Wednesday, February 16, 2011

பதற்றம்

செய்யாமல் விட்டவை
இயலாமல் விட்டவையாய்
உருப்பெறாமல் போகின்றன.

நிகழ்வனவற்றைத்
தீர்மானிப்பவை இரண்டு
தரப்புகள் மற்றும்
வரலாற்றின் தடுப்புகள்.

மெல்லிய அல்லது வலிய
பதற்றங்களால் தவறிப் போகிற
எல்லாவற்றிலும்
காரணமாயிருக்கின்றன
தன்வரலாறும் சூழல் வரலாறும்.

ஒரு திட்டமிடலில்
அல்லது பதற்றத்தில்
அல்லது உயரெழுச்சியில்
எதோ ஒரு செயல் நடக்கிறது.

அது, தன் வரலாற்றினை
மீறுகிற ஒன்றாய் அமைகிறபோதே
புதிய வரலாறாகவும் மாறுகிறது:
வரலாற்றின் பதற்றம்.

4 comments:

adhiran said...

நீர்காகம் ... தன் வரலாறு கூறல் !!!

ஆயிஷா said...

கவிதை நல்லா இருக்கு

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

தலைவா! கொன்னுட்டீங்க தலைவா,

Nathanjagk said...

முதல் மூன்று வரிகள் கவிதை..!