பல செய்திகளை ஏககாலத்தில் கேள்விப்பட்டு இரண்டு செய்திகள் மனதில் நின்றன. ஒன்று திருவனந்த புரம் பத்ம நாப சாமி ஆலயத்தில் ரகசியக் கிட்டங்கியில் கொள்ளைகொள்ளையாக பொக்கிஷம் கிடைத்துக்கொண்டிருப்பது. ஒரே நாணில் அனந்து ‘திருப்பதி பாலாஜியை’ பின்னுக்குத் தள்ளிவிடுவார் போலிருக்கிறது. ஒரு பக்கம் கேரள மிளகு மற்றும் வாசனைப் பொருள்களை நினைத்து மகிழ்வாக இருந்தது. அப்புறம் சம்ஸ்தானத்தின் பக்தி மற்றும் அழகுணர்ச்சி.
லட்சம் கோடி ரூபாய்களை நெருங்கிக் கொண்டிருக்கும் இவற்றின் மதிப்பு உலக வல்லுநர்களையே ஒரு கணம் வியப்பில் ஸ்தம்பிக்க வைத்திருக்கும். எனக்கு வீர பாண்டிய கட்ட பொம்மனில் சிவாஜி கணேசன் பேசுகிற வசனம் நினைவுக்கு வந்துவிட்டது. ‘’ எண்ணி எண்ணி... என்ன மாளது... அது ஒரு ஒரு கோடி இருக்கும் போ... போ... கொண்டு போய்க்....”
இந்த வசனம் நினைவுக்கு வரக் காரணம் இதே நாட்களில் சென்னை தீவுத் திடலுக்கு அருகில் உள்ள மிலிட்டரிக் கேம்பில் பாதாம் பழம் பறிக்கப் போன சிறுவனை துப்பாக்கிக் குண்டு ஒன்று உயிரைப் பறித்த சம்பவம்தான். பதிமூன்று வயது தில்சான். என்ன ஒரு மடத்தனம். ராணுவத்தின் மடத்தனத்திற்கு உதாரணம். மடத்தனம் மற்றும் கொலைவெறி. இப்போது செத்த பயலுக்கு- குடும்பத்துக்கு - ஐந்து லட்சம்.
இந்தியா பணக்கார நாடு என்பதற்கு பதம நாபன் ஆலயம் சாட்சி.
கோயிலின் பொக்கிஷ வகையை எப்படிக் காவல் காப்பது என்று ஐயம் எழுந்துள்ளதாம். அது இனி தினமும் பத்து லட்சம் பெறுமானமுள்ள பாதுகாப்பு ஏற்பாட்டினைக் கோரக் கூடும். இவ்வளவு பலமான மிலிட்டரி இருப்பதால் நாம் நகைகளின் பாதுகாப்பு பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.
மற்றபடி பத்ம நாபன் ரட்சிப்பான். சென்னையில் செத்துப்போன சிறுவனை நினைத்து வேகாளமும் கண்ணீரும் வருகிறது. மலையாளப் பழமொழி ஒன்றும் நினைவுக்கு வருகிறது.(மனம் என்னேரமும் பொருத்தப்பாடுகளுடன் செயல் பட்டும் கருவியுமல்ல) - ‘ மரிச்சவண்டெ பாடு ரக்ஷப்பட்டு.’

6 comments:
kastam purikirathu....
miltary may be doing woring.
why the boy went restected place
சிவகுமார்ணா! உங்க கதைங்களை நிறையப் படிச்சிருக்கேன். ஆனந்த விகடன்ல ஒரு தொடர்கதை எழுதினீங்களே, இப்ப ரீசண்ட்டா எழுதினது இல்லே, முன்னே ஏழு வாரக் கதை ஒண்ணு எழுதினீங்களே, பேரு மறந்துபோச்சு, கதை சூப்பர்! உங்க பிளாகை இப்பலேர்ந்து ஃபாலோ செய்ய ஆரம்பிச்சிருக்கேன். செல்வேந்திரன் அண்ணாவுக்கு நன்றி!
தங்களுக்கு, பழமொழி அளவிற்கு பரிச்சயம் உண்டா?
முந்தின பின்னூட்டத்திலேயே கேக்கணும்னு நெனைச்சேன். மறந்து போச்சு! நள்ளெண் யாமம்னா என்னங்ணா?
நான் உங்கள் தீவிர ரசிகன்
Post a Comment