தமிழக சட்ட சபை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே மாறுகிறது. எங்கிருந்து இயங்குகிறது என்பது எப்போதும் சங்கதி அல்ல. எப்படி இயங்குகிறது என்பதே சங்கதி.
ஏராளம் பொருட் செலவில் அண்ணா சாலையில் தன்னளவில் விசாலமாகவும் பொதுப் போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் கட்டப்பட்டிருந்த (அல்லது இடப்பட்டிருந்த) அவை பயன்பாட்டில் இல்லாது போகிறது. ஒரு இரண்டு ஆண்டுக்குள்ளாக இந்தியப் பணத்தில் அதற்கேற்பட்ட செலவினங்கள் யாவும் இப்போது வெட்டியாகக் கருதப்படுகிற சூழல் வந்துவிட்டது. இத்தனைக்கும் அப்படியான இட மாற்றத்துக்கு தி.மு.க தயாரானபோது இருந்ததென்னவோ மைனாரிட்டி அரசுதான்.
இதுபோன்ற அலாதியான செலவினங்களின் போதாவது எதிர்க்கட்சிகள் புதிர்க்கட்சிகள் உட்பட பலரது தரப்பிலும் ஆதரவைக் கோருவது மட்டுமே சரி என்று படுகிறது.
இல்லாவிட்டால் மிகத் தொலைநோக்கான காரியங்களில் எல்லாம் அரசாங்கங்கள் அவசரம் காட்டவேண்டியதில்லை.
இங்கு சட்டசபை என்பது குறியீடு மட்டுமே.

2 comments:
உங்கள் கருத்துக்கள் சரி சிவக்குமார்.
இதேபோல செலவுகளைக் குறைத்து மிகச் சிக்கனமான இயற்கைக்கு நெருக்கமாக இயங்கும்வகையில் மக்களின் வரிப்பணம் செலவிடப்படவேண்டும்.
உதாரணத்துக்கு எளிமையை ஒவ்வொரு காந்திஜெயந்தியிலும் உபதேசிக்கும் குடியரசுத்தலைவர்கள் ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்களின் மிகப் படாடோபமான இருப்பிடங்கள் எத்தனை பேரின் உணவு?
வாடகை கட்டிடத்தில் இயங்க வேண்டாம் என்றுதான் முந்தைய திமுக அரசு ரூ.425 கோடியில் புதிய சட்டசபை வளாகத்தை கட்டியது. தமிழகத்தின் பெரும்பான்மையான (கட்டிடங்களை) அடையாளங்களை கட்டியதும் திமுக அரசுதான். ஏன்.... அண்ணா நினைவகத்தை கட்டியதும் திமுகதான். ஜெயலலிதா அங்கே சென்று அஞ்சலி செய்வதில்லையா...?
நிலைமை இப்படி இருக்க..... புதிய சட்டசபையில் நான் காலடி எடுத்து வைக்கமாட்டேன் என்று ஜெ சொல்வது சிறு பிள்ளைத்தனமானது.
Post a Comment