மவுனம் கலைய ஒரு கிறீச்சொலி
பேச்சு ஆரம்பமாகி
குவளையில் சரிகிறது
தனக்கென
கவலைகளற்ற ரசம்.
பேச்சரவத்தின் ஊடாக
ஆகாயத்தில் தொக்கி நின்ற
பாடலொன்று கூட்டத்தினரின்
தொண்டை ஒன்றினுள்
வளை அறுக்கிறது.
வியாபித்த குரலைச் சுற்றி
தோண்டத்தீராத பாடல்களின்
கண்ணிகள் சலனித்திசைகின்றன.
ஒருவர் எழுந்தாடுகிறார்.
ஆடுகிற அவர்
ஆட்டுவிக்கிறவராகிறார்.
தூங்கிய பின்னிரவின் பற்பல
விழிமூடல்களில் ஆட்டத்தின்
களைப்பு அனைவரையும்
தொற்றுகிறது.
அனைவரும் மறுநாட்காலை
வேறுவேறு நேரங்களில் தங்களது
சூரியனை எழுப்புகிறார்கள்.
Saturday, February 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ச்சீயர்ஸ்....!!
Coinages வசீகரிக்கிறது.
நீங்க ஆடியிருக்க மாட்டீங்க.. குடிச்சிக்கிட்டே படிக்கிற ஆளாச்சே.. ச்சே!
வீராவேசம் கொண்டு ஆடுகிறவர்களுக்கு வழிவிடவேண்டியதுதான்.
பதிவர் தர்மம் கலக்கல்
Post a Comment