கனி தரும்
விறகானால் கரிதரும்
கன்று ஒன்றை
வேலி ஓரத்தில்
நடுகிறார் உழவர்.
பூமிக்குள் ஓடும்
வேர்
அண்டை வயலானின்
பரப்புக்குள்
விதவித விரல் நீட்டி
பலனை அபகரித்துக்
கொணர்ந்து சேர்க்கும்
என்பது
ஆழ்மனதின்
அறியாக் கனவாக
இருந்திருக்கக் கூடும்.
உறுதி சொல்வதற்கில்லை-
உழவரும் அப்பாவி.
பூவெடுத்த நாளின்
மரப் பருமன்
அயலானது ஆகாச எல்லையில்
வட்டம் விரிக்கிறது.
பட்டா எண்கள்
கிஸ்தி
சிட்டா அடங்கல்
முதலியன அறியா
மூட மரம்
பலனெடுக்கும் நாளையிலே
குருதி பார்க்கக்
காத்திருக்கிறது.
Tuesday, January 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ஏனுங்க,அந்த மரம் உங்க தோட்டத்துல இருக்குதா? இல்ல பக்கத்து தோட்டத்துல இருக்குதா?
//பட்டா எண்கள்
கிஸ்தி
சிட்டா அடங்கல்
முதலியன அறியா
மூட மரம்
பலனெடுக்கும் நாளையிலே
குருதி பார்க்கக்
காத்திருக்கிறது.//
அண்ணா..நல்ல கவிதை..
இதுவே சிறுகதையா இருந்திருந்தா நல்ல நகைச்சுவை (உங்க ஸ்பெஷல்) ஆகியிருக்கும்.
siva ungaloda kavithai padithuttu pinnutam poda vanthen anga gsk elzhuthiruntha comment enakku payengara siryppu vanthuruchu.ஏனுங்க,அந்த மரம் உங்க தோட்டத்துல இருக்குதா? இல்ல பக்கத்து தோட்டத்துல இருக்குதா?
hahaha
முடிவு கச்சிதம்.
Post a Comment