ஒரு ஊர்ல ஒரு வெண்ணிலான்னு ஒரு பாப்பா இருக்குமா... அப்ப ஒரு அழகான பட்டர்ஃபிளை இருக்குமா வண்ணத்துப்பூச்சி. அதுக்கு ஒரு குட்டி பிறந்துச்சாம். அப்ப அது அதுக்கு நெறயா தேன் குடுக்குமா. அந்த வெண்ணிலா பாப்பா அவங்க அப்பாகிட்டக் கேட்டுச்சாம், “ அப்பா... அப்பா... இந்த பட்டர்ஃபிளை நம்ம கூட வராதான்னு கேட்டுச்சாம். அவங்கப்பா சொன்னாரா , “பட்டர் ஃபிளையை நம்ம கூப்புட்டா வரும்”னு சொன்னாராம். அதுக்கு அந்த வெண்ணிலா சொல்லுச்சாம்.
“ இப்ப கூப்டா வருமான்னு “ கேட்டுச்சாம். அதுக்கு அவங்க அம்மா உள்ளருந்து வந்து அவங்க சொன்னாங்களாம் , “ பட்டர் ஃபிளை இன்னேரம் தூங்கீருக்கும்’’ னு சொன்னாங்களாம். வெண்ணிலாப் பாப்பா சொல்லுச்சாம்.
“ நா மட்டும் முழிச்சிருக்கேனேன்னு” கேட்டுச்சாம்.
“நீ பெரிய புள்ள. ஆனா ,பட்டர் ஃபிளைலாம் ... சின்ன மிருகந்தான் ம்ஹூம் சின்ன பறவைதான்.அதுனால அது சீக்கிரமாவே தூங்கிரும்.”
(அப்பா கதையோட மாரல் எழுதலாமா? - கதையோட மாரல் தான் இப்போ... என்னப்பா இதெல்லாம் போயி அடிச்சுக்கிட்டு இருக்கீங்க)
நீங்களும் சீக்கிரமா தூங்கினீங்கன்னா காலைல ஸ்கூலுக்கு வேகமா போயி மேம்ட்ட அடிவாங்காம இருக்கலாம். அவ்வளவுதான்....
* குட்டி ரேவதியின் குறுங்கதை, ‘ நிலவில் குடியேறிய மரத்து அணில் ’படித்துவிட்டு ஸ்வேதா குட்டி சொன்ன கதை.தலைப்பும் ஸ்வேதாவே...தட்டச்சாக்கம் - சிவகுமார்
Friday, August 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment