Wednesday, December 29, 2010

பனிக்காலை

காலைப் பனியை
அறுவடை செய்ய
வந்திருக்கும்
கருக்கருவாள் போல
வந்திருக்குது கதிரவன்.

நுனித் திவலைகளை
ஆவியாக்கி
அனுப்பிவிட்டு
திளைத்தாடுது
தாவரங்கள்.

கடவு திறந்ததும்
குதூகலித்துச்
செல்கின்றன
மேய்ச்சலுக்குக்
கால்நடைகள்.

அப்புறமும்
காலை
முடிந்துபோகிறது.

2 comments:

ராகின் said...

//அப்புறமும்//

இங்குதான் இருக்கிறதோ சூட்சுமம்.. :)

Nathanjagk said...

கவிதை நல்லாருக்குங்க கவுண்டரே..!