அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். இதைச் சொல்லுவதற்கு சாக்லெட் செலவு அல்லது பிறைவடிவ (பழைய) ஆரஞ்சு முட்டாய் செலவு கூட இல்லை என்பதாலேயே இதைத் தெரிவித்தலும் ஆகிறது. நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை என்பது ‘விடுதலை விரும்பி’களுக்கு கொஞ்சம் கஷ்டமாகக் கூட இருக்கும்.
அவர்களுக்கு விடுதலை தினமும் மற்றுமொரு நாளே. இது திங்கள் செவ்வாய் என இதர நாளில் வந்து ‘தொலைந்தால்’ என்ன என்று அவர்கள் நினைக்கக்கூடும்.காலண்டர்களை மாற்ற முடியாது. விடுதலை நாளை முன்னிட்டு காலத்தை மாற்ற பாரத மணித்திரு நாட்டு மணிகள் (ஆண்மணி/பெண்மணிகள் ) என்ன செய்தோம் என்பதை கடுமையாக யோசிக்கவேண்டி இருக்கிறது.
வெள்ளையரே ஆண்டிருந்தாலும் இன்றைய நிலையிலிருந்து பெரிய மாற்றம் இருந்திருக்குமா தெரியவில்லை. ஆனால் இந்தியப் பெயர்களைச் சொல்லி தாய்மொழிகளில் ரத்தம், தம்பி, அண்ணன் என்றெல்லாம் வாக்குச் சேகரிக்க முடிவதும் முயல்வதும் விடுதலையின் ஒரு பகுதிதானே?
பின்னே சுதந்திரம் என்பது சுக்கா?மிளகா?
Saturday, August 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//வெள்ளையரே ஆண்டிருந்தாலும் இன்றைய நிலையிலிருந்து பெரிய மாற்றம் இருந்திருக்குமா தெரியவில்லை/
ம்ம்ம்ம்......நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்ள இதைவிட நல்ல வார்த்தைகள் கிடைக்காதுங்ணா.
//பின்னே சுதந்திரம் என்பது சுக்கா?மிளகா? //
சமரசம் செய்து கொள்வது என்ற முடிவு எடுத்தபின் சுக்கென்ன மிளகென்னங்ணா?
யோசிக்க வைக்கிறது!
Post a Comment