நண்பர் நல்லசிவனின் அறையில் ஒரு திருமண வரவேற்பு அழைப்பிதழ் கண்டு அகமகிழ்ந்தேன். தமிழ் தருகிற பல சாத்தியங்களில் ஒன்றை அது வெளிப்படுத்தியது. அதன் மொத்த வடிவத்தையும் இங்கு தருவது மெத்தச் சரியாக இருக்கும்.
வரவேற்பு விழா அழைப்பிதழ்
பூமலை பொழியும் சேமலை வலசில்
பயிரங் குலத்தின் பாரம் பரியம்
பருவதம் மணந்த பாலசுப்பிர மணியன்
திருவளர் செல்வன் பார்த்திபன் யானே!
ப்ரியா உடனே தங்களை அழைக்கும்
இருமன ஏற்பு திருமண வரவேற்பு!
பொள்ளாச்சிப் பக்கம் பில்சின்னாம் பாளையம்;
அதில் வாழும் ஆந்தை குலத்து
மயில்சாமி ராதாமணி; மகிழ்வுடன் பெற்ற
திருமகளே; மணமகளாம் மோகனப் ப்ரியா
பொற்கரம் பற்றும் நற்திரு மணவிழா
முகூர்த்தம் முடித்து முறையான வரவேற்பு !
இனித்திடும் இரண்டு ஆயிரத்துப் பத்தில்
அக்டோபர் மாதம் இருபத்து நான்கு
ஞாயிறு மதியம்; நலமிகு வேளை
மணியோ பதின் ஒன்றுக்கும் மூன்றுக்கும்
இடைபட்ட நேரம், இனியவரே வருக
ஈரோடு நடுவில் சம்பத் நகரில்
சீரோடு , கொங்குக் கலை அரங்கில்
நடைபெறும் விழாவிற்கு நட்பே வருக !
நாங்கள் கைகோர்த்துக் காத்தி ருப்போம்
தங்களை வரவேற்க ! வருகை தருக !
பாசமிகு . பார்த்திபன்
நேசமிகு . ப்ரியா
இஃதே அழைப்பிதழ்.
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
இதுவரை நான் சந்தித்திராத இனிய நண்பர் பார்த்திபன் சேமலை வலசில் பிறந்ததற்காக ‘பூமலை ...’ எப்படித்தான் பொழியும் என மனக்கண்ணில் சிந்தித்துச் சிந்தித்துப் பார்க்கிறேன். ம்... அழகாத்தான் இருக்கு.
Saturday, October 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அழகு !
அட, நம்ம ஊர்ல விருந்து
நல்ல அழைப்பிதழ் அளித்த அந்த உள்ளங்களுக்கு வாழ்த்துகள்
நன்றி கதிர்!
தமிழ் மணம் கமழ்கிறது.
http://gunathamizh.blogspot.com/2010/10/18.html
எனது அழைப்பிதழைப் பார்த்தீர்களா நண்பா.
Post a Comment