தர்ம புரியில் வேனில் வைத்து வேட்பாளரை விஜயகாந்த் அடித்ததாக செய்தியும் (தொலைக்)காட்சியும் கிடைத்தது. மறு மறு ஒளிபரப்புகளில் அவர் அடித்துக்குமுறுவதுபோல அக்காட்சி சித்தரிக்கப்படுகிறது. அது தவிரவும் அடித்து உதைப்பு, அடித்துத் துவைப்பு என அளவுக்கு மீறிய வார்த்தைகள் பிரயோகிக்கப் படுகின்றன. இக்காட்சி அனேகமாக ‘’கொல பண்றாங்கப்பா! அய்யோ கொல்றாங்களே!’’ அளவுக்கு ஒளிபரப்பப்படலாம் என்பது என் கணிப்பு.
நல்லவேலையாக பாண்டியன் என்று விஜயகாந்த்தால் அழைக்கப்பட்ட பாஸ்கரன் விஜயகாந்த்தை திருப்பி அடிக்காததன் மூலம் ராசாபாசம் பாதி மட்டுப்பட்டுவிட்டது.
மதுரைக்காரர் என்கிற அளவில் ‘பாண்டியன்’ என்கிற பெயர் ரத்தத்திலும் சத்தத்திலும் ஊறியதாகும். ஒருவேளை பாஸ்கரனை தனிச்சந்திப்புகளில் விஜயகாந்த் ‘பாண்டியன்’ என்றுதான் அழைத்துக்கொண்டிருந்தாரோ என்னவோ?... பாண்டியன் தவறு செய்கிற இடத்தில் அல்லது சரியே செய்கிற பட்சத்தில் கூட செல்லமாக அவ்வப்போது தட்டுவதை விஜயகாந்த் வழக்கமாகக் கொண்டிருக்கலாம். அடித்த கையும் உதைத்த காலும் சும்மா இருக்குமா?
கிரிகெட் ஆட்டங்களில் ஸ்டம்பு கேமரா இருப்பதுபோல வேனின் பிரச்சாரச் செவ்வகத்தை ஒட்டி ஒரு கேமரா இருந்தால்தான் உண்மை நிலை விளங்கும். செய்திகளின் போது நிஜமான வேகத்தில் ஒளிபரப்பவேண்டுமே தவிர ரீ-ப்ளே, ஃப்ளர்ப், மிகை இயக்கம், தாழ் இயக்கம், மிசைக்குரல் போன்ற சினிமா சார்ந்த தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திச் செய்தி வெளியிடுவது தவிர்க்கப்படவேண்டும்.
எனக்கென்னவோ ‘ச்சே பேசாம இருடா... ’ என்கிற தொனொயில் விஜயகாந்த் வேட்பாளரின் வலதுதோள் பட்டையை ஒன்று அல்லது இரண்டு முறை உந்தித் தள்ளியதுமாதிரித்தான் பட்டது.
பாஸ்கரனே இதுபற்றி முறையிடாத போது நானும் சொல்வதற்கு ஒன்றுமில்லைதான். ஆனால் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்குத்தான் தெரியும் உண்மை எதுவென்று.
கட்சிக்காரர்களை அடிக்கும் உரிமை எடுத்துக்கொள்கிற அளவில் விஜயகாந்த் இருப்பாரேயாகில் அவர் மக்களை என்னவெல்லாம் செய்வார் என நினைக்கும்போது திகிலாகத்தான் இருக்கிறது. அடிப்படைச் செயல்பாடுகள் இயல்பூக்கம் உயிரியல்பு ஆகியவற்றின் ஆதாரத்திலேயே விஜயகாந்த் இப்படி ஒரு ஆளாக இருப்பாராகில் மக்களாகிய நாம் சொல்லிவிடவேண்டியதுதான்.
தமிழ்ல நமக்குப் பிடிக்காத வார்த்தை. ‘மன்னிப்பு!’ ஹ்ஹா....ங்.

1 comment:
'எங்க ஆளைத்தானே நான் அடிச்சேன்..இப்ப அதுக்கென்ன? எங்கிட்ட அடி வாங்கினவன் மகாராஜா ஆயிருவான்' என்று விஜயகாந்தே சொல்லிவிட்டபிறகும் உங்களுடைய சந்தேகம் என்ன?.....தமிழனுக்கு எப்படியெல்லாம் 'தலைவர்கள்' கிடைக்கிறார்கள் பாருங்கள்.
Post a Comment