வெற்றிடமாக் காணும்
பெருவெளியில் நேசத்தை
(அழுக்குருண்டை போல
சுகமாய்த் திரளுவதுஅது)
மெல்லமனதில் திரட்ட
அது ஒரு கோள வடிவத்தினை
எடுத்து
கரகரவெனச் சுற்றி மேல்
கீழற்ற
-பிரக்ஞைக் குறிப்புகள்
வசத்திலில்லை-
விதமாகச் சுழன்று சுற்றி
மோதி நின்ற இடம் உன்
காற் பெரு விரலின் நகமாய்
இருந்தது.
உருவகித்த பொருளின்
பிரதிநிதி நீயே எனக் கற்பிதம்.
மோகமும் பேரமும் ஒருங்கே
பேசி
‘சீக்கிர’ங்களுக்கு மத்தியில்
இடம்பிடித்தபோது
நீட்டலளவையை ஊதிப்
பெரிதாக்கும் உள்ளுறை
உயிரிழந்திருந்தது.
தோற்று நடந்த அதிகாலை
வானின் கீழ்
விண்மீன்கள் மங்கிக்கொண்டிருந்தன.
நண்பகலில் தூக்கம் வந்தது-
கறைபட்ட வரைபடத்தின்
ஈரத்தின் மேலாக.
Wednesday, December 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
super kavithai....... sorry for writing comment for ens...
உப்புக் கடலைக் குடிக்கும் பூனை - க.சீ. சிவகுமாரின் புதிய கதைகளின் முழுத் தொகுப்பு.
வாழ்த்துகள்
இந்தக் கவிதை ஜல்லிக்கட்டு காளை
மண்ணைக் கிளர்த்துறப் போல mmmm
அண்ணே,
எலக்கியவாதின்னா சும்மாயில்லேன்னு நிரூ'பிச்சிட்டீங்க'!
செய்யறதையும் செஞ்சுட்டு, தெகிரியமா அதை கவிதையாக்கிற சுதந்திரம், தில்லு, லொள்ளு வேற யாருக்கு இருக்கும்?
ஒரு டவுட்டு,
நல்ல மேட்டருன்னா கட்டுரை; வேற மேட்டருன்னா கவிதையா?
நம்மகிட்டயும் 2, 3 கவிதைகள் இருக்கு..... ஒருவேளை எல்லார்கிட்டயும் இருக்குமோ!??
...
ஒருவேளை கவிதைய தப்பா புரிஞ்சிக்கிட்டேனோ?? விளக்கவும் அல்லது குழப்பவும்.. ப்ளீஸ்!
ஜகன்! கவிதையாக எழுதிய மேட்டரை கதையாகவும் எழுதலாம். ஒரு மிக்சிங் கிடைக்கமாட்டேங்குது. அந்தக் கோர்வை வந்திருச்சின்னா கதை பின்னிடலாம்; பண்னிடலாம்
Post a Comment