Friday, February 26, 2010

ஆண்டு விழாக்கள்

நேற்று முந்தா நேற்று மாலைகளில் வேறுவேறு பள்ளிகளின் ஆண்டுவிழாக்களில் பார்வையாளனாகக் கலந்துகொண்டேன். இரண்டும் மெட்ரிகுலேசன் பள்ளிகள்.பொதுவாக பல ஊர்களின் பள்ளிகளின் ஆண்டுவிழாக்களைப் பார்த்ததில் மேதினியில் இரண்டுவகை.
ஓரளவு திட்டமிட்டு நடத்தி ஒன்பது பத்து மணிக்குள்ளாக வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடுகிறவர்கள் ஒருவகை. இன்னொரு ரகத்தினர் பழங்கால கோயில் விசேச அமைப்புகளில் பங்குகொண்டிருந்தவர்களின் வாரிசுகளாயிருந்து பள்ளி நடத்துகிறவர்கள்.உற்றார் சான்றோர் பெருந்தகைகள் வந்து இவர்களை வாழ்த்தி முடிய பத்து மணி ஆகும். அதற்குப்பிறகு குழந்தைகள் பரிசுவாங்கி... குத்து மற்றும் சூத்துப்பாடல்களுக்கு ஆட்டம் போட்டு கலைந்து களைத்துச் செல்ல  மணி ஒன்றோ இரண்டோ ஆகிவிடும்.
ஒவ்வொரு குழந்தையும் அந்த நான்கு நிமிட ஆட்டத்திற்காக ஐநூறு முதல் இரண்டாயிரம் வரை செலவு வைக்கிறார்கள். மகனாட மகளாடப் பார்த்து மகிழும் பெற்றோருக்கு அதுபற்றி குற்றச்சாட்டுகள் இல்லை: அது வேண்டியதுமில்லை.
மகிழ்ச்சியைப் பறித்துக்கொள்ள இன்றைய சூழலில் எவ்வளவோ உள்ளன. நாம் அகமகிழ உள்ளவை சில சந்தர்ப்பங்கள்தான். மிகமகிழவே செய்வோமாக.
ஆட்டத்துக்கு ஒலி பரப்பப்படுகிற பாடல்களை மட்டும் அதன் எழுத்து வடிவினை பள்ளி நிர்வாகிகள் படித்துவிடுவது உத்தமம்.
ஏனெனில் மனதில் என்னைப்போல எந்நேரமும் காமம் தேக்கிய ஏராளமான பாவிகளும் கலந்துகொள்ள வாய்ப்புள்ள நிகழ்ச்சி, இந்த ஆண்டுவிழா என்பது.இரண்டு நிகழ்ச்சிகளிலும் ஒலிபரப்பி ஆடப்பட்ட பாடல் ஒன்று...
 ‘ஊம்ப ஜாலே... ஊம்ப ஜாலே...’

10 comments:

♠ ராஜு ♠ said...

இந்த எள்ளல்தான்யா உங்ககிட்ட புடிச்சது..!

ஈரோடு கதிர் said...

//அது வேண்டியதுமில்லை.//

ஆமாம்...

ஜீயெஸ்கே said...

இதெல்லாம் அவங்களுக்கு எறும்பு ஊர்ன மாதிரி கூட இருக்காது தலைவா!

ஆரூரன் விசுவநாதன் said...

செவிட்டில அறையற மாதர இருக்குது. ஆனாலும் இவனுங்களுக்கு இது பத்தாதுங்ணா.....

ஜெகநாதன் said...

குறுக்கு​வெட்டி நுண்ணோக்குகிற இம்மாதிரியான இஸம் தேவையான ஒன்று. மாறுபட்ட சிந்தனைகளுக்கும், ​செயல்களுக்கும் வழிவகுக்கிறது (முளி​பெயர்க்கவும் படுகிறது) Wild ideas என்கிற பெயரில் கண்டமேனிக்கும் திங்க் பண்ணி ஒழுங்கமைவுள்ள திட்டங்களை பெறும் யுக்தி கார்ப்பரேட் கலாச்சாரத்தில் காணலாம்.
இருந்தும் 'தூம் மச்சாலே' என்பதன் லிங்க வடிவம் சற்றே அதிர்ச்சியாக இருக்கிறது. ஒலிப்பெருக்கிகள் நுட்பம் குறித்தும், ஒலி வாங்கிகளின் தெளிவு குறித்தும் கேள்வி எழுப்பலாம்.
:))

க. சீ. சிவக்குமார் said...

sorry jakan extreemly sorry. i think its proplem of my sexual ... E N T.- SIVA.

ஜெகநாதன் said...

Why sorry..???
We enjoyed your irony very much..!
Cheers!!!

Sexual ENT..? quite interesting anna!

ஜெகநாதன் said...
This comment has been removed by the author.
ஜெகநாதன் said...

இது மாதிரி ENT பிரச்சினையுள்ள பாடல்கள் (காதுகள்??) சில:
'மலை மலை மருதமலை' பாடலில் வரும் ஜதி... 'தங்கச்சினக்கும் தங்கசினக்கும்..' இதில் னகரம் நகரமாவது ENT பிரச்சினையில் தான்.

'யப்பா யப்பா ஐயப்பா' என்ற பிரபுதேவா பாடலில் 'எம்பணம் பணம் பணம் உம்பணம் என் பணம்' என்ற வரிகளில் 'உம்பணம்' ​வேறு மாத்திரை அளவுகளில் ஊம்ப-சாலே ஜ(ஜா)தியில் ஒலிக்கும்...!

செல்வேந்திரன் said...

பழங்கால கோயில் விசேச அமைப்புகளில் பங்குகொண்டிருந்தவர்களின் வாரிசுகளாயிருந்து பள்ளி நடத்துகிறவர்கள் // ஹா ஹா சூப்பருண்ணா!