புத்தாண்டு தினம் வருகிறது. நள்ளெண் யாமத்தில் ஒரு புது விண்மீன் தெரிகிறது என்றோ அது புதிய ஆண்டில் குளம்படி எடுத்து வைக்கிறது என்று எழுதவோ என்ன அற்புதமான வாய்ப்பு.
வாழ்த்துக்கூற வேண்டும் என நினைத்ததும் காலண்டர் பார்க்கத்தோன்றியது. அது தமிழ் மனப் பழக்கம். வியவ, பவ என எதையாவது எழுதி வைத்திருந்தால் அதைச் சொல்லி வாழ்த்தணுமில்லியா அதற்காக. அப்புறம் இது ஆங்கில ஆண்டு
என ஞாபகம் வந்தது.
ஆங்கில ஆண்டு என்று சொல்வதும் அடிமை மனமே இல்லையா... கிருத்துவ ஆண்டு.உலக நடப்பு ஆண்டு.
ஆகவே 2010 என நினைவும்... யாண்டு பல ஆயினும் நரை இல ஆகுக... என்கிற வாக்கியமும் நினைவு வர இந்த வாழ்த்து. எண்ணற்ற வாழ்த்து.
உடுக்கள் போல அளவிலியாய் அண்டங்களில் திரிகிற எண்ணிலும் என்னிலும் ஒன்றைக் காணும் எத்தனிப்பில் பொருளுள்ள அல்லது பொருளற்ற சடங்கை புன்னகையுடன் நினைவு கூர்ந்து அன்பின் பகைவர், பகிர்வர்,பதிவர், சுற்றம்,நட்பு, அடையாத் தொலைவின் ஒலி ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ளோர் யாவருக்குமாக என்றன் எளிய வாழ்த்து. வலிந்து பெறப்பட்ட கனிவிலும் கனவிலும் முகை விரித்த வாசச் சிறுமலர்.
Tuesday, December 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
வாழ்த்துக்கு நன்றி, நிறைய எழுத வாழ்த்துக்கள்
அன்புடன்
வாழ்த்துக்களில் கொஞ்சம் எடுத்து உங்களுக்கே மீண்டும்...
புத்தாண்டு வாழ்த்துகள்...!
புதிய தடம் நகரட்டும் எழுத்தின் வாசனை .
நுகர்ந்து ஒளிரட்டும் திரை இசை பிம்பங்கள்
அண்ணே ரொம்ப சந்தோசமா இருக்கு உங்க வாழ்த்து பார்த்து
இந்த பதிவுக்கு எதுனா கோனார் நோட்ஸ் கிடைக்குமாண்ணே...
ராசிபலன் உள்ள காலண்டர், பயணக்குறிப்புகளுக்கு என்று வாங்கி கதைக் குறிப்புகளாலும் பத்திலக்கங்களாய் மனிதர்களும் நிரப்பும் டைரிகள், அபத்த எஸ்எம்எஸ்கள், பழைய காலண்டர் கடவுளை எங்கு புதைக்க என்ற இம்சை, இது லீப் ஆண்டா என்ற கேள்விக்கான பதிலில் தொடரும் நாலாம் வாய்ப்பாடு எல்லாம் சித்திக்க, அத்தைக்க, அக்காக்க வாழ்த்துக்கள்!
அண்ணா..இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
புத்தாண்டு வாழ்த்துக்கள் ....
kadaisi yezhu varihal reamba pidichiruku siva.
Post a Comment