இன்று நெடு நாட்களுக்குப் பிறகு தொலைக் காட்சியில் கிரிகெட் ஆட்டம் பார்த்தேன். கறுப்பு வெள்ளைத் தொலைக் காட்சிப் பெட்டி.சமீபத்தில் 99- இல் சதத்தைத் தவறவிட்ட வீரேந்திர சேவக் இம்முறையும் 99. அடித்த சிகசர் அப்படியே இருக்க ஒரு ‘இல்லாத பந்தில்’ (நோ பால்) இந்தியா ஜெயித்துவிட்டது.வெற்றியைக் கடந்த ஏமாற்றம் சேவக்கின் முகத்தில் ஒளிர்ந்தது.
ஆடு மகன் தோனி தனது தெரிவிப்பில் அவரை வீரேந்திர சேவக் என்றே குறிப்பிட்டார். வீரு, சேவக், வீரேந்திர சேவக் எனப் பலபெயர்களில் அவர் அறியப்படுவதுண்டு.
இழந்த அணியின் கேப்டன் அவரை , ‘வீரேந்த்ரா’ என்றே குறிப்பிட்டார். கதுப்புகளில் இளமையும் செழிப்பும் பொங்கும் அந்த விக்கட் சேவகர் மற்றும் அணி வேந்தர் வேறு யாருமில்லை.
‘குமார சங்ககாரா’
Monday, August 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment