அனேமாய் அனுதினமும்
இரண்டாம் ஆட்டம் சினிமா.
நான்,ஜகன்,ம்னோகரன்
மூவரும் பைக்கில்.
அறைக்கு அருகிலேயே
இருக்குமொரு
சோதனைச் சாவடிக்
காவலர் கருதி
ஒருவர் இறங்கி நடந்து
இருவர் பைக் ஏறி
சாவடி கடந்து மூவரும் போவோம்.
மதியம் மாலைகளில்
மனந்துளிருங் காலைகளில்
இருவராய் எங்களைக் காணுகையில்
புன்னகைப்பார்.
கண்களில் கேள்வியிருக்கும்...
’எங்கேடா இன்னொருத்தன்?’
Friday, July 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
எனக்கும் பொருந்தக்கூடிய கவிதை.. மிகவும் அருமை . நன்றி நண்பரே .
அந்த கேள்விதான்.. கவிதையை சிறப்பானதாக்குகிறது :)
அந்த கேள்விதான்.. கவிதையை சிறப்பானதாக்குகிறது :)
//அனேமாய்//
புது வார்த்தையா இருக்கே !
அன்பு அனானிமஸ் அனேகமாக அது ஸ்பெல்லிங் மிஸ்டேக்தான். வருந்துகிறேன்.
Post a Comment