Friday, June 25, 2010

நூறு எப்பதான் ஜகன் வரும்.

கால் பந்தில் கோல்களின் எண்ணிக்கையை மனதில் வைக்காமல் ஆடுவது. இறக்கையுள்ள அரைப்பந்தில் ( ஷட்டில் காக் ) பாயிண்டுகளை மனங்க்கொள்ளாமல் ஆடுவது. பழைய (அதிலும் பழைய) காவஸ்கரைப் போல போர்டைப் பார்க்காமலே செஞ்சுரியைக் கடந்துவிடுவது இப்படியெல்லாம் நடந்து விடுதல் நல்லதுதான்.

நான் பிளாக்கின் ‘100’ போஸ்ட்ஸ் என்பதை நம்பித்தான் நூறைக் கடந்துவிட்டதாக நம்பினேன். கணக்கு தவறு என்கிறார் ’காலடி’யார் ஜகன்.

சரி நூறு வரும்போது வரட்டும். அதற்கு முன் 100 பற்றிய சிறு புதிர்.

ஒரு கிளிக்கூட்டம் பறந்துபோகிறது. பறக்கும் அவற்றைப் (அவைகளை அல்ல - செம்மொழிக் குறிப்பு) பார்த்து ஒருவர் கேட்கிறார்.
‘நூறாம் நூறாம் கிளிகளே எங்கே போறீங்க?’
அதற்கு ஒரு கிளி சொன்ன பதில் இப்படி.

‘நாங்க நூறு பேர் அல்ல. நாங்களும் எங்களொத்த இனமும் எங்களிற் பாதியும் பாதியில் பாதியும் உன்னையும் சேர்த்தால்தான் நூறு’

அப்படியானால் பறந்த கிளிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதை சரியாகச் சொல்வோர் ‘செம்மொழிக் கணக்க்கர்’ விருதும் பட்டயமும் பெறுகிறார். மற்றபடி அவருக்கு சிறப்பாக கூடுதலாக ஒரு கேள்வி தரப்படும். அந்தக் கேள்வி அமைந்திருக்கும் விதம் இப்படி.

13 -ம் தேதி முதல் 18 -ம் தேதி வரை ஒரு மாநாடு என்றால், அந்த மாநாடு ‘முடிய’ வேண்டியது எப்போது?

6 comments:

ny said...

2x+(1/2)x+(1/4)x+1=100
ஆறு sixers பறக்கிரதுகள்!
ஹையா... வடை! வடை!

பத்மா said...

நூறு எப்போ வரும் ? 99 அடுத்து தான்.
நமக்கு தெரிந்த கணக்கு இவ்ளோ தான்

adhiran said...

welcome back !

semmozhik kaviyarangam paathiyaa?

viswanathan said...

36 கிளிகள்

viswanathan said...

36 கிளிகள்

Nathanjagk said...

நூறு வரும். கவலைப்படாதீர்கள், நானே கணக்கிட்டுச் சொல்லுகிறேன். வாழ்த்துக்கள்!