Friday, August 27, 2010

கொய்த தலையில் காணும் புன்னகை...

உடலிலிருந்து தலை பிரிக்கப்பட்ட
சடலத்துக்கு இரட்டை மரணம்.
உடலுக்கு ஒன்று
தலைக்கு ஒன்றென.

அறுத்துச் சிரம் துணிக்கும்
பொருட்கள் யாவும் விளிம்பில்
வெள்ளிப் பளபளப்பைக் கொண்டே
இருக்கின்றன.

நெடுக்கேகும் பாதையில்
திடீரென நேர்வந்து கீறிய -
கூர்மை நடுக்குறச் செய்யும்
கணத்திற்குச் சற்றே முந்தைய
சடுதியில்
உடல் உணர்ந்ததென்ன?
தலை நினைத்ததென்ன?

வெட்டுண்ட உடல்
உள்ளிருந்த உயிர்ப்பால்
துடிக்கும்போது தலை
வீச்சின் திராணியை
அச்சாய்க்கொண்டே
திரண்டுருள்கிறது.

தவறிய அதிசயமாய்த் தலைமேல்
தேங்கிவிட்டது  ஒரு புன்னகை....
அது எதன் அபத்தத்தை உணர்த்தக் கூடும்?
வாழ்வின் அபத்தம்
அல்லது
மரணத்தின்
அபத்தமல்லது சாசுவதம் .

மூளைச் செய்திகள் ஸ்தம்பித்துவிட
இமை மூட மறந்த தலை
விழிமணியில் காணும் பிம்பம்
ஒவ்வொன்றையும் கனவாகவே
காணுகிறது.

பகிராக் கனவு... பதியாக் கனவு.

* ஊடிழை - kakithaoodam.blogspot டில் வந்த ‘கனவுகள் தடை செய்யப்பட்ட உலகு’ கவிதை உள்ளிருந்து  தலைப்பும் உத்வேகமும் பெறப்பட்டது.

16 comments:

பத்மா said...

மிகவும் மகிழ்ச்சி .... தங்களின் வருகைக்கும் ..இந்த சிறப்பான கவிதைக்கும்

Unknown said...

இது நல்லாருக்கே...

Priya said...

மிக அருமையா இருக்கு, வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் said...

அருமையா இருக்கு.

dheva said...

உருக்குகிறது உங்கள் வரிகள்..அவலத்தின் உச்சத்தில் இருக்கும் புன்னகைக்கு என்ன பெயர்....

பாதிக்கிறது தோழர் கவிதை...வலுவாக.... லிங்க் கொடுத்த பத்மாவிற்கு நன்றிகள்!

குட்டிப்பையா|Kutipaiya said...

ரொம்ப நல்லா இருக்கு...

sakthi said...

வெட்டுண்ட உடல்
உள்ளிருந்த உயிர்ப்பால்
துடிக்கும்போது தலை
வீச்சின் திராணியை
அச்சாய்க்கொண்டே
திரண்டுருள்கிறது.

wow!!!!

Ashok D said...

//வாழ்வின் அபத்தம்
அல்லது
மரணத்தின்
அபத்தமல்லது சாசுவதம்//

:)

மோகன்ஜி said...

கூர்மையான வரிகள்,நண்பரே.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கொய்த தலையில் புன்னகையா?
தலைப்பு அருமை..
கவிதை?
அதை விட அருமை!!!

தினேஷ்குமார் said...

வணக்கம்
மூளைச் செய்திகள் ஸ்தம்பித்துவிட
இமை மூட மறந்த தலை
விழிமணியில் காணும் பிம்பம்
ஒவ்வொன்றையும் கனவாகவே
காணுகிறது.

பகிராக் கனவு... பதியாக் கனவு.

உயிரற்ற உடலுக்கு உயிர் கொடுத்த கவிதை நண்பரே அற்புதமாக உள்ளது
http://marumlogam.blogspot.com

ஸ்ரீராம். said...

தவறிய அதிசயம் தேங்கிய புன்னகை, ஸ்தம்பித்த மூளைச் செய்தி இயங்க மறுக்கும் உடல்...நல்ல வரிகள்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்லாயிருக்கு..

Thenammai Lakshmanan said...

மரணத்தின்
அபத்தமல்லது சாசுவதம் .//

ஆம் சிவகுமார்.. இதுதான் புன்னகைக்கும் காரணி..

பத்மா.. தலைப்பு அருமை.. வாழ்த்துகள் இருவருக்கும்.

Thenammai Lakshmanan said...

மரணத்தின்
அபத்தமல்லது சாசுவதம் .//

ஆம் சிவகுமார்.. இதுதான் புன்னகைக்கும் காரணி..

பத்மா.. தலைப்பு அருமை.. வாழ்த்துகள் இருவருக்கும்.

நிலாமகள் said...

அதிபயங்கர தருணத்து அழகிய கவிதை .