Friday, February 4, 2011

என் பெயர் சிவப்பு

ஓரான் பாமுக் எழுதிய மை நேம் ஈஸ் ரெட்- டின் தமிழ் மொழி பெயர்ப்பை மெல்லிய முறுவலுடன் படித்துமுடித்தேன். முறுவல் கடைசி வாக்கியங்களின் பலனால் விளைந்ததாகும்.

கிழக்கும் மேற்கும் அல்லாவுக்கு உரியன(இது குர் ஆனிலிருந்து), ஆனாலும் கிழக்கு கிழக்குதான் மேற்கு மேற்குதான். மத்தியக் கிழக்கின் பாரங்களும் அபாரங்களும் உண்மையில் வேறுமாதிரியானவையே. கிழக்கும் மேற்கும் என்றைக்கும் இணைய முடியாதோ என்கிற கேள்வி தொக்கி நிற்கிறது.

சாத்தானின் இருப்பு தவிர்க்க முடியாததாகிற பட்சத்தினூடே பேரறிவாளனின் பார்வைக்கோணம் பற்றிய விவாதம் ஓவியங்களூடாக பரிமாற்றத்துக்கு வருகிறது.

ஹிந்துஸ்தானத்தை அக்பர் ஆண்டுகொண்டிருந்த காலகட்டத்தில் துருக்கியில் இஸ்தான்பில்லில் கதைச் சம்பவங்கள் நடக்கின்றன. வாழ்வில் மறுக்கவே இயலாத கருதுகோள்களை அத்தியாயங்களுக்கிடையில் கதை மாந்தர்கள் தன்’மை’யப்பேச்சினூடாக வெளிப்படுத்துகிறார்கள். அடுத்த அத்தியாயத்தை யார் பேசப் போகிறார்கள் என யூகித்துப் பெரும்பாலும் தோற்பதும் சிலநேரம் வெல்வதும் வாசிக்கும்போது எனக்கு மகிழ்வூட்டிய அம்சமாக இருந்தது.

ஒரு துப்பறியும் நாவலின் சுவாரசியத்தோடும் ஓவியர்களையே வாசிக்கத்தூண்டும் விவரணைகளோடும் நாவல் விரைகிறது. இதை மொழி பெயர்த்துத தந்த ஜி.குப்புசாமிக்கு கலை வணக்கங்கள்.

கிட்டத்தட்ட சமகாலத்தில் முறையான அனுமதியுடன் காலச்சுவடு வெளியிட்டிருப்பது மகிழ்வளிக்கும் நிகழ்வாகும். இந்தப் பிரதியின் வெற்றி (அல்லது வரவேற்பினால் உண்டாகும் பெருமிதமும் பெருக்கமும்) இத்   தகு நூல்கள் தமிழில் வர ஏதுவாகும்.

 காலச்சுவடு பதிப்பகம் , தாம் இதுவரை வெளியிட்ட அவ்வளவு புத்தகங்களும் தங்கள் அரங்கில் கிடைக்கும் என புத்தகக் கண்காட்சியை ஒட்டி அறிவிப்பு விட்டிருந்ததும் மகிழ்ச்சி தந்த முக்கியத் தருணமாகும்..

புத்தகங்கள் மேல் பற்றுறுதி கொண்டோர் மகிழும் செயல்வண்ணம்.

என் பெயர் சிவப்பு
- ஓரான் பாமுக்.
(தமிழில்.ஜி.குப்புசாமி)
காலச்சுவடு பதிப்பகம்.
669,கே.பி.சாலை,
நாகர்கோவில்- 629001.
தொலபேசி-0-4652-278525

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

பூமியே உருண்டை
உழக்குக்குள் ஏது கிழக்கும்மேற்கும்?
கிழக்கும் மேற்கும் இணைந்த்தே
பூமிஉருண்டை!!

Venkatramanan said...

//காலச்சுவடு பதிப்பகம் , தாம் இதுவரை வெளியிட்ட அவ்வளவு புத்தகங்களும் தங்கள் அரங்கில் கிடைக்கும் என புத்தகக் கண்காட்சியை ஒட்டி அறிவிப்பு விட்டிருந்ததும் மகிழ்ச்சி தந்த முக்கியத் தருணமாகும்..
:-):-):-):-):-):-):-)

அன்புடன்
வெங்கட்ரமணன்

மதுரை சரவணன் said...

pakirvukku nanri.vaalththukkal