தேனியில் அறிமுகக் கூட்டத்திற்காக ’பாப்லோ நெரூடா நினைவுக்குறிப்புகள்’ என்னும் புத்தகத்தை (மொழிபெயர்ப்பு ; சா. தேவதாஸ்) கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பாக விசாகன் அனுப்பியபோது நான் நினைத்திருக்கவில்லை - நானூறுக்கும் மேற்பட்ட பக்கங்களுள்ள வசன கவிதைப் புத்தகத்தைப் படிக்கப்போகிறேன் என்று. நூலை வெளியிட்ட கருத்து - பட்டறை பதிப்பகம் மகிழ்வான போற்றுதலுக்கு உரியவர்கள்.
Friday, April 5, 2013
Saturday, November 24, 2012
face
ஃபேஸ் புக்கை சாதிச் சான்றிதழ் மாதிரி நினைத்துவிட்டேன். இது வேறு மாதிரி... என்றாலும் ஃபேஸைத்தேடி, பேஸைத்தேடி, புத்தகத்தைத் தேடி....
என்ன வாழ்க்கை இது. இதில் ஒரு முகம் வேறு?
என்ன வாழ்க்கை இது. இதில் ஒரு முகம் வேறு?
Tuesday, November 13, 2012
என்ன ஆச்சு?
நான் நாளிதழ் பார்த்து இரண்டு நாளோச்சோ மூணு நாளோச்சோ?
கடைசிக்கு முன்னதாகப் பாத்தப்போ நாஞ்சில் சம்பத் ம. தி.மு.கவை விட்டுப் போய்விடுவார் போலச் செய்திகளில் பார்த்தேன்.
கடைசியாகப் பார்த்த சன் டி.வி பேட்டியில் நாஞ்சில் சம்பத், நான் ம. தி.மு.கவை விட்டு விலகுவதுமில்லை அதைக் கைவிடுவதுமில்லை என்பது மாதிரி பேட்டி கொடுத்தார்.
அப்படின்னா மறுபடியும் ம.தி.மு. கவில் இரண்டு கோபால் சாமிகளா அல்லது இரண்டு சம்பத்துகளா?

Saturday, September 1, 2012
Friday, August 24, 2012
Tuesday, August 14, 2012
யப்பா... அம்மா!
தொழில் நுட்ப வேதனைகள், காற்றின் ஈரப் பதம், மூளையின் போதாக் குறை, மூளை(!) யின் அறிவு அல்லது உணர்வு செயல்படும் பகுதி - எத்தனை எத்தனை மனக் கோட்டை அதில் மண் சேர்க்க நாம் (ன்) படும் பாடு.....
என்னவோ மின் முதல் மண் வரை யாவையும் மனதில் சேர்த்தி நரம்பு மற்றும் இரும்புகளை மனதால் தியானித்து - எம்னது வலை மனையில்(வலித் தளம், வலை மனை, வலைப் பூ .... யாதொன்றும் சரியான பெயரில்லை பார்த்துக்கொள்ளுங்கள்)... இதைப் பதிவேற்ற முயலுகிறேன்.
விற்பன்னர்கள் எப்போதும் எள்ளி நகையாடுவார்கள். இயற்கை அருளினால் இதை தொடரலாம்.

Friday, August 10, 2012
கல்வி நாம மாவட்டம்.
நாமக்கல் காரர்கள் முட்டையும் போடுவார்கள் , நூற்றுக்கு நூறும் போடுவார்கள் என்று அவர்களது தொழில் வளர்ச்சி(!) குறித்து முன்னம் நான் இளிவரலாகக் குறிப்பிடுவதுண்டு.
குழந்தைகளுக்கு வரவேண்டிய ஸ்காலர்ஷிப்பில் கை வைத்து எண்பதுக்குக் கிட்டே தலைமை ஆசிரியர்கள் மேற்படி மாவட்டத்தில் இடை நீக்கத்தில் இருக்கிறார்கள் என்பதை தலைப்புச் செய்தியாகக் கேள்விப்படும்போது
பயமாக இருக்கிறது.
இந்த தவுதாயப்பட்ட லோகத்தில் குழந்தைகள் படிச்சா என்ன? படிக்காட்டி என்ன?

Saturday, December 24, 2011
வியாபார உலகம்... உலக வியாபாரம்.
முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக எல்லைகளில் மக்கள் குழுமுதலும் குமுறுதலும் ஒரு பக்கம் நடந்தவாறிருக்க தமிழகத்தின் பலவேறு பகுதிகளில் கேரளீயர்களின் நிறுவனங்கள் தாக்கப்பட்டு வருகின்றன. இப்படித் தாக்கப் படுவதில் பிரச்சினை சார்ந்த உணர்ச்சி வசப்படுதல் தவிர்த்து பூர்வாங்க உளவியலும் இருக்கிறது.
எங்கிருந்தோ வந்து கண்ணாடி டெகரேட் பண்ணி கல்லாப் போட்டு உக்காந்துருக்காம் பாரு.... என்கிற தரத்திலானது அது. ( மதவெறி/ மொழி வெறி/இனவெறி/ உள்ளூர் வெறிகள் தனி - வல்லம் தாஜூபால்)
தொலைக்காட்சியில் முத்தூட் நிறுவனத்தாரின் கடைகளில் கண்ணாடிகள் உடைக்கப்படுவதை சிலநேரம் பார்த்தேன். நல்லவேளையாக ஊழியர்கள் தாக்கப்படாமல் இருந்தார்கள்: மகிழ்ச்சி.
கலவரத்தைக் காரணம் காட்டி கடையை மூடிவிட்டுப் போய்விட்டார்களேயானால் பெட்டகத்துக்குள் இருக்கும் தங்கங்கள், அவற்றை அடகு வைத்தவர்கள் கதி என்ன? என ஒரு வினாடி திக்கென்று இருந்தது.
கடைகளில் அடகு வைத்தவர்கள் இரிஞ்ஞாலக்குடாவிலிருந்தோ பந்தனம் திட்டாவிலிருந்தோ வந்து வைக்கவில்லை. தமிழர்களுக்குச் சொந்தமான ஆபரணங்கள்.
இத்தகைய செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு பெரியபெரிய நகைக்கடைகளின் நிலவரம் பற்றி அறிவதற்கு ஆவல் மேலிட்டு நண்பர் ஒருவருக்கு போன்செய்தேன். என்ன இருந்தாலும் கிராமத்தில் இருந்த பொற்கொல்லர்கள் அவ்வளவு பேரையும் இருந்தஇடம் தெரியாமல் ஆக்கிய மாபெரும் புரட்சியாளர்கள் அல்லவா அவர்கள்?
‘பெரிய கடைகள் எல்லாம் நல்லா பாதுகாப்போட நடக்குது’ - என்றார் நண்பர்.
‘’நிறைய போலீசா?”
‘’ஆமா நெறைய போலீஸ்’’
‘’ஆக கடை ஊழியர்களுக்கும் நகைகளுக்கும் ஆபத்தில்லை...’’
‘’ நீங்க வேற சலம்பல் பண்ணினா அங்க இருக்கற செக்யூரிட்டிக பொதுமக்களைப் போட்டெறிஞ்சிருவானுங்க... போலீஸ் பாதுகாப்பு பொதுமக்களுக்குத்தான்.’’

Saturday, December 3, 2011
ஹ்
பரணில் கட்டித் தொங்கவிடப்பட்ட
பலூன் புலியின் வயிற்றிலிருந்து
புலியின் கண்ணுக்குப் பாய்கிறது
டியூப்லைட் அம்பின் பிம்பம் இந்த
மின்சார விழிப்பிரவில்.
(மின் விசிறி ஓடுகிறது).
ஒருவேளை குழந்தைகளின் கண்ணுக்கு
மட்டுமே காணக் கிடைப்பதாயிருக்கலாம்
இக் காட்சி.
எப்போது என்ன செய்வார்கள் எனத்
தெரியாதென்பது
பெற்றோர்களைக் குழந்தைகளுக்கும்,
என்ன செய்தாலும் முகமாறுதல்
இல்லையென்பது குழந்தைகளுக்குப்
பொம்மைகளையும்
அன்பாக்கி வைத்திருக்கிறது.
பலூன் புலியின் வயிற்றிலிருந்து
புலியின் கண்ணுக்குப் பாய்கிறது
டியூப்லைட் அம்பின் பிம்பம் இந்த
மின்சார விழிப்பிரவில்.
(மின் விசிறி ஓடுகிறது).
ஒருவேளை குழந்தைகளின் கண்ணுக்கு
மட்டுமே காணக் கிடைப்பதாயிருக்கலாம்
இக் காட்சி.
எப்போது என்ன செய்வார்கள் எனத்
தெரியாதென்பது
பெற்றோர்களைக் குழந்தைகளுக்கும்,
என்ன செய்தாலும் முகமாறுதல்
இல்லையென்பது குழந்தைகளுக்குப்
பொம்மைகளையும்
அன்பாக்கி வைத்திருக்கிறது.
Tuesday, November 8, 2011
Sunday, November 6, 2011
ஈத் முபாரக்!
பெங்களூரில் இருந்தவாறு பக்ரீத் கொண்டாட்டம். கடந்த ரெண்டுமூணு நாட்களாகவே விதவிதமாகக் கொழுத்த ஆடுகள் காட்சிக்குக் கிடைக்கின்றன. சாலையோரங்களில் புதிதாகப் புல் விற்போர். ஆடுகளைக் கையில் பிடித்தபடி முசல் மான்கள்.
சிலபோது ஆடுகளைக் கயிற்றால் பிடித்தபடி அஞ்சுவயசுப் பிஞ்சுக் குழந்தைகள் நிற்பது அற்புதமான காட்சி. இன்று மழை வெறித்திருக்கிறது: வெய்யில்.
கிராமத்தி்னை நினைவிற்கொண்டுவருமாறு ஆடுகளின் நடமாட்டம் நாளையிலிருந்து கம்மியாகிவிடும். பால் வெள்ளை ஷெர்வானிகளுடன் தலைத் தொப்பிகளுடனும் அத்தர் வாசத்துடன் எம் தெருவைக் கடந்து ஆண்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள்.
அறுநூறு மீட்டர் தொலைவிலாக அடுத்த தெருவில் மசூதி.
இதோ இதோ ஒலிக்குது கேளிர்...
அல்லாஹு அக்பரல்லா....
பக்ரீத் வாழ்த்துக்கள்!

Tuesday, October 4, 2011
சூர்ப்பணங்கு - பெங்களூரில் 6.10.2011
ச. முருக பூபதியின் சூர்ப்பணங்கு என்னும் அரங்க நிகழ்வு 06.10.2011 (வியாழக் கிழமை) மாலை ஆறு மணியளவில் பெங்களூரு டவுன்ஹால் அருகில் உள்ள ‘ரவீந்திர கால க்ஷேத்ரா’வில் நடைபெற உள்ளது.
முருகபூபதியின் வனத்தாதி உள்ளிட்ட முந்தைய ஆக்கங்களைப் பார்த்துள்ளேன். வித்யாசமான அனுபவங்களைத் தரக்கூடியது அவரது நாடகங்கள். தொன்மங்களும் சமகால அல்லது காலகால விஷயங்கள் மயமயப்பான ஒலி நடை முன்புலத்தில் நடைபெறக்கூடியது. சூர்ப்பணங்கினை நானும் பார்க்காததால் ஆவலுடன் இருக்கிறேன் இந்த நிகழ்ச்சிக்காக. நாடகம் பார்த்துவிட்டுத்தான் எழுதவேண்டும்.
பெங்களூர் வாழ்வோரும் அல்லது பெங்களூரை பயண தூரத்தில் எட்டுவதற்கு சாத்தியம் உள்ளவர்களும் கண்டு துய்க்கலாம். கூடுதல் விவரங்கள் அறிய எனது அலைபேசி எண் ; 08050444267.

Saturday, October 1, 2011
இருட்டைச் சூழச் செய்யுதல்
தன் பிரவாகத்திலேயே
ஆதியின் கூற்றில் இருள்
இருந்தது.
படர்ந்தது கனியின் ஒளி
இருப்பிடமறியாத் தேடலினூடே
உயர் துயர் உயிர் தவித்துக்
கண்டடைந்தது நெருப்பினை.
பொருப்பிலும் இருப்பிலும்
தானிருந்த ஒன்றை
கடைந்துரசும் கடுமுயல்வில்
நிலைத்த அது குமிழிற் சேகரமானது.
குமிழிலும் குழலிலும் சேகரமான அதை
மூலத்தின் விருப்ப வேர் தேடி
அணைக்க விரும்புகிறது
அதி ஆதி மனம்.
எதை எதைக் கொண்டு
ஒளியை அணைய.... என
இருட்டில் தவிக்கிறது
இன்றைய மனம்.
ஆதியின் கூற்றில் இருள்
இருந்தது.
படர்ந்தது கனியின் ஒளி
இருப்பிடமறியாத் தேடலினூடே
உயர் துயர் உயிர் தவித்துக்
கண்டடைந்தது நெருப்பினை.
பொருப்பிலும் இருப்பிலும்
தானிருந்த ஒன்றை
கடைந்துரசும் கடுமுயல்வில்
நிலைத்த அது குமிழிற் சேகரமானது.
குமிழிலும் குழலிலும் சேகரமான அதை
மூலத்தின் விருப்ப வேர் தேடி
அணைக்க விரும்புகிறது
அதி ஆதி மனம்.
எதை எதைக் கொண்டு
ஒளியை அணைய.... என
இருட்டில் தவிக்கிறது
இன்றைய மனம்.
Tuesday, September 20, 2011
Saturday, September 17, 2011
உள் ஆட்சி
இதுகாறும் நடைபெற்றிராத அளவில் இம்முறை தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில் சுவாரசியமும் ஜனத் தன்மையும் கொப்பளிக்க இருக்கிறது. ‘ டெரிட்டோரியல்’ என்கிற ஆங்கிலப் பதத்திற்கு, ‘தற் புல வரைவு’ என்கிற அளவிற்கு பெயர்ப்பியல் ரீதியாக நெருங்கி வந்துவிட்டேன். இந்தத் தேர்தல் முடிவதற்குள் ஆகச் சரியான - நிகர்த்த சொல் நானல்லாவிட்டாலும் நண்பர்கள் மூலமாகக் கிடைத்துவிடும் என நம்புகிறேன். (உணர்ச்சிக்கான உரிமையான சொல்லோடு இன்னும் நெருங்கிப் பயணிக்க வேண்டும்.)
தி.மு.க காங்கிரசைக் கழட்டிவிட்டுவிட்டது.(தற்போதைய கைதுகளை மிசா போல உணர்கிறேன் என்றோ அல்லது ஸ்பெக்ட்ரம் அரசியல் ரீதியானது என்று சொல்கிற கணங்களில் - நீ எதிரியா நண்பனா ? ’என்கிற தொனி தவிர்க்க இயலாதது). ஆக காங்கிரஸ் கழலாமலேயே கழன்று கொண்டுவிட்டது.
காங். தனித்துப் போட்டி.
ம.தி.மு.க தனித்துப்போட்டி. -
ம.தி.மு.க கடைசியாக நடந்த தேர்தலைப் புறக்கணித்ததை ஒட்டி இது கட்சியா இயக்கமா என்கிற கேள்வியை அனைவருக்கும் விளைத்து விட்டது. அது கட்சிதான் என்பதை வை.கோ நிரூபித்திருக்கிறார்.( தமிழ் நாட்டின் நுண்மைக் கணக்கில்- எனது யூகக் கணக்குக் கூட்டலில் இது இரண்டு அல்லது இரண்டரை சதவீத இடங்களைக் கைப்பற்றக்கூடும்).
எதிர்க் கட்சியான தே.மு.தி.க தனித்துப் போட்டியிடுகிற சூழலை அ.தி.மு.க ஏற்படுத்தி வருகிறது.. சமச்சீருக்கு வாய்ப்பில்லை. (சமச்சீர் பம்மாத்தினைஆதரித்து ஒரு சாத்வீகக் குரலும் எழுப்பாது வாளாவிருந்த அக்கட்சி இப்போது என்ன செய்யப்போகிறது என்பது சோழி உருட்டல்களின் போது தெரிய வரும்)..
தே.மு.தி.க தனித்துப் போட்டியிடுவது தன்னளவிலான பரிசீலனாச் செயற்பாடுகளுக்கு - வருங்கால வளமை அல்லது வறுமையைக் கண்டடைய அக்கட்சிக்கு உபயோகப் படக்கூடும்..
இரண்டு ‘கழகக்’ கட்சிகளுடன் உறவு வைத்ததற்காக மன்னிப்புக் கோரிய பா.ம.க தனி.
வலதும் இடதும் தனித்தனி. (கம்யூனிஸ்ட் கட்சியில் மெம்மராவதை விடச் சுலபம் வார்டு மெம்பராவது)
புலிகள். ,சலங்கைகள், புதிய தமிழகங்கள் - ஒதுக்கீடுகள்.....
(தமிழக மேயர் வேட்பாளர் பட்டியலில் அ.தி.மு.க சார்பில் விழுக்காட்டு ரீதியில் அதிக பெண்களைப் பார்த்தது பெருமிதமாக இருந்தது)
இந்தத் தேர்தல் அதி நிச்சயமாகவும் சிறப்பாகத்தான் இருக்கும் போல இருக்கிறது பல கட்சிகளுக்கு தம்மை உணரும் வாய்ப்பு.
மக்களுக்கு இன்னும் அதிக உரிமையியல் வாய்ப்பு.
குறிப்பாக அகில இந்தியக் கட்சிகளான காங்கிரஸ், பி.ஜே.பி, பகுஜன் சமாஜ் பார்ட்டி. ஜனதா, ஜனதா தளம்.... நான்... நீ... உங்க அப்பா... எங்க அப்பா...
தாள முடியாவிட்டாலும் இது அவசியம்தான்.
துண்டாடத் தெரிவது கூட துண்டாகத் தெரிந்தால்தான் இருப்பின் கதி.

Saturday, September 3, 2011
நிலா நாற்பது -18
உழைப்பும் களைப்பும்
உள் அழைப்பும்
பிற்றைப் பிறை தோணுதற்
தோன்றுதல்... விதியுமல்ல
நியதியுமல்ல இருப்பெனக் காட்டுதல்
எந்த சஷ்டி கவசம்?
Thursday, August 25, 2011
நேரில் கோர முடியாத மன்னிப்பு...
அன்பினால் விளைகிற அபத்தங்கள் மற்றும் தீங்குகள் எனக்குப் புதியதல்ல. என்றாலும் புதிதாக ஒன்று விளைகிற போதும் நேர்கிற போதும் அது புதிதேதான்.
இது அசந்தர்ப்பமாக நேர்ந்துவிட்ட (நான்கைந்து பதிவுகளுக்கு முந்தைய) ‘நேரில் பார்த்திராத கனவன்’ பதிவு பற்றிய நனவு நிலை விளக்கங்களும்... பின்னூட்டங்கள் (கண்டனங்கள்) ஆகியனவற்றுக்கான பதிலுமாகும்.
அந்தப் பதிவுக்காக சுரேகா அவர்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். அய்யா நெல்லைக் கண்ணன் அவர்கள் இதைப் படிக்கும்போது மேலும் சிலதை என் தரப்பில் சொல்லுதல் தகும் என்றே மேற்செல்கிறேன்.
அவரது பேச்சுக்காக காத தூரங்கள் பேருந்திலும் பைக்கிலும் பயணித்து பேச்சைக் கேட்கிற ரசிகன் நான். (தமிழ்ப் பேச்சாளர்கள் பற்றிய முந்தைய பதிவு ஒன்றில்... கடையிலே பொருளில்லை கஜானாவுக்காக அடித்துக்கொள்கிறார்கள் என காங்கிரசில் இருந்துகொண்டே காங்கிரசைக் கடிந்துகொண்டதைக் குறிப்பிட்டிருக்கிறேன்).
தவிரவும் அவரது சமகாலப் பிரக்ஞையும் பழைய கால ஞாபகங்களும் சம எடை வைத்த தராசுத்தட்டுகள். (தேர்தல் அறிக்கையை கதாநாயகி என கருணாநிதி வர்ணித்த காலத்தில் - கலைஞரின்து மேடைப் பண்பாடு பற்றிய விளாசல் ஒரு நல்ல உதாரணம். எனக்கு தினமலரில் படித்ததாக ஞாபகம்).
எனது பிசகு என்னவென்றால், எனது வலைப்பக்கத்தைப் படிக்கும் சம காலத்தவர் அவர் என்பதை மறந்துவிட்டேன். நிச்சயமாக இதை அவர் படிக்கப் போவதில்லை என்பதாகத்தான் என் நம்பகமும் புரிதலுமிருந்தது.
இது நிற்க,,, பதிவிடும் நாளுக்கு முன்னதாக நெல்லையிலிருந்து எழுத்தாளர் கணபதி அவர்கள் காலமானதைக் கேள்விப்பட்டிருந்தேன். துஷ்டியில் கலந்துகொள்ள முடியாத வருத்தமும் இருந்தது. ஒரு ஒளிவு மறைவு வேண்டாமே என இப்போது அதைக் குறிப்பிடுகிறேன்.
பதிவில் அதைக் குறிப்பிடாத நான் ஒரு கனவினை அப்படியே எழுதியிருக்க வேண்டியதில்லை. குறிப்பாக ஜீவியவந்தராக ஒருவர் இருக்கையில் அவரது மகனைப் பற்றி அவ்விதமாக எழுதினால்... படிக்கும் தந்தையின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை உணரத்தவறிவிட்டேன்.
பதிவின் கனவில் அல்லது கனவின் பதிவில் ‘கண்ணன் அவர்கள்’ வருந்துகிற விதமான தோற்றத்தில் சுரேஷ் இல்லை. மரத்தில் கிடந்த சால்வையை எனக்கு முன்னமே எடுக்கிற துடிப்புடன் இருந்தார். அப்புறமும் ‘மகா பாரதத்தைப் பற்றிப் பேச ஆட்கள் அழைத்தபோதும்’ அந்த ஆள் மாதிரியே கொண்டுபோய்யா என்றதும் அசல் நெல்லைக் குசும்புதான்.
காட்சி முடிவதற்கு முன்னாக என்னோடு சுரேஷ் தேநீர் அருந்திக்கொண்டு நலமாகத்தான் இருந்தார். நலமாகத்தான் இருப்பார். சுகாவைக் கனவில் பார்த்தபோதும் கண்ணனை நான் நினைத்தது ‘வார்த்தை’கள் படித்த ஆதிநாளில் கண்ணனின் மகன் சுகா எனக்கேட்டதும் ஏற்பட்ட புளகாங்கிதத்தின் மிச்சம்.
கனவில் ராஜேந்திர சோழனைப் பார்த்திருந்தாலும் ராஜராஜ சோழனை நினைத்துத்தான் இருப்பேன். தர்க்கங்களற்ற கனவில் சிலவேளை தர்க்கம் ஒளி(ர்)கிறது.
மதிப்பிற்குரிய அய்யா கண்ணன் அவர்களே! நீங்களும் சுகாவும் எனது பல மணி நேரங்களை இன்பமாக்கி அருளியிருக்கிறீர்கள்.
இனியும் ஒரு சுகமான நினைவுகளுடன் கனவில் வர தமிழ்த்தாய் அருளுவாள். அதை எழுதாமலிருக்க வாழ்க்கையும் இருப்பும் போதித்திருக்கிறது. இந்தப் பதிவிற்கு நீங்கள் பதிலிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். மேலும் இது பற்றி எழுத நேரிடினும் அதன் பெயரும் அனு பந்தம் என்றே இருக்கும்.
கொஞ்சம் தமிழாலும் நிறைய நரம்புத் தளர்ச்சியாலும் இது விளைந்துவிட்டது.
Sunday, August 21, 2011
உண்ணா ஹசாரே
அன்னா மீண்டும் உண்ணா விரதத்தைத் தொடங்கிவிட்டார். ராம் லீலா மைதானத்தில். ஆர்வ வழிப்பட்ட ஆதுரங்கள் அவர் மீது மலரெனத் தூவப்பட்டுவிட்டன.
தியாகியை அடைப்பதற்கென்று தனி ஜெயில்கள் உருவாக்க முடியாது என்கிற எளிய உண்மையைக் கூட மனம் ஏற்றுக்கொள்ளாமல் ‘இவரைப் போய் திகாரில் அடைப்பதா?’ என்கிற கேள்விகள் எல்லாம் எழுந்தாயிற்று. சிறையில் புனிதர்களும் குற்றவாளிகளும் மனிதர்களும் (சமயங்களில் குற்றமற்றவர்களும்) அடைபடுவதால்தான் சிறை இந்த அமைப்பின் தவிர்க்க இயலாத அம்சம் ஆகிறது.
ஆட்சியில் இருந்த காலத்தில் லோக்பாலை அமல் படுத்தாதவர்கள் எல்லாம் இன்று அன்னாவுக்குக் குரல் கொடுக்கிறார்கள். பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மற்றும் சட்டம் போலவே இதிலும் வெகுபேர் விரும்பாத நுண் அமைவுகள் பலது இருக்கக் கூடுமெனக் கருதுகிறேன். வெகுபேர் என்பதை அரசியலாளர்கள் மற்றும் மக்கள் என இருதரப்பிலுமாகக் குறிப்பிடுகிறேன்.
அன்னா கேட்டது போலவே கொடுத்துவிட்டு அதை எண்ணி எண்பத்தியிரெண்டு மணித்தியாலத்துள் தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள அரசியலாளருக்கு இயலாததல்ல.
ஆகவே அதனினும் கடந்து அன்னாவின் கோரிக்கைகளில் எதேனும் வலிமை இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.
மன் மோகன் மவுன மோகனாக இருந்தாலும் அவ்வப்போது பெரும் கருத்துகளைச் சொல்கிறார். அறப்போர்களின் காலம் முடிவுற்றுவிட்டது என்பது போன்ற செய்திதான் சமீபத்தில் அவர் தந்தது.கொரிக்கை நிமித்தமான பட்டினி இறப்புகள் என்னமாதிரியான ஆவேசம் அல்லது விளைச்சலைத் தோற்றுவிக்கும் என கற்பனை செய்யுமளவு எனக்கு மனத் திராணி இல்லை.
நாடெங்கிலும் பந்தலிட்டுப் பட்டினியில் அமர்ந்திருக்கிற அன்னாரின் சக போராளிகள் யாரேனும் இறந்துவிடக்கூடாது என்பதே விருப்பமாயிருக்கிறது.

Thursday, August 4, 2011
சதா இக்கட்டிலிருந்து சதானந்தத்துக்கு...
இன்று முதல் கர்நாடகத்தில் புதிய முதலமைச்சரின் கண்பார்வையில் வாழப்போகிறேன். சதானந்த கவுடா பி.ஜே.பிக்காரர்களால் ஏகமனதாக அல்லாமல் ஒரு வழியாகத் தேர்வு பெற்றிருக்கிறார்.
அரியணை ஏறிய நாள் முதலாக அல்லலுற்றும் இக்கட்டுகளின் பாற்பட்டும் ஆட்சி நடத்திவந்த எடியூரப்பாவுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. அவர் விரும்பாத விடுதலை. அண்டை மாநிலமான தமிழ் நாட்டின் ஜெயலலிதா போல ஆறு மாதத்தில் மீண்டும் தானே முடி சூடும் கனவும் எடியூரப்பாவுக்கு இருக்கிறது. அது முச்சூடும் பலிக்குமா எனத் தெரியவில்லை.
தென்னகத்தில் முதன்முதலாக அமைந்த பி.ஜே.பி ஆட்சியை இப்படி அவர் ஆக்கிவைத்தது அந்தக் கட்சிக்கு பாதகம்தான். கர்நாடக முதலமைச்சர் பட்டியலில் ரெட்டி,ஜாட்டி, மொய்லி,பட்டீல்,ராவ்.சிங்.ஹெக்டே,கவுடா, அப்பா.அய்யா,சாமி.... என வினோதம் பலவுண்டு.இப்போது சதானந்த கவுடா. குமாரசாமி கவுடரின் சத்தத்தை இந்த ஏற்பாடு குறைக்குமா எனத் தெரியவில்லை.
மிகச் சிலர் எதிர்பார்த்தது போல சோபா முதலமைச்சர் ஆகவில்லை. அல்லது ஆகமுடியவில்லை. தென்னகத்தார் ஒரு பெண்ணின் தலைமைய அவ்வளவு எளிதில் ஏற்பார்களா தெரியவில்லை. விடுதலைக்குப் பின் அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. அனேகமாக விடுதலைப் பாரதத் தென்னகத்தின் முதல் நூற்றாண்டின் ஏக பெண் முதல்வர் ஜெயலலிதா மட்டுமேயாக அமைந்துவிடுதல் கூடும்.
அனேக வருத்தங்களில் ஒன்றான இதை பிரத்யேக வருத்தம் எனக் கூறமுடியுமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

Wednesday, July 27, 2011
ரவிச் சந்திரன்
நடிகர் ரவிச் சந்திரன் முதுமை மற்றும் நோய்கள் காரணமாக மரணமடைந்திருக்கிறார். சென்ற தலைமுறையினரை தனது செல்வாக்காலும் - ஸ்டைலாலும் ஓரளவு பாதித்தவர் என்றால் அது மிகையில்லை. ரவிச் சந்திரனுக்கு அழகான கண்கள். அதனால்தானோ என்னவோ அதே கண்கள் மற்றும் ஊமை விழிகள் என அவருக்குப் பேர் சொல்லும்படி அமைந்துவிட்டன.
ரவிச்சந்திரன் அறிமுகமானது ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில். ‘விஸ்வநாதன் வேலை வேணும்’ என அவர் போட்ட கெட்ட ஆட்டம் மறக்கமுடியாதது. புகழுச்சிக்குப் பின் கிணற்றில் போட்ட கல்லாக அவரது மௌனம் திரை வாழ்வில் அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது. எனினும் தனித்துவமான நடிகர்தான் அவர்.
அவர் சினிமாவில் தேர்வு பெற்றது பற்றி சுவாரசியமான செய்தி ஒன்று உண்டு. எவ்வளவு தூரம் அது மெய் எனத் தெரியவில்லை. அதாவது முதலாம் சந்திப்பில் ’நீங்கள் தேர்வு பெறவில்லை’ என ஸ்ரீதர் சொன்னதும் ‘’அப்படியா’’ என்று கேட்டுவிட்டு சாவதானமாக சிகரெட் பற்ற வைத்திருக்கிறார். அதுதான் டீலிங் முடிஞ்சு போச்சே இனி என்ன மரியாதைகள் வேண்டிக்கிடக்கு என்கிற தொனியில் அவர் சிகரெட் பற்ற வைத்த விதம் ஸ்ரீதருக்கு பிடித்துப்போக அந்தக் கணமே ஒப்பந்தமானார் ரவிச்சந்திரன். ஒருவேளை பொய்யாக இருந்தாலும் இந்தச் செய்தியை அமரர்களான ஸ்ரீதர் மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் ரசிக்கக் கூடும்.
மிக நீண்ட தசாப்தங்களில் ரஜினிகாந்த்தின் தந்தை வேடத்தில் ரவிச்சந்திரனை யாரும் யோசிக்கவில்லை என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)