Monday, November 15, 2010

இன்றைய ஆச்சரியம்...

நண்பனுடன் கார் டியூப் வாங்குவதற்காக டயர்க் கடைக்குச் சென்றிருந்தேன். 360 ரூபாய் பில்லுக்காக நான்கு நூறு ரூபாய்கள் கொடுத்ததும் கல்லாப் பெண் நாற்பது ரூபாய் மீதி தந்தார்.அது நான்கு செம்பு டோக்கன்களைப் போலிருக்க நண்பனைப் பார்த்து , ‘’என்னப்பா இது?’’ என்றேன்.

பத்து ரூபாய் என்றான் அவன். சரி சில்லறைத் தட்டுப்பாட்டுக்காக அவர்களாகத் தயார் செய்தது போலிருக்கிறது எனக்கருதி, ‘’இதுக்கு இவங்க கிட்டவே சாமான் வாங்கணுமா?’’ என்று கேட்டேன்.

‘’ஐயோ இது பத்து ரூபா காயின். தெரியாதா? ’’ என்று கையில் கொடுத்துவிட்டான். அதை வியந்து போற்றி பர்சில் வைத்துக்கொண்டேன். (இதன் மூலம் பாவப் பட்டவர்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால்.... நாட்டுல பத்து ரூபா நாணயம் பொழங்குதுங்கோவ்...)

அடுத்த பத்தாவது நிமிடம் ஒரு கடையில் ஐம்பது ரூபாய் செலவுக்கு நூறு ரூபாய் எடுத்துக்கொடுத்தேன் . சில்லறை இல்லை என்றார் கடைக்காரர். பாக்கெட்டைத் தேடியதில் சரியாக ஐந்து பத்து ரூபாய்த் தாள்கள் இருந்தன. ஒன்று குறைவாய் இருந்திருந்தாலும் அந்தக் காசு பறிபோயிருக்கும்.

விரும்ம்பின பொருள் அல்லது கிடைத்ததும் விருப்பத்தைப் பெறுகிற பொருள் மகிழ்ச்சிதரத் தக்கது. கைகூடிய பொருள் தக்கவைப்புக்கு உள்ளாவதுதான் உண்மையான அதிர்ஷ்டம்.

(ஒரு பய, பத்து ருவா கெடச்சுட்டா என்னென்ன பேச்செல்லாம் பேசறான் பாருங்க)

3 comments:

பத்மா said...

இவ்ளோ அப்பாவியா சார் நீங்க?
ஒரு பாக்கெட் 10 ரூபா காய்ன்ஸ் வேணுமா?

க. சீ. சிவக்குமார் said...

நன்றி பத்மா! - இப்போதைக்கு இனி பத்து ரூபாய் காயின்ஸ் அவசியப் படாது என நினைக்கிறேன். எனக்கு வேண்டியது காற்றிடம் கடன் வாங்குவதற்கு ஏதேனும் ஏற்பாடு...

பக்ரீத் வாழ்த்துக்கள்.

ஆர்.பி.சிங் said...

ஜனவரி 2011 உயிர் எழுத்து இதழில்" உங்களின் காட்டாறுக்கும் உண்டு கிளைநதிகள் " படித்தேன்." காட்டாற்றுக்கும் " என்றல்லவா வரவேண்டும்! உங்களின் அதிதீவிர ரசிகன் என்பதால் இதைத் தெரிவிக்கிறேன்!மற்றபடி அருமையிலும் அருமை!!