Saturday, December 18, 2010

தலைப்பில்லாதது தன்னுயிரில்லாதது

 கடும் மௌனமோ ஒரு நாயின்
குரைப்பொலியைப் போன்றது.
ஓசைகளற்ற மனதின் நிர்க்கதியைப்
போல அது.

யாத்திருந்த சொற்கோவை என்பது
நம்மைக் கைவிடுவது எங்ஙனம்?
நம் சொற்கள் கேலிக்குள்ளாகின்றன
அல்லது நம் கற்பனை.

நம் சொற்களுக்கும் கற்பனைகளுக்கும்
எதிரி யார்?

இவ்விரண்டுக்கும் இரண்டே இருவர்
அதிபர் ஒன்று நாம் அல்லது நமக்குத் தேவையானவர்கள்.

இதில் யாதொன்று தவறிடினும்
நினைவில் வையுங்கள்
நாம் அடிமை.

5 comments:

ராஜா சந்திரசேகர் said...

நன்றாக வந்துள்ளது.நினைவில் சத்தமிடும் கவிதை.

Anonymous said...

அருமை ...

Nathanjagk said...
This comment has been removed by the author.
Nathanjagk said...

உன் சொற்களும்
என் கற்பனைகளும் எதிரியாகி திரியும்
இன்னுமொரு இரவு (அ) ராத்திரி..

எஜமானர்கள் அற்ற கட்டளைகளை
சுமந்து செல்லும் அடிமைகளின் கனவுகள்
அபூர்வ சுழிகள் வாரியது

நாயாக என்னை வரைந்த அக்கனவின்
பெளர்ணமி நிழலை கடக்கும் பொழுதில்
உனதற்ற நினைவுகளை உதறிக் கொள்கிறேன்
உடல் பதறி (அ) குலுக்கி..!

Nathanjagk said...

அன்பு அண்ணாவுக்கு..

எப்போதும் போல ப்ரியமாக!!!