Wednesday, November 18, 2009

நீ- சொல்லேஏன்!(இசை அளபெடை)

நீ-கேளேன் பிளாக்கிற்கு இன்று இருந்த இடத்திலிருந்தே போனேன்.வடிவமைப்பு, புகைப்படங்கள் என பல விசயங்கள் பட்டையைக் கிளப்பின. அப்படின்னா உள்ளடக்கம்? என சம்பந்தப்பட்டவர்கள் வினவுவது காதில் ஒலிக்கிறது. அவை சில நன்றாக உள்ளன.நான் (ஆகாச ஆராச்சி) ரமணன் விஷயமாக என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்க உட்புகுந்தேன். சென்னை நகரின் மழையும் பின்னவீனத்துவமும் மழையும் ரசித்தேன்.ரமணனின் உடையையும் செய்தியையும் வைத்து நம்பகத்தன்மை பற்றிப் பேசியிருந்தது ஜாலியாக இருந்தது.ஜாலி மட்டுமே.

கிரிகெட் உலகக்கோப்பை வலது கை கேப்டனுக்கும் இடது கை ஆட்டக்கார கேப்டனுக்கும் மாறிமாறி வருகிறது என்கிற 25 ஆண்டு காலத்தில் பெறப்பட்ட நம்பிக்கை போன தடவையில் இருந்து பொய்க்கவில்லையா அதுபோல இதுவும் பொய்க்கும். மழையே பொய்க்கும் போது ரமணனின் வாக்குகள் பொய்க்காமல் எப்படி?
சென்னையி அவஸ்தைகள் தீர அரைவாசி மாந்தராவது அங்கிருந்து வெளியேற வேண்டும்.சினிமா,டி.வி,கோர்ட்டுகள்,பத்திரிக்கைகள் இப்படிப் பல விஷயங்கள் மாநிலத்தின் ஐந்தாறு இடங்களில் பிரிந்து நடந்தால் இது சாத்தியம்.இப்போதும் முன்னும் இதற்கு உதாரணங்கள் இருந்தன.இருக்கின்றன. பரவல் மற்றும் அதிகாரப் பரவலே இதை சாத்தியமாக்கக் கூடியது.

இதைப்பற்றி விரிவாக ஆராயவேண்டும். நீ-கேளேன் படித்துவிட்டு எனக்கும் ஆராய்ச்சி மனோபாவம் கூடிவிட்டது.ஆனால் இன்று புகுந்தது வேறு காரணத்திற்காக தொலைக் காட்சி விளம்பரத்தில் உங்களுக்குப் பிடித்தது எது பிடிககாதது எது என்பதை குறிப்பி்ட வேண்டும். இந்தத் தகவல் நமது சக சதிகாரர் ஒருவருக்கு தேவைப்படுகிறது. வெளியில் சொல்லத் தக்கது என்றால் என்னென்ன காரணங்களை முன்னிட்டு என்றும் எழுதலாம். எங்களது WMF ஆராய்ச்சிக் கழகத்துக்கு அது பயனுள்ளதாக விளங்கப்போகிறது.

முதலில் நான் சொல்லிவிடுகிறேன் மகுடிக்காரன் எலிகளைக் கூட்டிபோகிற விளம்பரம் எனக்குப் பிடித்தருக்கிறது. எதற்கான விளம்பரம் என்பதை இனிமேல்தான் கவனிக்கவேண்டும்.சின்னவயதில் பேக்-பைபர் படித்தததும் பிற்பாடு பெக்-பைபர் அடித்ததும் அதற்குக் காரணமாயிருக்கலாம்.பிடிக்காத விளம்பரம் ஹமாம்.(அவர்களே ஆய்ந்து இந்நேரம் அதை நிறுத்தியிருக்கவும் கூடும்.)மகளை சோப் வாங்க அனுப்பிவிட்டு பின்னாலேயே அவளது தாய் பதறி ஓடுகிற விளம்பரம்.

என்னதான் அறியாத பிள்ளை அல்லது வெட்கங்கெட்ட பிள்ளையாக இருந்தாலும் சோப்பு வாங்கிய மறுகணம் மளிகைக் கடை வாசலிலேயே குளித்துவிடுமா என்ன?

6 comments:

ஸ்ரீராம். said...

கார்க் காரர் அருகில் சைக்கிள் பையனின் தன்னம்பிக்கை விளம்பரம் எனக்குப் பிடிக்கும்.

Rajan said...

ஹமாமிருக்க பயமேன் !

விஜய் said...

centerfresh விளம்பரம்

சங்கர் said...

முதலில், வருகைக்கும், எங்கள் வலைப்பூ பற்றிய கருத்துக்கும் மிக்க நன்றி,

பொதுவாக, குழந்தைகளை மையப்படுத்தி வரும் விளம்பரங்கள் பிடிக்கும்,
எனக்கு மிகப்பிடித்தது, சிறுவன் பன்றி உண்டியலை எடுத்துச் சென்று பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கும் விளம்பரம் (Union bank of India என நினைக்கறேன்), குழந்தையும் நாயும் வரும் Vodafone விளம்பரங்களும் பிடிக்கும்

KarthigaVasudevan said...

ஷில்பா ஷெட்டி புகழ் "ரிச்சர்ட் நடித்த "விசா கார்ட் " விளம்பரம் இன்று வரையிலும் மனதை விட்டு அகலவே இல்லை. விசா கார்டால் விலைக்கு வாங்கப் பட்ட பல நூறு புறாக்களை அந்த ராஜஸ்தானத்து நாட்டுப் புறச் சிறுமி குதூகலமாய் பறக்க விடுகையில் பார்ப்பவர் மனமும் பறக்கத் தான் செய்தது.ரசனையான விளம்பரம்.

KarthigaVasudevan said...

பிடிக்காத விளம்பரம் ...எரிச்சலை ஏற்ப்படுத்தும் விளம்பரம் என்றால் இப்போதைக்கு "சத்யராஜ் சீதா வரும்" போத்தீஸ் "விளம்பரம் தான். என்னவோ பிடிக்கவில்லை.ஏதோ பொருந்தவில்லை அந்த விளம்பரத்தில் .