்ளமை
மெத்த மகிழ்ச்சியில் மேலும் ஆழ்த்துகிறது.

8 comments:

Sivamjothi said...

if somebody suffer from

Stress,mind related issues, migraine, sinus, breath related issues ask them to attend SUDARSAN KRIYA.

He debates with many religious leader to overcome the differences.

His teachings will bring down your mind frequency and make you a joyful person. It is a serious problem for a terrorist organization. That could be a reason for this incident.

நேசமித்ரன் said...

//கிளாசுக்கு துப்பாக்கியுடன் வரலாமா என்பது பற்றி குறிப்புகள் இல்லை. //

சான்ஸே இல்ல :)))

ROTFL

selventhiran said...

சிரிச்சு முடியலை :))

சூர்யநிலா said...

ஒரு இட்லி கடையில் அவரு போட்டோவ மாட்டி பூ போட்டுருந்தாங்க. நான் ஒரு கேள்வி கேட்டேன். கடைக்காரர் எரிக்கர மாதிரி ஒரு பார்வை பார்த்தாரு

சூரியன்

Nathanjagk said...

வாழும் கலைஞருக்கு வைக்கப்பட்ட குறியல்லவாம் இது.
சம்பவம் அது நிகழும் இடத்தைப் பொறுத்தும் முக்கியத்துவம் பெறுகிறது எனலாம். துப்பாக்கியால் சுடப்பட்டவரோ தனக்கு எனிமீஸ் யாருமில்லை என்கிறார். ஞாயிறன்று விஜய் டிவி நீயா நானா-வில் நியூ ஏஜ் குரு பற்றித்தான் விவாதித்தார்கள் (பவா. செல்லத்துரை சிறப்பு விருந்தினர்)
கண் திருஷ்டியோ??

adhiran said...

is anybody there without suffer from //Stress,mind related issues, migraine, sinus, breath related issues //?!?!

siva,

un pathivuin naiyaandiyai vida intha pinnootam mikavum comedy!!!
yaar intha baalu sir?

ggautam said...

அருமை :)

ச.தமிழ்ச்செல்வன் said...

எனக்கு ரவிசங்கரை எப்போது டிவியில் பார்த்தாலும் அவருடைய வேட்டி அவிழ்ந்து விழுந்து விடுமோ என்கிற அச்சமே தூக்கலாக இருக்கும்.ஆனால் அது பற்றிய கவலை இல்லாமல் மனுசன் அத்தனை ஆயிரம் பேர் முன்னால் நடந்துகொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார்.