Tuesday, December 29, 2009

தப்புத் தாளங்கள்...

நடப்புலக வாழ்விலிருந்து நான்கு நாட்கள் விலகியிருந்த நான் இன்று ஆனந்த விகடன் பார்க்க வாய்ப்புவந்தது.23.12.09 தேதியிட்ட இதழ். இதழின் 18,20,21 பக்கங்களைப் படிக்கும்போது ஒரு அரிய வாய்ப்பை தவறவிட்ட வருத்தம் வந்து சூழ்ந்தது.அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் குஷ்பு தொகுப்பாளராக இருந்திருக்கிறார் என்கிற முதற் செய்தியே என்னை பரவசத்திலும், அந்த நிகழ்வைத் தொலைக்காட்சிகளில் பார்க்காமல் தவறவிட்டோமே என்கிற வருத்தத்திலும் தள்ளியது.

’தமிழ் உச்சரிக்கத் தடுமாறும் நீங்கள் ஏன்  அவ்விழாவின் தொகுப்புப் பொறுப்பை எடுத்துக்கொண்டீர்கள்?’ என்பது விகடனின் கேள்வி.

‘தொகுப்புரை  மிக கவித்துவமான நடையில் அமைந்துவிட்டதால் அந்தத் தடுமாற்றம்’ என்பது குஷ்புவின் பதில். இந்த ஒரு பதில் போதுமே அவர் தமிழ்நாட்டை சமாளிக்க. மூத்த தமிழ்மகனின் ஆட்சியில் அவ்வளவு பேரும் இங்கே கவிஞர்கள்தான். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.

கவித்துவத்தை   தவறவிட்டுவிட்டேனே என்றும் வருத்தம் வந்தது கூடுதலாக. குஷ்புவாலேயே அழியாத தமிழ் என்று முதல்வர் வேறு சமாளித்திருப் பார் போலிருக்கிறது. விழா மேடைகளை அல்லது விருது மேடைகளை ’இந்திரலோகம்’ அளவுக்கே மாற்ற முயலும் மாற்ற விரும்பும் பேராசையின் எளிய வெளிப்பாடுகள் இப்படிக் குமிழியிட்டு விடுகின்றன.

என்னென்ன மாதிரி குஷ்பு மொழிந்தார் என்பதற்கு விகடன் (பக்கம் 20-இல்) சொன்ன உதாரணங்கள் சாதாரணங்கள் அல்ல. உளியின் ஓசையை(இவ்வாறு ஒரு திடைப்படத்துக்கு கருணாநிதி வசனம் எழுதியுள்ளார்)- ஒலியின் ஓசை என்று வாசித்திருக்கிறார் குஷ்பு.

கவித்துவத் தமிழை ஆங்கிலத்தில் எழுதி வாசித்தாரோ அவர் என்கிற சிறிய ஐயம் அடுத்த எ.கா வில் தீர்ந்தது எனக்கு . பெரியாரின் கொள்கைகள் என்பதை ‘பெரியாரின் கொள்ளைகள்’ என சொல்லியிருக்கிறார்.

விடுதலை வளாகம் அடுத்து மைந்தன் கைக்கும் கட்டுப்பாட்டுக்கும் போகுமாறு வீரமணி.கி ஏற்பாடு செய்திருப்பதையும் அதை விட அய்யாவின் எழுத்துகளை தங்களைத் தவிர எந்த வெங்காயமும் புத்தகமாகப் புடுங்கப்படாது என வழக்காடித் திரிவதையும்  சமகால சூழலில் வாகாக வைத்து குஷ்பு விளையாடிவிட்டாரோ என்று தோன்றுகிறது. கறுப்புக்குடைகள், கறுப்பு உடைகள் ஆகிய அனைத்து மொத்தக்குத்தகை வியாபாரத்தையும் வீரமணி உரிமை கொண்டாடலாம்.

தமிழைப் படாத பாடு படுத்தினார் குஷ்பு என்று விகடனில் எழுதியிருக்கிறார்கள்.அவர் அப்படி வாழ வைத்த தமிழை வீழ வைத்து மனதறிந்து  வேடிக்கை பார்க்கிறவர் அல்ல என்று மனசுக்குப் படுகிறது.

ஆனால்,( என்  ஒரு தலை மற்றும்  தறுதலை நேசத்துக்குரிய பரிமள) அன்பான குஷ்பு ! நீங்க, எங்க பெருசுகள வச்சு காமெடி கீமெடி பண்ணலியே?





7 comments:

ny said...
This comment has been removed by the author.
ny said...

:))
என் மனசுக்கும் அப்படியே தான் படுகிறது boss!!

selventhiran said...

கும்கதா!

க. சீ. சிவக்குமார் said...

செல்வா! கார்தின்...
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Kodees said...

//என் ஒரு தலை மற்றும் தறுதலை நேசத்துக்குரிய பரிமள) அன்பான குஷ்பு//

வீட்டுக்குத் தெரியுமா?

Nathanjagk said...

நக்கத் ​தெரியுமா?
.... என்ற எளி​மையான விசாரணையில் என் கல்லூரி ராகிங் ஆரம்பமானது. குஷ்பூவுக்கும் அவரது இயற்​பெயருக்கும் நன்றி.
உன்னாட்டம் ​பொம்பள யாரடி.. இந்த ஊ​ரெல்லாம் உன் ​பேச்சுதானடி என்ற கவிப்​பேரரசுவின் வரிகள் நி​​னைவுக்கு வருதய்யா!
இந்த ​மேட்ட​ரை இடு​கையாக்கிட்டீங்க​ளே? அண்​ணே, நீங்க குஷ்பூக்கு தமிழ் ​சொல்லிக் ​கொடுக்கக் கடவுக!

ச.தமிழ்ச்செல்வன் said...

இப்ப தமில வலக்க குஷ்பு கலஞர் அய்யா தலமயில கலகத்தில சேந்துட்டங்கப்போவ்