Friday, December 11, 2009

இன்று திருவண்ணாமலையில்...

குளிர் காலம். திருவண்ணாமலை மார்கழிகள் தோறும் வரவேற்றுக்கொண்டிருக்கிறது என்னை. முன்பெல்லாம் டிசம்பர்- 31 கலை இரவு நிகழ்ச்சிகளுக்காக வந்து போய்க்கொண்டிருந்தது. கலை இரவு என்கிற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிகழ்ச்சி வடிவம் அனேகமாக வழக்கொழிந்து போய்விட்டது என நினைக்கிறேன்.

சரியாக கடைசி மாநில மாநாட்டில் அவர்கள் ; ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்’ எனப் பெயர்மாற்ரியதிலிருந்து இந்த மாற்றம் தொடங்குகிறது. இனி ஒருவேளை எங்காவது கலை இரவுகள் நடந்தாலும் முந்தைய பொலிவில் நடைபெறுவது சந்தேகம்தான். தோழர்கள் களைத்துப்போய்விட்டார்கள்.

இம்முறை திருவண்ணாமலை வந்தது வம்சி புத்தக வெளியீடு வேலைகள் சம்பந்தமாக. மாதவராஜின் தீராத பக்கங்களிலிருந்து மூன்றோ இரண்டோ புத்தகங்கள் வெளிவருவது மகிழ்ச்சியாய் இருந்தது.பொறுப்பை பெரிய அளவு சிரமேற்கொள்ளாமல் புரூஃப் பார்ப்பது சுவாரசியமான அனுபவம். நேற்ரு தனிமையின் இசை’- அய்யனார் விஸ்வநாத்தின் இரண்டு கவிதைப்புத்தகங்கள் வாசித்தேன். துபாயிலிருக்கிற நண்பன் கிளம்பி இந்தியா வந்துவிட்டால் தேவலை என மனதார நினைத்தேன்.

எண்ணெய் மண்டலத்திடையே பற்றியெரியும் காதல் தீ. வாழ்வில் வந்து போகிற பெண்கள் சும்மாவும் போகாமல் செண்ட் வாசம் கிட்டத்தில் அடிக்கிற மாதிரி ஒருதடவை வந்துவிட்டுச் சென்றுவிடுவார்கள் போலிருக்கிறது.
நேசத்தின் நெய் ,மண் அகலில் இட்ட திரிச்சுடராய் மென்கருகலோடு மணக்கிறது. இருதயத்தை இரண்டாய் வெட்டி கிளியாஞ்சட்டிகள் ஆக்குவது பற்றி கற்பனை செய்தேன்.

நினைத்துக்கொண்டேன்,
’பாழுந் தனிமையில் பெட்ரோல் ஊற்றிக்கொளுத்த’.

8 comments:

ஸ்ரீராம். said...

வந்து போகும் பெண்கள் வாசத்தை மட்டும் விட்டுப் போனால் சரி....!

நேசமித்ரன் said...

’பாழுந் தனிமையில் பெட்ரோல் ஊற்றிக்கொளுத்த’.

ஆமாம் அண்ணே சரியான வார்த்தை அண்ணே

அடிக்கடி எனக்கும் தோணுறதுதான்

ஆரூரன் விசுவநாதன் said...

//அய்யனார் விஸ்வநாத்தின் இரண்டு கவிதைப்புத்தகங்கள் வாசித்தேன். துபாயிலிருக்கிற நண்பன் கிளம்பி இந்தியா வந்துவிட்டால் தேவலை என மனதார நினைத்தேன்.//


உண்மைதான்......மிக அருமையான எழுத்துக்குள்.

Nathanjagk said...

வேலைப் பளுவுக்கிடையிலும் இடுகை போட்டிருப்பது உங்களின் ஆர்வத்தை, அர்பணிப்பைக் காட்டுகிறது.
ப்ரூஃப் ரீடிங் வேலை இனிதே நடக்கட்டும்.. வரும்போது எனக்கு புத்தகங்களை அள்ளிக் கொண்டு வரவும்...

அன்பேசிவம் said...

நண்பரே! வணக்கம். உங்க அலைபேசி எண்ணோ, அல்லது மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா? :-)
murli03@gmail.com

க. சீ. சிவக்குமார் said...

வேலைப் பளுவுக்கு இடையில் செய்தாலும் செய்வன திருந்தச் செய்ய வேணும் என்கிற ஜகனின் கருத்தை கருத்தில் கொள்ள வேண்டியதுதான் - சிவா

க. சீ. சிவக்குமார் said...

வேலைப் பளுவுக்கு இடையில் செய்தாலும் செய்வன திருந்தச் செய்ய வேணும் என்கிற ஜகனின் கருத்தை கருத்தில் கொள்ள வேண்டியதுதான் - சிவா

Ayyanar Viswanath said...

நெகிழ்ச்சியாய் இருக்கிறது சிவா..