Friday, August 10, 2012

கல்வி நாம மாவட்டம்.

நாமக்கல் காரர்கள் முட்டையும் போடுவார்கள் , நூற்றுக்கு நூறும் போடுவார்கள் என்று அவர்களது தொழில் வளர்ச்சி(!) குறித்து முன்னம் நான் இளிவரலாகக் குறிப்பிடுவதுண்டு.
குழந்தைகளுக்கு வரவேண்டிய ஸ்காலர்ஷிப்பில் கை வைத்து எண்பதுக்குக் கிட்டே தலைமை ஆசிரியர்கள் மேற்படி மாவட்டத்தில்  இடை நீக்கத்தில் இருக்கிறார்கள் என்பதை தலைப்புச் செய்தியாகக் கேள்விப்படும்போது

பயமாக இருக்கிறது.

இந்த தவுதாயப்பட்ட லோகத்தில் குழந்தைகள் படிச்சா என்ன? படிக்காட்டி என்ன?

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அப்படிச் சொல்லுங்க...

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஸ்காலர் ஷிப் என்பது ஞானவான்களின் கப்பல்.

அந்தக் கப்பலில் ஓட்டை போடும் கயவர்கள் நம் சமூகத்தில் இருந்தேதான் வருகிறார்கள் எனும் போது நம் கல்வி குறித்து கற்பித்தல் குறித்தும் சீரமைக்க நிறைய இருக்கிறது.

//இந்த தவுதாயப்பட்ட லோகத்தில் குழந்தைகள் படிச்சா என்ன? படிக்காட்டி என்ன?//

இந்தக் கேள்வி எள்ளல்தொனியோடு முடிவதாய் நான் கருதவில்லை.

மாறாக உண்மையிலேயே இந்த உருப்படாத கல்வியைக் கற்பவர்கள் எதிர்கால சமூகத்துக்கு என்ன கிழித்துவிடப் போகிறார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

Unknown said...

வணக்கம்!! நீண்ட நாள் கழித்து உங்களை இங்கே கண்டதில் மகிழ்ச்சி. இவர்கள் எல்லாம் வாத்தியார்கள் அல்ல.... வசூல் ராஜாக்கள்....

Unknown said...

வணக்கம்!! நீண்ட நாள் கழித்து உங்களை இங்கே கண்டதில் மகிழ்ச்சி. இவர்கள் எல்லாம் வாத்தியார்கள் அல்ல.... வசூல் ராஜாக்கள்....