ஏ.கே. வீராசாமி. ஐநூறு படங்களுக்கு மேல் நடித்த திரைக் கலைஞர். குறிப்பாக முதல் மரியாதை படத்தில் , ‘சாமீ! எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்’ என்கிற வசனத்தின் வாயிலாக மனங்களில் மங்காத இடம்பிடித்து முதல் மரியாதை வீராச்சாமி என்றே அறியப்பட்ட குணசித்திர நடிகர். எண்பதுக்கும் அதிகமான அகவையில் ஆகஸ்ட் 22, 2010 இல் காலமாகிவிட்டார்.
அவர் சா. கந்தசாமியின் கதையான ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ குறும்படத்தில் நடித்திருக்கிறார். அதை பொதிகை தொலைக்காட்சியில் பார்த்தேன். அவர் அமரர் ஆன செய்தியை 100.5 கோடை பண்பலையில் கேட்டுத் தெரிந்துகொண்டேன். பிரசார் பாரதி பிரசார் பாரதிதான். அதன் மீதான பராதிகள் தனி.
வீராச்சாமிக்கு பெரிய வருத்தங்கள் ஏதுமற்ற அஞ்சலி.
Wednesday, August 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
ஐநூறு படங்கள் என்பது ஒரு மிகப்பெரிய சாதனைதான் . அவர் இறந்த செய்தியை நானும் அன்று அறிந்தபோது அவரின் முதல் மரியாதை நடிப்புதான் எனக்கு ஞாபகத்தில் வந்து நின்றது .
என்னங்க இது பெரிய/சிரிய வருத்தங்களற்ற அஞ்சலி. ஒரு மனிதனின் மரணம் கொஞ்சம் கூட வருத்தபடுத்தவில்லையா?. ரொம்ப படிப்போ?
ஆறுமுகம்
ஹைதராபாத்
ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவனில் ஐஸ் கடை முதலாளியாக அற்புதமாக நடித்திருப்பார்.
ஒரே ஒரு படத்தில் பேசின ரெண்டு வரிகளுக்காக இன்றளவிலும் ஒரு நடிகன் நினைவு கூறப்படுவது மிகுந்த வியப்பிற்குரியது.ஆனால் அவர் 500 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் என்பது எனக்கு புதிய செய்தி.நீங்களாவது அந்த கலைஞனின் மரணத்தை பதிவுசெய்திருக்கிறீர்கள் என்பது போற்றுதற்குரியது.
ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவனில் ஐஸ் கடை முதலாளியாக அற்புதமாக நடித்திருப்பார்.
Post a Comment