Sunday, March 6, 2011

வாஸ்துப் பார்த்து... வாஸ்துப் பார்த்து...

ஒரு தேநீர்க்கடைக் காரரிடம் ஆட்டோக்காரர் ஒருவர் சக ஆட்டோக்காரரைப் பற்றிச் சொன்னது,

‘’அவன் முதல்ல பம்பாய்ல ஆட்டோ ஓட்டிக்கிட்டுருந்தாண்ணே. அவன் சொன்னான் முதல்ல ஓட்டறப்ப அங்க இருக்கற இடங்களே தெரியாது. ஆள் ஏறி உக்காந்தா மெதுவா ஓட்டிப் போய் வாஸ்துப்பாத்து வாஸ்துப் பாத்துக் கரெக்டாக் கொண்டு போய் விட்டுடுவேன்னு சொன்னான். அது எப்பட்றா முடியும் ரைட்ல போ வேண்டியதுக்கு வாஸ்துப் பாத்து லெஃப்டுல போனீனா எடத்துக்கு போய்ச் சேரமுடியுமான்னு கேட்டேண்ணே. அவன் சொன்னான் மெதுவாப் போய்க்கிட்டே போர்டுகளை வாஸ்துப் பாத்து வாஸ்துப் பாத்து கொண்டுபோய்ச் சேர்த்துடுவேன்னு.’’

சென்னையில் இந்தச் சம்பவத்தை நேரில் கண்டுகேட்டு அலைபேசியில் சின்னமனூர் ஸ்ரீதர் சொன்னபோது சிரித்துமுடிந்து வியப்பில் ஆழ்ந்துவிட்டேன். பேச்சை எப்படியெல்லாம் வாஸ்துப் பார்த்து புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

1 comment:

பத்மா said...

உங்களைப் போன்றவர்கள் எழுதும் பதிவுகளை நாங்களும் வாஸ்து பார்த்து, வாஸ்து பார்த்து தேற முயற்சிக்கிறோம் சிவா சார் :):)