Wednesday, January 20, 2010

தலைக் கவசம்

தலைக் கவசத்தின்
பயன்கள்
காயம் படாமல் காப்பது
உயிராபத்திலிருந்து
தப்புவிப்பது எனச்சில.
சுரங்கங்கள்
அரங்கங்கள்
வாகனங்கள்
போர்க் களங்கள்
கட்டட வேலைத் தளங்கள்
தீயணைக்கும் இடம்
மீட்பு நடவடிக்கை நேரம்
எனப் பற்பல இடங்களில்
அதற்குப் பயன்பாடு உண்டு.
தாடை வரை நீண்ட கவசம்
எனில் எதிர் வரும்
உயிருக்கு நீங்கள்
உதடு குவித்து
மர்மமாக வழங்கலாம்
மானசீக முத்தமொன்று.
தலைக் கவசம்
உயிர்காப்பின்
முக்கிய அம்சம்.
கவசத்திற்கு பல நிறங்களுண்டு.
மகுடங்களும் கிரீடங்களும்
தலைக்கவசத்தின் வகையிற்சேரா...
ஆனால்,
அவற்றினடி வாழும் உங்களுக்கு
மரணம் தலையை மட்டும்
இலக்கு கொள்ளவேண்டிய
அவசியமொன்றுமில்லை.

3 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

//அவற்றினடி வாழும் உங்களுக்கு
மரணம் தலையை மட்டும்
இலக்கு கொள்ளவேண்டிய
அவசியமொன்றுமில்லை.//


உண்மைதான்.....நல்ல வரிகள்

அகல்விளக்கு said...

//அவற்றினடி வாழும் உங்களுக்கு
மரணம் தலையை மட்டும்
இலக்கு கொள்ளவேண்டிய
அவசியமொன்றுமில்லை.////

கருத்தான வரிகள்....

Nathanjagk said...

நல்லவேளை தலைப்பில் 'தலை' இருக்கு.. இல்லேன்னா என்னை மாதிரி கவிதா ரசிகர்கள் 'கவசத்தை' கண்ட இடத்தில் மாட்டிக் கொண்டு கவிதை புரிந்து கொண்டிருப்பார்கள்.

சிங்-காக இருந்தால் ஹெல்மாட்டு பிரச்சினையில்லை. ஹரியானாவில் ஹெல்மட்டுகள் விற்கப்படுமா?

நம்மூர் ரோடு கண்டிஷன்களுக்கு நமக்கெல்லாம் ஹெல்மட் இருந்தால் தலையோடு வீடு திரும்பலாம் இல்லாவிட்டால் பூவோடு கிளம்பலாம்.

பூவா தலையா போட்டு பார்க்கப்பட வேண்டிய விஷயம் இந்தத் தலைக்கவசம்.