இன்று இந்திய வரலாற்றில் குறியீட்டளவில் முக்கியமான நாள்.(25.11.09)இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் போர் விமானம் ஒன்றில் ஏறி முப்பது நிமிடங்கள் பயணித்துவிட்டு வந்திருக்கிறார். விமானத்தின் பெயர் சுகாய் என்பது மாதிரி செய்தி நேரத்தில் காதில் விழுந்தது. இது போன்ற செய்திகளை செய்திகளோடு செய்தியாக இல்லாமல் சிறப்பு ஒளிபரப்பாகச் செய்யவேண்டும்.
இப்படியாக்கொண்ட விமானத்தில் பயணித்த முதலாவது பெண் ஜனாதிபதி அவர்தான் என்கிறார்கள். இதே ஐட்டத்தில் விஞ்ஞானியும் முன்னால் ஜனாதிபதியும் நடுவகிர் கூந்தல் நாயகனும் கனவுக் கண்ணனுமாகிய அப்துல்கலாமும் பயணித்திருக்கிறார்.
அப்துலின் தைரியத்திற்கு இரண்டு சான்றுகள் உள்ளன. ஒருமுறை எல்லையோர விமான நிலையத்தில் மின்சாரம் போய்விட தீப்பந்தங்களை பக்கவாட்டில் கொளுத்தி விமானத்தரைப்பாதை ஓட்டத்திற்குப்பின் மேலேறி தலைநகர் வந்து சேர்ந்தது. இதில் சாகசம் என்னவென்றால் விமானம் மேலேறியபின் ஏதேனும் பிரச்னை என்றால் அந்த விமான நிலையத்தில் தரை இறங்க முடியாது. வாழ்வு துச்சம், மரணம் துச்சம் என அவர்காட்டிய தைரியத்தின் அத்தாட்சி அது.
அதேபோல குஜராத் கலவரத்தின் போது ஜனாதிபதியாக இருந்து நாட்டை திறம்பட- ராஜினாமா செய்யாமல்- பாலித்தது.
பொதுவாக பாரதத்தின் ஜனாதிபதியும் பிரதமரும் வயது அளவில் ஏறக்குறைய ரெட்டைக் குழந்தைகள் தோற்றத்தில் இருப்பார்கள்.விதிவிலக்கு ராஜீவ் காந்தி- ஜெயில் சிங் இணை.
கலாமுக்கும் வாஜ்பேயிக்கும் கூட தசாப்த வித்யாசங்கள் உண்டு. இரண்டு பேருமே வெள்ளி முடி கொண்ட ஞானிகள் என்பதால் இருவருக்கும் ஆன பாகுபாடு வெளித்தெரியவில்லை.
அது நிற்க... இன்று பிரதீபா மூதாட்டியை ராணுவ உடைக் கோலத்தில் பார்த்தபோது மகிழ்ந்தேன்.புவியீர்ப்பை கொஞ்சம் கட்டுத்தாங்கும் உடை என்பது அதன் தொழில் நுட்பம்.ஆனால் முதன் முதலாக ஃபேண்ட் அணிந்து ஊடகக் காட்சி தந்த எங்கள் முதன் முதல் , பெண் ஜனாதிபதி.
அக ஊதாக்கதிர்களையும் தாண்டி என் மனமிகப் பறந்து அகமகிழ்கிறேன்.
Wednesday, November 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
தலைப்பை பார்த்தவுடன் மனதில் வந்தது, சூதாட்டத்தின் நடுவே காவலர் வர மதில் சுவர் தாண்டிய மாணிக்கத்தின் சாதனை தான் (முச்சந்தியாராகம்), அரசியலின் சூதையே அனாயாசமாய் வென்றவருக்கு இது ஒருபொருட்டேயல்ல
ரப்பர் ஸ்டாம்ப் பறந்தது சூட் அணிந்து
விஜய்
nice. :-)))))))
மறுபடியும் கவிதை(கள்) விஜய் முத்திரை பதித்திருக்கிறார். நான் தனியாகச் சொல்லணுமா என்ன?!
என்னால் ரசிக்க முடியாமல் போன ஜனாதிபதிகள் நிறைய உண்டு... ஏற்க முடியாமல் போன ஜனா என்று பி.ப ஆகிவிடுவாரோ என்று இருக்கிறது. லிவிங்க்ஸ்டன் - வடிவேலு காமடியில் வருங்கால ஜனாதிபதி என்ற கூவல் இப்போ எனக்கு காமடியாத் தோணலே! உங்களுக்காக நான் கூவுகிறேன்: வருங்கால ஜனாதிபதி க.சீ. சிவக்குமார் வாழ்க! (ஃபீஸ்??)
Post a Comment