பாதரசச் சத்தையும் வண்ணத்தையும்
இலைகள் உறிஞ்சிவிட்டாற் போல
நுனிமுனை தொற்றித்
தாவரத்தில் நீர்த்துளி உள்ளது.
படுக்கையில் கனவுமிகுந்து
உளறிப்படுத்திருக்கிறது
காலையில் அதிகாலையில்
இம் மார்கழியில் பூந்தொட்டி.
தாய்மை வெப்பத்தைத்
துறந்து வாழுவது.
வாழ்வென்பது
என துன் முகூர்த்தங்கள்.
வெளியில் பனி குதறுகிறது.
வரும் வெய்யிலில்
நாள் தன் ரசவாதத்தை என்
மீது பூசுகிறது.
இதற்கு முந்தையதைச் சொன்னால்
இனி நான் கவிதை சொல்லக்கூடும்.
Thursday, January 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அப்பா..!
கிரேட்.
இதழுதிர்ந்த மலரின் மகரந்த மேடையின் கருமை துவங்கும் இடத்திலிருந்து சொல்லெடுக்க சொல்கிறது பிரிவின் வாதை
பிம்பத்துடன் பேசும் புத்திலைதாவரம்
பிறகான பொழுதில்
இசைபடும் அறையின் மௌன சுவர்கள்
வெளியே வெய்யிலும் உட்சுவரில் தண்மையுமாய்
விதிக்கப் பெற்றிருக்கிறது சுவாசம் இருளிலும் பச்சையம் பகலிலும்
முதல் வரியிலேயே மனசைக் கரைச்சுட்டீங்கண்ணே! வாழ்த்துக்கள்!
வாதையை பனியாய் சொல்கிறது கவிதை. 'பனியரும்பி பைதல் கொள் மாலை / துளியரும்பித் துன்பம்வளர வரும்' (குறள்) அல்லவா?
'போல', 'என்பது'.. போன்ற வார்த்தைகளை கவிதையிலிருந்து கடாசிப்பிடணும் என்று நீங்கள் சொன்ன ஞாபகம்.
Post a Comment