Saturday, December 5, 2009

ஆடிப்போதல்

அலைபேசி நிறுவனங்களின் செலவு தரும் செய்திகள் அல்லது இன்பம் நல்கும் செய்திகளில் இருந்து தப்ப ஒரு மார்க்கம் உண்டா எனத் தெரியவில்லை. மாதக்கட்டணம் வெறும் முப்பதே ரூபாய்தான் என ஆரம்பித்து பெண்குரல்கள். ஜோசியம் சொல்றோம், ஜோக் சொல்றோம்,ஜொள்ளு சொல்றோம், குழந்தைக்கு கதை சொல்றோம்,பாட்டுப்போடறொம் என விதவிதமாக பின்னிப்பெடலெடுக்கிறார்கள்.

ஒரு விவஸ்தை கெட்ட உறவைப்போலவும்,குடிப்பழக்க அன்பர்களைப்போலவும் நமது நிலை அறியாது அடகு வைத்து விட்டு வருகையில்,ஆயி போகையில்,அடுப்படியில் பால் காய்ச்சுகையில் என வினோத நேரங்கள் பார்த்து அழைத்து நாம் ஆவலுடன் அல்லது பதற்றத்துடன் வந்து எடுத்தால் இந்த ரெகார்டட் செய்திகள்.

கட் பண்ணிவிட்டு அடுத்து நாம் போன் செய்தால் இந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வேறொரு பதிவு செய்யப்பட்ட செய்தி வரும்.இந்த எண்ணை இப்படியான காரியங்களுக்கு அழைக்காதீர்கள்... நானெல்லாம் ரொம்பப்பாவமுங்க’ என்று பதிவு செய்துகொள்ள எதாவது ஏற்பாடு இருக்கிறதா எனத் தேடவேண்டும்.

இன்று காலையில் கழிப்பறையில் இருக்கையில் ஒரு அழைப்புச்சத்தம். ’வரும் ஆனா வராது’ என்கிற கடுமையான கண்டிஷன். வெளியே ஓடி வந்து எடுத்தால் ஆண்குரல். இது வாழ்வினிலே முதல்முறை. ஜோக் சொல்கிறது.

புது படம் ஒன்றுக்கு புக் பண்ண நயன்தாராவைச் சந்திக்கப்போன புரட்யூஷர் அவர் கேட்ட சம்பளத்தைக்கேட்டு ஆடிப்போயிட்டாராம். அதுசரி, தியேட்டரில் புரட்யூஷர் வந்து ஆடினால் ஜனங்க ஆடிப்போக மாட்டாங்களா?

நல்லஜோக்தான்.இதற்கான மாதக்கட்டண விகிதங்களைக் கேட்டுக்கொள்ளாமல் நான் உள்ளேபோய் வெளியே போக ஆரம்பித்தேன்.

ஆடிப்போகவைக்காம அடங்கமாட்டார்கள் போலத்தான் தெரிகிறது.

8 comments:

க. சீ. சிவக்குமார் said...
This comment has been removed by the author.
விஜய் said...

1909 என்ற எண்ணுக்கு போனே செய்து do no disturb ஆப்ஷனை ஆக்டிவேட் செய்ய சொல்லுங்கள்.

45 நாட்களுக்கு பிறகு எந்த இம்சையும் இருக்காது

விஜய்

Nathanjagk said...

விஜய் ​சொல்வது ​போல் ​செய்யுங்க.
ஆட்​டோ ஏன்ஸரிங்க ஆப்ஷன் கூட இருக்கு... கட்டணமும் இருக்கு!

நல்ல ப்​ளோ!

Nathanjagk said...

நள்ளெண் யாமம் - புது லேஅவுட்டில் பளபளக்கிறது! அற்புதமா இருக்கு முகப்போவியம்!! பிளாக்கும் கசகசவென்றில்லாமல் கண்ணுக்கு இதமா இருக்கு.......... இப்படியெல்லாம் யாருமே சொல்லலியாண்ணே?

ஸ்ரீராம். said...

என்ன.. தோற்றம் மாறிவிட்டது..?

Rajan said...

கக்கூஸ்ல ஆணி அடிச்சு ஒரு ஸ்டேண்டு தயார் பண்ணி பக்கத்துலையே ஒரு பிளக் பாயிண்டும் செட் பண்ணிருங்க ....

வேலைக்கு வேலையும் நடக்கும் ,
புளோவும் விட்டுப் போகாது

நேசமித்ரன் said...

புதுப்பொலிவோடு மிளிர்கிறது வலைத்தளம்

நல்ல வேளை இந்த அழைப்புகள் தீண்டாத தூரத்தில் வைத்திருக்கிறது காலம்

க. சீ. சிவக்குமார் said...

விஜய் சொன்ன யோசனைக்கு நன்றி!
ரொம்பவும் இம்சை கொடுக்கும் போது
செயல்ப்டுத்துவிட வேண்டியதுதான்
1909-ஐ. சமயத்தில் யாரும் அழைக்காத
போது இதுஆறுதலாக வேறு இருந்து தொலைகிறது. மனக்குரங்குக்கு ஒரு
1009 இருந்தால் இன்னும் தேவலை
-க.சீ.சிவா