Monday, April 25, 2011

ஓய்வென்னும் உய்வு...

விஜய் தொலைக் காட்சியில் ’நீயா? நானா?’ நிகழ்ச்சி கிட்டத்தட்ட ஐந்து வருடங்களை நிறைவு செய்கிறது. அதன் முதலாவது நிகழ்ச்சியில் பங்கேற்பாளராகக் கலந்துகொண்டது நினைவுக்கு வருகிறது. அது போக்குவரத்துத் தொழிலாலர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி. இப்போதும் வருகிற மே-1 தொழிலாளர் தினத்தை ஒட்டி ஒளிபரப்பாக இருக்கிற நிகழ்வில்  சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றிருக்கிறேன்.

லீவே போடாமல் பணி செய்கிற ஆட்களும் நிர்வாகத்தை டபாய்த்து லீவு போடும் ஆட்களும் பங்குபெற்ற சுவாரசியமான நிகழ்ச்சி. இதற்குப் புறத்திலும் இதன் அன்னியிலும் இரண்டாயிரத்தை ஒட்டிய வருடங்களில் இருந்து ஹெச் ஆர் எனப்படும் டிபார்ட்மெண்டின் வருகையையும் அதை யொட்டிய சரியத் தொடங்கியிருக்கிற தொழிற் சங்கங்களின் வீழ்ச்சியும் சமகாலப் புள்ளியில் இணைவது குறித்த ஆச்சரியக் கேள்வியை ஓரிரு வாக்கியங்களில் பதிவு செய்திருக்கிறேன். மின் தடங்கலும் நுண் தடங்கலும் ஏற்படாதவர்கள் நிகழ்ச்சியைப் பாருங்கள் என  அன்பார்ந்த முறையில் தகவல் விடுக்கிறேன்.

3 comments:

selventhiran said...

உள்ளேன் ஐயா!

Anonymous said...

சொல்லதயங்கி சொன்ன அந்த வரிகள் அருமை.
கலை, உறவுகள், இலக்கியம் மூலமாக வரும் இன்பங்களுக்கு மாற்றாக workaholics என்ன வச்சுருப்பாங்க ?

த. முத்துகிருஷ்ணன் said...

பார்த்தோம் அய்யா....
குறுகிய நேரத்தில் நச்சுன்னு உங்க கருத்தை சொன்னீர்கள்.
(தொல்லைக்காட்சி எப்படி)