Tuesday, May 3, 2011

முள்ளை முள்ளால்...

முள்ளை முள்ளால் எடுப்பது பற்றி
முடிவு செய்து புதிதாக
முள்ளை உருவாக்கியது
முன்பொரு நாள்.

முள்ளாகப் பயன்பட்ட
முள்ளானது
பின்
தனக்கென முள் வனம்
வளர்க்கத் தொடங்கி
முதலாம் முள் மனத்தைப்
பதம் பார்க்கிறது.

வளர்த்த முள்ளால்
வலிகண்ட வன் ஆளுமை
‘முள்ளைக் களைவது’
பற்றி
அகிலத்துக்குப் பறை சாற்றுகிறது.

பின்
புதிய வரலாற்றின் பதிவு ஒன்றைப்
பொன் எழுத்துக்களால்
அச்சடிக்கும் முயற்சியில்
முள்ளைக் களைந்துவிட்டு
மார் தட்டுகிறது.

முனை மழுங்கிய முள்ளுக்கு
ஈமச் சடங்கு செய்ய
தாவர ரீதியான முறைமைகள்
செவ்வனே முடிக்கப்பட்டதாக
அறிவித்துவிட்டு
முள்ளைத் துக்கி
நீர் நிலையில் போடுகிறது.

சடலம் கடித்த மீன்களைப்
பற்றி
புதிதாகக் கவலை
கொள்கிறது அகிலம்.

மீன்களுக்கும் முட்கள்
உண்டு.

2 comments:

வித்யாஷ‌ங்கர் said...

good metaphers-vidyashankar

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

முட்களோடு பழகிய பின்னே முட்களில் பேதமுமில்லை.

படிமத்தின் உபயோகம் நறுக்குத் தெறிக்கிறது.

அருமை திரு.சிவக்குமார்.