இன்றைக்கு உறக்கத்தில் கோபிகிருஷ்ணனைப் பார்த்தேன். முந்தைய இரவின் நாளைக் கழித்துக் கட்டிவிட்டே உறங்கச் சென்றதால் அதை இன்றைய கனவு என உறுதியாகக்கூறலாம்.முன்னிரவில் அல்லது நள்ளிரவில் காணும் கனவுகள் - இடைத் தூக்கம் விழிக்காவிட்டால் - அனேகமாக மறந்துவிடும் என்றுதான் நினைக்கிறேன்.
ஆகவே, எழுத்தாளர் கோபியைப் பார்த்தது அதிகாலைக் கனவில்தான்.நல்ல கறுத்த நீளமான முடியும் முன் வழுக்கையும் கொண்டவராகக் காணப்பட்ட அவர் ஆனந்தன் என்ற பெய்ரில் வந்தார்.நிறம்,உடை (இன்று அணிந்திருந்த சாந்துப்பொட்டு நிறத்திலான முழுக்கை சட்டையில் அவரை ஒருதடவையும் பார்த்ததில்லை நான்) போன்றவற்றில் அவரென அறுதியிட முடியாதிருந்தும். அதே கண்கள், கன்னக் கதுப்புகள்.
கனவுக்கும் விழிப்புக்குமான கால இடைவெளியும் மனவெளியுமே பக்கபக்கத்தில் இருந்திருக்கவேண்டும்.தர்க்கமாக யோசித்தது கனவின் ஊடாகவேவா அல்லது விழித்த துவக்கக் கணங்களிலா என்பது கூடத் தெரியாத மயக்கம்.
கோபி ஆனந்தன் என்ற பெயரில் வருவது ‘மானுட வாழ்வு தரும் ஆனந்தம்’ என்ற தொகுப்புத் தலைப்பினாலா. ஏன் அவர் ’தூயோன்’ என வரவில்லை. தர்க்கம் அல்லது நிகழ்கூறுவெளிகளை என் மனம் உறக்கத்திலும் ஆதரித்து ஆனந்தன் என்ற பெயரைச் சூட்டியதா?
ஜ்யோவராம் சுந்தர்- சிவராம் இணை கொடுத்திருந்த கோபி நூல்கள் பற்றிய அறிவிப்பை காலம் தாழ்த்திப் பார்த்ததால் வந்த கனவா?
கார்த்திகை தீபத்தின் நாளில் வந்த கனவு இது என்கிறபோது இறுதியாக நான் அவரைப் பார்த்தது திருவண்ணாமலையில்தான் என- அறுதியிட முடியாதது இது- நினைவும் வருகிறது.
கோபிகிருஷ்ணன் தவறுவதற்கு பத்துப்பதினைந்து தினங்களுக்கு முன் அவரது நூல் ஒன்றுக்கு ஒரு வாராந்திரியில் அறிமுகம் எழுதினேன். மைப்பிரதி இப்படித்தொடங்கியது...
‘உலக அளவில் பேசப்பட்டிருக்க வேண்டியவர். உள்ளூரிலேயே கண்டு கொள்ளப்படாதவர்...’
அச்சிடப்பட்டது இப்படி,
கோபிகிருஷ்ணன்... உள்ளூரிலேயே கண்டுகொள்ளப்படாதவர்.
‘லே அவுட்’ எனது நவிற்சியை விழுங்கிவிட்டது.
அவரது அஞ்சலிக்கூட்டத்தில் இந்த விஷயத்தைப் பேசும்படி நிகழ்வுகள் விதித்தன.
இப்போது இதை எழுதிக்கொண்டு இருக்கும்பொழுதும் ஒருமுறை பாதியில் மின்சாரம் போய்விட்டது. முதலிலிருந்து இரும்பு காய்ச்சவேண்டும் என்றுதான் நினைத்தேன். தப்பித்துவிட்டது.
ககன வெளி பற்றியும் கனவுகள் பற்றியும் ஒருங்கே யோசிக்கிறேன்.
Wednesday, December 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
எனக்கு மிகப் பிடித்த கோபி அவர்களைப் பற்றி யார் பேசினாலும் கேட்டுக் கொண்டிருப்பேன், அவரின் எல்லா எழுத்துக்களையும் படித்திருக்கிறேன், உள்ளேயிருந்து சில குரல்களை பல முறை, கோபி பற்றிய பகிர்வுக்கு மிக்க நன்றி.
அன்பு.. மிஸ்டர்..என்ன பேரு..? ய்யா... நள்ளெண் யாமம்..!
நலமா? கோபி கிருஷ்ணன் ஒரு நல்ல எழுத்தாளர்.. ஐ மீன் உலகம் பூராவும் தெரிஞ்சிருக்க வேண்டிய ஆளு!? அப்படியா?? அப்ப உலகம் பூரா தெரிஞ்ச (உங்களுக்கு தெரிஞ்ச) ஒரு 5 பேர்களைச் சொல்லுங்க.. எனக்குத் தெரியுதான்னு பாப்போம்..! அதுல 1 உங்க பேருன்னு நீங்க காமடி பண்ணினாலும்.. அது கரீக்டுதான்!
உலகம் அப்படிங்கிறது ஒரு அளவைக்குள் (எப்பவுமே) கட்டுப்படாதது..! ஜார்கண்ட், பிரேஸில், ஈழம், கஸாகிஸ்தான், காந்திபுரம், தாராபுரம், ஜெய்ஹிந்த்புரம் என்று வெவ்வேறு ஒளி / ஒலி / மொழி / அரசியல் / கலாச்சாரம் / கொள்கை / லட்சியம் செறிவுகளில் வெவ்வேறு பரிமாணம் காட்டுகிற நிலவெளிகளை கடவுள் படைக்க முடியவில்லை என்றாலும் சக ஜண்டு-பாம்கள் ப(பு)டைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.
ஸோ.. உலக அளவில் அங்கீரிக்கப்பட்ட (ISI, ISO, CMMI, FBI, LPG, LTTE, DMK, ADMK, PMK, Sun TV.. இந்த மாதிரி ப்ரபஞ்ச அமைப்புகளால்..) எழுத்தாளர்கள்.. ஐ மீன்.. இந்திய தமிழ் எழுத்தாளர்கள் பெயர்கள் / பெயர் பட்டியல் இருந்தால் வெளியிடவும்! நக்கல் இல்லை.. அறிந்து கொள்ள மிக மிக ஆசை!!
பின்னூட்டங்களைப் படிக்க தெரியாத அல்லது படித்துவிட்டும் பதில் சொல்லத் தெரியாத அல்லது பதில் தெரிந்தும் வெளியிடத் தெரியாத அல்லது வெளியிடத் தெரிந்தும் வெளியிடும் விஞ்ஞானம் தெரியாத... ஹலோ.. ஸாரி.., நள்ளெண் யாமம்.. நீங்க இதுக்கும் பதில் சொல்ல போறதில்லை.. ஏன்னா....... திரும்ப இந்தப் பின்னூவை ஆரம்பத்திலிருந்து வாசிக்கவும்... அப்பவும் புரியவில்லை என்றால் பெ.எ. விக்ரமாதித்யன் வாசிக்கவும்!
என்னடா இது இப்படிப் போட்டுத் தாக்குறோனேன்னு பாக்காதீங்க..! எல்லாம் ஒரு காரணமாத்தான்..... நள்ளெண் யாமம்-ங்கிற ஒருத்தர்கிட்ட, Mr. நள்ளெண் யாமத்துக்கு ஒரு நாளிகை முன்னாடி அதாவது 11 மணிக்கு (நைட்) போன் 'பண்ணி' பேசி.. அதற்கு அந்த "12மணிக்காரரு" (மணியா(ர்ட)ரு இல்லப்பா) கொடுத்த ரெஸ்பான்ன்ன்ன்ஸ்ஸில் மெர்ஸலாகிய ஒரு கேனைக் கிறுக்கன் எழுதிய பின்னூஸ்தான் இது!!! அப்படி ஒரு - 'ம்ம்ம்ம்ம்ம்-சொல்லு...' 'ச்ச்ச்சரி... வச்சுடவா...' 'ம்ம்ம்ம்.. வச்சுடவா' ரெஸ்பான்ஸ்.. ப்ரம் நம்ம 12மணிக்காரருகிட்ட! வாழ்க பன்னிரண்டு மணி (பிரிச்சு படிக்காதீங்க ப்ளீஸ்) க்காரரு! வளர்க அவர் புகழ் அல்லது தூக்க்கம்!!
//‘உலக அளவில் பேசப்பட்டிருக்க வேண்டியவர். உள்ளூரிலேயே கண்டு கொள்ளப்படாதவர்...’
அச்சிடப்பட்டது இப்படி,
கோபிகிருஷ்ணன்... உள்ளூரிலேயே கண்டுகொள்ளப்படாதவர்.
//
ரொம்ம்ம்ப நேரம் கூட்டிக் கழிச்சுப் பாத்தேன்.. எனக்கென்னமோ 2ம் 1ங்கிற மாதிரிதான் தோணுதுங்க மிஸ்டர். நள்ளெண் யாமம்!
அடங்கொன்னியா.. மணி 12க்கு மேல ஆயிடுச்சா.. இனி மிஸ்டர். நள்ளெண் யாமம் என்ன இடித்துச் சொன்னாலும் கண்டுக்க மாட்டாரே!? ம்ம்ம்! ப்ளீஸ் இந்த பின்னுட்டத்தையாவது 12க்கு மணிக்கு மிக்கி, அதாவது 12 மணிக்கு மேல் மிகுந்து, அதிகாலையில் போட்டதாக நினைத்துக் கொண்டு பதிலுரைக்கவும்.. முடியாது போனால் (as told already..) என் மொபைலுக்கு பேசலாம்.. நோ டைம் பார்! நள்ளெண் யாமத்திலும் பதிலுரைக்குப்படும்!
@ ஜெகனாதன்...
ஒண்ணும் சொல்லிக்க முடியல :-)))
வாங்க பெரியண்ணன்...
அது சும்மா... அண்ணன் கசீசி ரொம்ம்ப நல்லவரு..!
கசீசி-க்கு போன் பண்ணுனேன்..(பலவாட்டி டிரை பண்ணி ஒருவழியா லைன் கிடைச்சது) அதுக்கு ரெஸ்பான்ஸ் இல்லாத கோபத்தில்... ஹிஹி..!
Post a Comment