எய்ட்ஸ் நோய் வந்தவர்களுடன் என்னென்ன விதமாக சகவாசம் வைத்துக்கொள்ளலாம் , எந்தெந்த விதமாக பரிவு காட்டலாம் என தமிழக அரசு ‘எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம்’ (இதன் அங்கீகரிக்கப்பட்ட பெயர் வேறாகவும் இருக்கலாம். புரிந்துகொண்ட அளவில் இப்படி எழுதுகிறேன்) விதவிதமாக விளம்பரம் செய்து மக்களிடம் அறிவைக் கொண்டு சேர்க்கிறது.
சு.சி.பர்னாலாவும்(இவரை மறந்திருக்க மாட்டீர்கள்தானே:நம் கவர்னர்) மு.க வும் தீவுத்திடலில் உரையாற்றவில்லையே தவிர எய்ட்ஸை வேரோடு களைதல் ,தவறி பாதிப்புக்குள்ளாகி்விட்ட மக்களை ஆரோக்கியமுடன் பேணுதல் என வாரியம் முடிவெடுத்து கருத்தரங்கங்கள், புள்ளி ராஜா காலந்தொட்டு விளம்பரங்கள் , ஆவண(ம்) செய்தல்கள் என பல அளவில் செயல்பட்டு வரும் நாளது நாட்களிலே....
(சுஜாதாவின் ‘நகரம்’ கதை நினைவுக்கு வருதல் தவிர்க்க வுடியவில்லை) மதுரை அரசு மருத்துவமனையில், நாமக்கல்லைச் சேர்ந்தவரும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட நிறைசூலியாகப்பட்டவருமான விஜயலட்சுமிக்கு பிரசவம் பார்க்காமல் புறக்கணித்திருக்கிறார்கள்(செய்தி: ஜூனியர் விகடன்.17.01.2010).
பிறகு சுயமாக தனக்குத்தானே முக்கிவேதனித்து மகவு ஒன்றை விஜயலட்சுமி் ஈன்றுவிட்டார்.
பாவம் !படித்த மருத்துவர் செவிலியர் உட்பட யாருக்கும் ‘பிரசவம் பார்த்தால் எய்ட்ஸ் பரவாது’ எனச் சொல்லித்தரப்படவில்லை. சொல்கிறவர்கள் சொல்லிக்கொண்டே இருங்கள், அமைப்பை மாற்ற முடியாது. என்பதே நிலைமை.
உதாரணமாக கொடைக்கானல் எஃப்.எம் மின் இரண்டு நிகழ்ச்சிககளின் விளம்பரதாரராக எய்ட்ஸ் தடுத்துப் புடுங்கும் வாரியம் செயல்படுகிறது. இந்தப் பாடல் நிகழ்ச்சிகளை வழங்குவது எப்படி ஏமக்கொல்லி நோய்க்கு எதிராக இருக்கும் என்றும் தெரியவில்லை.ஆனால் ஒன்று அவர்கள் ஸ்பான்சர் செய்கிறார்களே என்று நிகழ்ச்சியின் ரஞ்சகத்தனமான பெயர்களை வானொலி நிலையத்தார் மாற்ற முடியுமா என்ன?
அந்த இரண்டு நிகழ்ச்சிகளின் பெயர்கள்:
1. மனம் விரும்புதே
2. தொட்டுத் தொட்டு
நல்லா உருவாகுமுங்க எய்ட்ஸ் இல்லாத தமிழகம்.
Tuesday, January 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நல்ல பதிவு.... நீயா நானாவில் நன்றாக பேசினீர்கள்.....
காரசாரமா இருந்தாலும், அவசியமான பதிவு.....புரிபவர்களுக்கு புரிந்தால் சரி
நல்லா உறைக்கிறமாதிரிதான் சொல்றீங்க. படித்தவர்களே இப்படி என்றால் சாமான்ய மனிதர்கள் எப்படி இருப்பார்கள்.பாவம் அந்தப்பெண்ணும் குழந்தையும்.நாமும் கொஞசம் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் அரசுத்திட்டங்கள் எல்லோரையும் சென்றடையும்.
அரசு மருத்துவமனைகளில் சாதாரண காய்ச்சல்,தலைவலிக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளையே அங்குள்ள மருத்துவர்கள் தீண்டத்தகாதவர் மாதிரிதான் நடத்துகிறார்கள்.
மருத்துவ படிப்போட கூடவே மந்திரபடிப்பும் படிச்சிட்டு வாரானுக..நோயாளிய தொடாமலே வைத்தியம் பார்க்கறதுக்கு.
விஜயலட்சுமியின் பிரசவம் (தமிழ்) மருத்துவ உலகத்தின் 8ஸ் பற்றிய விழிப்புணர்ச்சியை காட்டுகிறது.
இந்த வகையில் ஆண் நோயாளிகள் (சுய பிரசவத்திலிருந்து) தப்பித்தனர் என்பது ஆறுதலாகிறது.
நோயின் பக்கவிளைவுகள் மட்டும் ஒரு சமூகத்தை பீடித்திருப்பது மிக வியப்பே!
Post a Comment