Tuesday, July 6, 2010

குறுஞ் செய்தி

நேச மித்ரனிடம் இருந்து வந்த மின்னஞ்சல் புதிய செய்தி (எனக்குதான் புதுசு) ஒன்றைத் தெரிவித்தது. மகுடேசுவரனின் வலைப்பூ பற்றிய தகவல்.kavimagudeswaran.blogspot.com. எனது லட்சத்திப் பத்தாயிரம் சம்பாத்தியமுள்ள வேலைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு உடனடியாய் கண்ணும் கையும் விரைந்தோடி படித்துமுடித்தேன்.

வழக்கம் போல அவரது கவிதைகள் துய்ப்புக்கும் கட்டுரைகள் படித்துச் சிந்திக்கவும் சிலாகிக்கவும் ஆனவை. இச்செய்தியை எட்டுத் திக்கும் கொட்டி முழக்குவதற்காக உடனடியாக இது பதியப் படுகிறது. ஆஸ்கர் அவார்டு ரஹ்மான் பற்றி அவரது கட்டுரை ஒன்று உண்டு. அதன் மீது உடன்பாட்டுத் தளங்கள் ஒரு பக்கம் இருக்க அவரது அவார்டு விஷயத்தை ஒட்டி வேறொரு அவதானம் எனக்கு உண்டு.

ஆஸ்கார் வாங்கியதால் ரஹ்மானுக்கு பத்ம விருது தவிர்க்கப் பட இயலாததாயிற்று.செம்மொழி ‘மையச் செய்தி’ப் பாடலுக்கு அவரைவிடப் பொருத்தம் யார்? ரஹ்மானுக்குத் தந்ததாலேயே இளையராஜாவுக்கும் பதம விருது கிடைத்தது.

விருது கிடைத்த அன்று இளையராஜா உளறிய உளறல் புது இலக்கிய வகை. உளறலினூடாக அவர் செய்தியைச் சொல்லிவிட்டார். அவர் அதில் சொல்லாத செய்தியே எனது கேள்வி.

எம்.எஸ்.விஸ்வநாதன் பத்ம விருது பெற்றிருக்கிறாரா என்பதுதான் அது. ஒருவேளை இல்லையெனில் தமிழின் வரலாறு, இசை,சிற்பம், கட்டடம், மங்கானி அனைத்தையும் நாற்பது அல்லது எண்பத்தேழு ஆண்டுகளுக்குள் சுருக்கிக்கொண்டு பொத்தித் திரியவேண்டியதுதான்.

3 comments:

நேசமித்ரன் said...

எம்.எஸ். வி இது வரை பத்மஸ்ரீ விருது பெறவில்லை என்றுதான் நினைக்கிறேன் அண்ணே

:(

http://www.msvtimes.com/

கபிலன் said...

நம்ம நாட்ல விருது ....என்னத்த சொல்ல போங்க...
ஒரு பத்மஸ்ரீ (ஸ்ரீயோ பூஷனோ விபூஷனோ ) விருதுக்காக
பத்தாண்டுகளாய் மத்திய அமைச்சரை நச்சரிக்கும் ஒரு கல்விதந்தையை எனக்கு தெரியும்.

மகுடேஸ்வரன்....
பகிர்வுக்கு நன்றி...
படித்துவிட்டு வருகிறேன்...
அன்புடன் கபிலன்....

Vijayashankar said...

எந்த நாட்டிலும் ஆள்பவருக்கு சல்யுட் வைப்பவரே, விருதுக்கு பரிந்துரை செய்யப்படுகிறார்கள். ஒபாமா பற்றி பேசியதற்கு ( பத்திரிக்கை செய்தி? ) வேலை விட்டு ஆப்கான் ஜெனேரலை அனுப்பும் காலமிது. வேலை செய்தால் மட்டும் போதாது. கொஞ்சம் அனுசரணை வேண்டும்.