Monday, May 10, 2010

பிரார்த்தனை வகை

ஒரு மனைவி ரொம்பவும் கடவுள் பக்தியுடன் இருந்தார்.சுமாரான விவசாயக் குடும்பம். ’ஆடுகறக்க பூனை நக்க’- என்பார்களே அதுபோல ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை. கணவன் பெயருக்கு அப்போது சொசைட்டி( நில வளவங்கி) லோன் எடுத்திருந்தது. அந்த வங்கிகளில் செகரட்டரிகளுக்குத்தான் பவர்.
அப்போது ஒரு காலை நேரம் .மனைவி குளித்து முழுகி கோயிலுக்குத் தயாரான சமயம் கணவனின் வசனம் இப்படியாக இருந்தது.

’’ம். கொழம்பு தாளிக்கறதுக்கு இருக்கற எண்ணையையும் கொண்டு போயி அங்க கோயல்ல ஊத்தீட்டு வந்தர்றே. சரி... சரி... போப்போ. அப்படியே சாமி கிட்ட, நம்ம செகரட்டரி சுப்பிரமணிக்கு நம்மளைப் பாக்கற நேரம் மட்டும் மயமயன்னு கண்ணைக் கட்டிக்கோணும் சாமின்னு வேண்டிக்க!”

7 comments:

பத்மா said...

:))
நல்ல வேளை.கண்ணை கட்டிக்கோணும்ன்னு சொன்னாரே!
அவரவர்களுக்கு வேண்டியதை பிரார்த்திக்க வேண்டியது தான் .

கண்ணகி said...

நல்ல வேண்டுதல்..

Nathanjagk said...

வராக்கடன்கள் அதிகரிப்புக்கு எண்ணை ஒரு உயவுப்​பொருளாக இருப்பது விளங்கு-கிறது ஜி!

நேசமித்ரன் said...

//எண்ணை ஒரு உயவுப்​பொருளாக இருப்பது //

ஹாஹ்ஹா

எரி பொருளாவும்னு சொல்லுங்க

கே. பி. ஜனா... said...

நல்லாருக்கு. ரசித்தேன்! -- கே.பி.ஜனா

Radhakrishnan said...

:) யதார்த்த வாழ்க்கை

arasu said...

IPPAVE KANNAI KATTUTHE.