எனக்குப் பைத்தியம்
பிடித்துக்கொண்டிருக்கிறது.
அல்லது
நடந்த ஒரு
செயலை மறந்து விடுகிறேன்.
எதிரில் இருப்பவரை
நிஜமாகவே எதிராளி ஆக்கி
விடுகிறேன்.
என்னைப் பாராட்டிய
இரண்டாம் நிமிடம்
அவர்களது அவதூறுக்கோ
இழிசொல்லுக்கோ
கூடை கூடையாய்
இடம் வைக்கிறேன்.
அழித்து எழுத வகை இருப்பின்
எந்த இடத்திலும் திரும்பிச்
சென்று நற்பெயர் படைக்க
ஏதுவாகத்தான் இருக்கும்.
யோசித்து யோசித்து
மாய்ந்ததில்
பிறந்தே இருக்கக்கூடாது
என்கிற
புத்திவந்த போது
நான் எல்லா அவப்பெயர்களுடனும்
அவனியில் இருக்கிறேன்.
கொஞ்சம் நோய்
நிறைய நொய்மை
எப்பொழுதாவது கொஞ்சம்
நம்பிக்கை.அவ்வளவே நான்.
Saturday, March 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கொஞ்சமல்ல, நிறைய நம்பிக்கை வையுங்கள்! நாங்களும் வைத்திருக்கிறோம், நீங்கள் இன்னும் உயரத்தை அடைவீர்களென்று!
மனோ துக்கனின் கவிதை வடிவம்...!
Post a Comment