பின் இரவின் மழை ஓய்ந்து
தெருவெல்லாம் வெள்ளக் காலை.
மரங்கள் குளித்த பாதையில் போயின
கால்நடைகள் மேய்ச்சலுக்கு.
ஆட்டுப் புளுக்கை ஒன்றெடுத்து
‘மரகத மரம்’ முளைக்குமென
குழிபறித்து மூடிவிட்டு
குந்திக் காத்திருக்கிறான்
தோழர்கள் வருவரென்று.
பொன்வண்டைத் தேடிப்போன அவர்கள்
தெருவுக்கு வரவேயில்லை.
Friday, November 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
உங்கள் கவிதையை இப்போதுதான் முதன்முதலில் படிக்கிறேன்.. அட்டகாசமாய் இருக்கிற்து.
Thnks for blogging..
இதுநாள் வரை உங்கள் கவிதையொத்த உரைநடையை ரசித்து வரும் எனக்கு, இது ஒன்றும் புதிதாய் தோன்றவில்லை
நிறம் சார்ந்த படிமம்.நுட்பமான குறியீடுகள்
மிக நல்ல கவிதை
உரை நடைக்கும் கவிதைக்கும் ப்ளூட்டொ சூரியன் தூரம்
நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
விஜய்
மொத்தத்தில் எதிர்பார்ப்புகள் எல்லாம் ஏமாற்றமாகவே....
மழை விட்ட நாளின் குளிரடிக்கிறது கவிதையில்.
-ப்ரியமுடன்
சேரல்
Post a Comment