Friday, March 19, 2010

நல்லூழ் பற்றிய கற்பிதம்

மலந் துடைத்த கற்களை
மழைக் காலம் கழுவிப்
போகும்...
பின்னும் வருமொரு வருமொரு
மாங்கனியின் காம்புத்
துவர்ப்பில்
முனை நக்கிக் கூவுகிறது
ஒரு குயில்
காக்கைக் கூடு தேடி
அண்டங் காத்து.

2 comments:

நேசமித்ரன் said...

அண்டங் காத்து என்பது கற்பிதமாக முடிக்கப் பட்டிருக்கிறது

அருமை அண்ணே

KarthigaVasudevan said...

" நள்ளெண் யாமம் "

யாமம்னா இரவு ...நள்ளெண் யாமம்னா என்ன அர்த்தம்!!! விளக்கம்...ப்ளீஸ்