Friday, January 15, 2010

குளிர்

தகரத் தரைமேல் அந்தரத்தில்
நின்று
சிதறிய தானியம்
பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்.
பிரிவுப் பெருமரக்
கிளையிற் கட்டிய கயிறு
என் கூண்டின் வளையத்தை
விரல் சுற்றிப் பிடித்திருக்கிறது.
உறைபனிக் காலத்தின்
மேவிய
குளிரிருட்டு கம்பிகளின்
இடை  வெளியில்
காற்றெனப் புகுந்து நடுக்குகிறது.
வேண்டும் ஒரு போர்வை
உடல் வெப்பம்
ஒரு கனப்பு அடுப்பு
பருகச் சூடாய் ஒரு பானம்
அல்லது
இடையில் அறுபடாத
நல்நினைவுக் கண்ணி.
எல்லாக் கம்பி இடைவெளிகளையும்
சன்னலாகப் பாவித்த
சேய்ப் பறவை
ஏற்கெனவே
இருட்டை வெறித்துவிட்டு
கம்பி ஒன்றினை
நகங்களால் கவ்வி
சிறகு போர்த்தி
உறங்கிக் கிடக்கிறது.
அதன் கீழிமைக் கண்ணு நீரை
குளிர் காற்று வந்து
மெழுகுக் கற்பூரமாக்கிப்  பின்பு
இல்லாமலும் ஆக்குகிறது.
மீறும் கனவில் நீ வந்து
குளிரை விரட்டலாம்.

6 comments:

Unknown said...

siva remba arumaiyana kavithai chellam.continue your writing.

ny said...

எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!!

Unknown said...

To get somthing good we should leave somthing so dont worry dear
take it in a positive way .cheerup

adhiran said...

\\இடையில் அறுபடாத
நல்நினைவுக் கண்ணி\\

தொப்பலாய் நனைத்த மழையைக்கொல்லும் மௌனப்புலம்பல்.
கப்பலாய் கிழித்த நினைவைக்கொல்லும் கண்நீர்த்தளும்பல்.

good one siva.

adhiran said...

இடையில் அறுபடாத நல்நினைவுக்கன்னி .. இல்லையா அது?!

Nathanjagk said...

..ளிருது!!
குருவிக்குஞ்சின் கண்ணீர் பதங்கமாதல் ​போல எல்லாக் மனக்கிலேசங்களும் ​தொலைந்துவிட்டால், குளிருக்கு கவிதைகள் எரித்து குளிர்காயலாந்தான்.

ந.யாமத்தில் ஏற்கனவே ஒரு குளிர் கவிதை படித்த நினைவு - அது வாதையை​சொன்னதல்லவா?