Monday, May 17, 2010

இரும்புக்கோட்டை முக்கா டவுசர்

நேற்று மத்தியானம் பேருந்து நிலையத்துக்கு முந்தின நிறுத்தத்தில் பேருந்து இறங்கிவிடுகிற போக்கின் அடிப்படையில் ஒட்டன் சத்திரத்தில் பேருந்து இறங்கியபோது.கார்த்திக் தியேட்டரில் அது மத்தியானக் காட்சி தொடங்கி ஓடுகிற நேரமாக இருந்தது.டிக்கெட் கவுன்ட்டரின் வால் முனையில் ஒரே ஒரு நபர் நின்றுகொண்டிருந்த நேரம் 2.45. படம் தொடங்கும் நேரம் 2.15 என பக்கவாட்டில் ஒரு பலகையில் கண்டிருந்ததால் ஏங்க படம் போட்டு அரை மணி நேரம் ஆச்சா? என வினவ அவர் 2.40க்குத்தான் படம் தொடங்கிற்று என்றார்.

என்னா ஆனாலும் சரி என்று டிக்கெட் எடுக்கப்போனால் அவரே சீட்டுக் கொடுக்கும் கூண்டினுள்ளும் வந்து நின்றார். 40 ரூபாய் டிக்கெட்டுக்கு இரண்டாம் மாடிக்கு சீட் எடுத்து மிச்சமுள்ள மொத்தப்படமும் ஒற்றை ஆளாக உட்கார்ந்து பார்த்தேன்.நூறுக்கும் மேற்பட்ட நாற்காலிகளுக்கு ஒரு ஆள் என்பது கொஞ்சம் கஷ்டம்தான்.

நான் நுழைகிற நேரம் சிங்கம்(லாரன்ஸ்) உலக்கையுடன்(சாய்குமார்)சீட்டு விளையாட ஆரம்பித்திருந்தார். சீட்டு விளையாட்டு என்றால் சீட்டின் எண்களுடன் விளையாடாமல் சீட்டுக்கட்டில் விளையாடுவது. முதலில் படத்துக்குத் தேர்ந்தெடுத்த வண்ணத்தை மனங்கொண்டு சிம்புதேவனை மெச்ச வேண்டும்.வேறு ஒரு நில அமைப்பிலும் பிரமிப்பிலும் நம்மை வைத்திருக்கும் வண்ணம் அது இருந்தது.பிறகு செட்டுகள்.என்றாலும் கூட செட்டுகளைப் பார்த்துவிட்டு இடைவேளை வரை படம் பார்த்ததில் நிறைய தச்சர்களின் உழைப்பு வீணாகி விட்டதோ என நினைத்தேன். ஆனால் டிரவுசர் இனிக் கிழியும் என இடைவேளை விட்டபின் சிம்புதேவன் ஈடுகட்டிவிட்டார்.

கலைப் படைப்பில் முழுக்கவும் ஒன்றித்து நாம் பிரக்ஞை இழந்துவிடக்கூடாது (இது பிரட்டோ பிரெக்டோ சொன்னது அல்லவா) என்பதற்கான நினைவூட்டல்கள் அடிக்கடி வந்துபோகின்றன. படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது 14 மொழி பேசும் டிரான்சுலேட்டர்.
விவிலிய எழுப்புதல் கூட்ட மொழிபெயர்ப்பின் விரைவை எட்டுகிறார். அதேபோல மூல மொழி பேசும் எம்.எஸ். பாஸ்கர்.(விகரம் படத்தின் அம்ஜத் மற்றும் ஜனகராஜை நினைவுகொள்க).

கைகளைப் பிசையாமல் நம்பியாரை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டார் நாசர்.லாரன்ஸ் மட்டும் ரஜினியிலிருந்து வெளிவர கொஞ்சம் கிரமப்பட்டிருக்கிறார். தேடிப்போன புதையல் இடத்துக்கு ‘சுங்கச் சாவடி’ போட்டிருப்பதிலிருந்து படத்துக்கு ஒரு சமகாலத் தன்மை வந்துவிடுகிறது.கௌ பாய் தொப்பிக்கு ரொம்பப் பொருந்திய முகம் மௌலியினுடையது.

பாஸ் மார்க்,பனகல் பார்க் என பல வித ’ஓட்டு’கள் படத்திலுண்டு. படத்திற்கும் உண்டு.நாயகிகள் தேர்வு நல்ல தேர்வு.(சாப்பாடு நல்ல ஏற்பாடு என்று திருவிழா நாடகங்களில் பபூன்கள் சொல்லும் தொனியில் இதைப் படிக்கவேண்டும்.)பாட்டுகள் நன்றாகத்தான் இருந்திருக்கவேண்டும் கொட்டகை அமைப்பு காரணமாகவோ காதுக்கோளாறு காரணமாகவோ அதை நான் மனங்கொள்ள முடியவில்லை. வைரத்தை எடுத்து பொதுமக்களுக்குக் கொடுத்தாயிற்று என்கிற அளவில் தமிழில் கௌபாயை முதலும் முடிவுமாக்கிய சிம்புதேவனுக்கு நன்றி.(பயலுகளைப் படிக்க வைங்கடா- என்பது அவரது கடைசி வசனம்)

படத்தின் இறுதி வசனம் சிங்கத்தினுடையது அல்ல. பத்மப்பிரியாவினுடையது.எப்போதா வந்து இடறிவிட்டு கனவாய்ப் போகிற காதலி போன்ற தோற்றம் அவருக்கு. ஆனால் இந்தப் படத்தில் அவரது காதல் மட்டும்தான் ஈடேறுகிறது.

இந்தப் படத்தில் வேறொரு விசேஷம் இருக்கிறது. படத்தில் தலைகாட்டுகிற பெண்களில் கிட்டத்தட்ட முப்பத்து மூணு சதவீதம் பெண்களை சிங்கம் காதலிக்கிறது.சந்தேகம் இருக்கும் யாராகிலும் படம் பார்த்துவிட்டு அதில் காணக்கிடைக்கும் பெண் தலைகளை எண்ணிச்சொல்லுங்கள்.

9 comments:

Cable சங்கர் said...

ha..haa..haa..

காமராஜ் said...

வணக்கம் சிவா.

இங்கு வந்து ரொம்ப நாளான மாதிரித்தெரிகிறது. நான் தான் கவனிக்கவில்லை. இன்னும் சாத்தூர் பேருந்து நிலையத்தில் ஒரு அதிகாலை பார்த்த தூக்ககலக்கம் மாறாத முகம் நிழலாடுகிறது.
அதன் பின்னர் பார்க்க லவிக்கவில்லை. நலம்தானா சிவா.
சாவகாசமாய் படிக்கிறேன்.
இப்போ குசலம் மட்டும்.
நானெல்லாம் அதிலிருந்துதான் வேர்பிடித்தேன்.

நேசமித்ரன் said...

இரும்புகோட்டை முக்கா டவுசர்

தலைப்பு ஜூப்பருண்ணே

:)

விமர்சனம் ...

Nathanjagk said...

அண்ணன் தியேட்டர் ஏறுகிறார் என்றால் படம் நண்பர் இயக்கியதாய் இருக்கும் அல்லது அண்ணனை ஏதாவது இயக்கியதாய் இருக்கணும் :)

23ம் புலிகேசியில் ஏமாற்றிவிட்டார் சிம்பு. அது கொஞ்சம் வலுவிலந்த காட்சியமைப்புகள் கொண்டது. உங்கள் விமர்சனம் சிங்கத்துக்கு ஆறுதலாகவும் ஆட்டு மந்தைக்கு காவலாகவும் இருக்குதே?? கில்லாடிங்ணா நீங்க.
நீங்கள் காட்டுகிற திரை-வெளிக்காட்சி அச்சுறுத்துகிறது. தனியனாக தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்ப்பது வெட்டிக்கும் இழுக்கு வேட்டிக்கும் அழுக்கு!
படத்தின் பெண்கள் தலைகளைக் கண்டுபிடிக்க ஒரு ஃபார்முலா இருக்கே? எண்ணச் சுலபமாக இருப்பதை எண்ணி அதை ரெண்டால் வகுத்தால் தலைகள் எண்ணிக்கை வந்துவிடும்!

Anonymous said...

edo oru vari ethanai pengal enru enna solli eludinal athukku easiaya oru vali veraya ? rendu kannaiyaum enni rendal vakuthu ethani perunnu kandupidipatharku pathil thalaiye ennivittu pogalame....
HI Hi nan appadithan....

Murugaprakash V

Ananya Mahadevan said...

அச்சிச்சோ, நீங்க அந்த நிழல் கால்ல விழுற சீனை மிஸ் பண்ணிட்டீங்களா? சோ சேட்! சூப்பர் படம். ஜாவா மூர்த்தி - அந்த ட்ரான்ஸ்லேட்டர், இடம் பொருள் ஏவல் எதுவும் தெரியாமல் சதா தன் மொழிபெயர்ப்பு கடமையை செய்வது அல்ட்டிமேட் ரகம். அப்புறம் அந்த ஹாலிவுட் கெளபாய்ஸ் இண்ட்ரோடக்‌ஷன் அந்த தொப்பி வெச்ச பூசாரி, இதையும் மிஸ் பண்ணி இருக்கீங்க. இதெல்லாமே சிம்பு தேவனின் அக்மார்க்த்தனம் பளிச்சிட்டது!முடிஞ்சா இன்னோரு வாட்டி பார்த்துடுங்க,Trust me, you wont regret!

arulmani said...

கிராமத்து மனிதர்களின் குணங்களை நமது வட்டார மொழியில் எழுதும் உங்கள் எலுத்து மேலும் மேலும் நம் மண்ணின் மைந்தர்களை அறிமுகப்படுத்தட்டும்.

அருள்மணி,
பெரிய தாதம்பாளையம்.

க. சீ. சிவக்குமார் said...

haa... periya thaatham paalaiyaththil irunthu pinnoottamaa
romba happy - siva

Karur King said...

:) amam siva.. nanum roomba naal valiyulaka vasakanthan.. ana ippathan binnutam poda arampichu iruken.. poranthathu , valanthathu periyathatham palayathula, school chinna dhara purathula, vela pakkurathu bangalore.. ippo irukirathu Mozambique la.. i really loved the Gunaseelarkal in Kungumam.. athuthan ungalin Arimugam... Valguthukal Siva..