Thursday, May 6, 2010

வேர்கள் வேலியைக் கடக்கின்றன...

கவிஞர் வைரமுத்துவைப் பற்றிய - உண்மையில் அப்படி அல்ல அது நர்சிம் குறித்தானது- பதிவினைத் தொடர்ந்து அதற்கு பின்னூட்டப் பிரதிவினையில் ஜகன் பொழிந்து தள்ளிவிட்டான்.
எதிர்வினை என்பதை விட பிரதிவினை என்கிற வார்த்தை ‘மறுவினை’ என்பதை லேசாகத் தொடுகிறது. சில பகிர்வுகள் பின்னூட்டத்தால் கொஞ்சம் பலம் பெறுகின்றன. சில பின்னூட்டங்கள் அடிவேர் மறந்த ஆலின் தாங்கு விழுதுகளாக நின்று விடுகின்றன.
கண்ணதாசனை வைரமுத்து தாண்டவில்லையா பல இடங்களில் அவ்வண்ணமே இது.
வைரமுத்துவை கவிஞர் என்றால் சிலர் சண்டைக்கு வரக்கூடும். ஆனால் அவர்களும் சினிமாப் பாடல்களில் கவிதை உள்ளது என்பதை ஒப்புக்கொளவர்.

அவ்விதமாகக் கவிஞர் எனக்கொள்வோமெனில் வைரமுத்து கவிஞர் என்றும் கண்ணதாசன் துயருற்றவர்களின் கவிஞர் என்றும் சொல்வேன். வைரமுத்துவை ஸ்தாபிப்பதற்கு எனக்குள் சில தகவல்கள் உண்டு. ஒரு நூறு பக்க தெரிவிப்பிற்கு காலம் வரும்போது அது நடக்கும்.இல்லாவிட்டால் தமிழுக்கு ஒரு சுக்கும் நஷ்டமில்லை.

இங்கே ‘கவிப்பேரரசு’ அவரல்ல. கவிதையில் அவர் காட்டுகிற நுண்மானை வெளிப்பாடுகளில் காட்டுவதில்லை. அவரது தோலை உரித்துப்பார்க்க ஒரு சபை வெளிப்பாடு போதுமானது.

அப்புறம் ஒரு ரகசியம் சொல்கிறேன். இப்போது நான் தண்ணீர் பாய்ச்சுகிற சில செவ்வாழைகளை வைரமுத்துவின் தோட்டத்திலிருந்து ‘கண்டு’களாய் வாங்கிவந்தேன்.
(மக்களே இது கவித்துவ வெளிப்பாடு அல்ல உள்ப்பாடாக்கும்.)

வைரமுத்து தனது தோட்டத்துக்கு ‘கவிஞர் தோட்டம்’ என பெயரிட்டிருக்கிறார்.என்னுடைய தோட்டங்கள் எனது பெயரில் இருக்கப்போவதில்லை. நீங்கள் பினாமி அளவுக்கு யோசிக்கவேண்டியதில்லை. எனக்கு , வாழை வாழும் தோட்டத்துக்கு கருங்கல்லால் மதில்வைக்கத் தெரியாது.

2 comments:

Nathanjagk said...

உண்​மைதான். எழுத்துப் பஞ்சத்தில் பின்னூட்டத்​தை​யே பதிவாகக் கடத்தியுள்ளேன். இது பதங்கமாதலின் இன்​னொரு வ​கை.
​வைரமுத்து-வாசிப்பு ஒரு பருவம் என்ற அளவிலே​யே ​சொல்லிக் ​கொள்ள விருப்பம்.

அப்புறம், வா​ழைகள் வாழ்க வளர்க!

சுப. முத்துக்குமார் said...

வேலி கடந்து வேர்கள் பரப்பி வாழும் வாழைகளுக்கு மதில் வைக்காததால் நீங்கள் கவிப்பேரரசுவை தாண்டிவிட்டீர்கள். ங்கொக்காமக்கா கடைசி வரிகளுக்கு மாத்திரம் தனியா யோசிப்பீங்களோ??????